உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:-

அனைவருக்கும் தங்களது கணினியை மிக வேகமாக்க ஆசை. இருப்பினும்அவர்கள் கணினியில் தேவை இல்லாத மென்பொருள்கள்,கோப்புகள்,நிரல்கள் என நிரப்பி தள்ளுவார்கள். கடைசியில் என் கணினி மிக மிக மெதுவாக வேலை செய்கிறது என்று குறை கூறுவார்கள்.சரி இதனையெல்லாம் கழற்றி கணினியை சுத்தம் செய்யலாம் என்று பார்ப்பார்கள் இறுதியில் அதுவும் செய்ய முடியாமல் தவிப்பார்கள். அவ்வாறு தவிப்பவர்கள் இந்த பதிவை படியுங்கள்:)


Revo Uninstaller:-
விண்டோசில் ஏற்கனவே Add/Remove program வசதி இருந்தும் சில நிரல்களை (program) நம்மால் முழுமையாக அகற்ற இயலாது. அந்நிலையில் இது போன்ற மென்பொருளை பயன்படுத்தவும். இந்த மென்பொருள் கழற்ற (uninstall) இயலாத மென்பொருள்கள்,நிரல்கள் ஆகியவற்றை எல்லாம் கழற்றி விடும்.அதனை தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்:-http://www.revouninstaller.com/

மீண்டும் நிறுவி கழற்றும் முறை (Reinstall to Uninstall):-
சில நேரங்களில் சில மென்பொருள்களை/நிரல்களை சரியாக கழற்ற இயலாது.அதற்கு காரணம் நிரல்களில் ஏற்பட்டுள்ள சிதைவு (corrupt). அதனால் நாம் அந்த மென்பொருள்/நிரலை திரும்ப நிறுவி (reinstall) கழற்ற முயல்வோம் ஆனால் அது "உன் கணினியை விட்டு போக மாட்டேன்" என்று அடம்பிடிக்கும்
.அப்போது இது போன்ற முறையை கையாளவும். முதலில் உங்களது கணினியை மறுதொடக்கம் (restart) செய்யுங்கள். பிறகு F8 விசையை (key) அழுத்திக் கொண்டே இருங்கள். அழுத்திய உடன் ஒரு திரை (screen) தோன்றும் அதில் Safe mode என்பதை சொடுக்கி பிறகு கழற்றி பாருங்கள்!

Rgistry cleaner:-
"தம்பி நீ சொன்ன இரெண்டுமே செய்து விட்டோம் ஆனா போவமாட்டங்குதே!" என்று கவலைப்படுவோர் இந்த மென்பொருளை பயன்படுத்துங்கள்
Ccleaner:- http://www.piriform.com/ccleaner
Auslogics:- http://www.auslogics.com/en/
இந்த இரெண்டும் நேரடியாக Program கோப்பில் (file) இருக்கின்ற கோப்பகத்தை (directory) அழித்துவிடும்.

தேவை இல்லாத கோப்புகளை அழித்தல்:-
என்ன உங்கள் தட்டு (hard disk) ஊசிப்போன வடை,பஜ்ஜி எல்லாம் வைத்திருக்கிறதா (அதாவது தேவையில்லாத cookies,temporary files, program installers, cookies, cached data, file fragments... ஆகியவற்றை எல்லாம் வைத்திருக்கிறதா:) அதனை அழிக்க மேலே உள்ள ccleaner மென்பொருளையே பயன்படுத்துங்கள்.

கணினியை பாதுகாப்பாக சுத்தப்படுத்த:-
நாம் எப்பொழுதும் கணினியை சுத்தப்படுத்தும் போது அதனை ஒரு தற்காப்பிற்காக சேகரிக்க மறந்துவிட்டு அனைத்தும் அழித்து விடுவோம். பிறகு அய்யய்யோ அனைத்தும் அழிந்து விட்டதே என கவலைப்படுவோம்:( கவலைபடாதீர் மக்களே அதற்கும் கைவசம் மென்பொருள் இருக்கிறது. இந்த மென்பொருள் பாதுகாப்பாக அனைத்தையும் ஒரு தற்காப்பிற்காக சேகரித்த (நீங்கள் குறிப்பிட்டது மட்டும்) பின்பு தான் அழிக்கும்.அதனால் இழந்ததை நீங்கள் எப்பொழுது வேண்டுமானால் மீட்டிக் கொள்ளலாம்.

Comodo system cleaner:- http://system-cleaner.comodo.com/

பெரிய கோப்புகளை அழித்தல்:-
நம் கணினியில் அதிகமாக மென்பொருள்கள் இருக்கிறதோ இல்லையோ! ஆனால் கண்டிப்பாக புதிதாக வெளிவந்த படங்கள்,விளையாட்டுக்கள்,ஒளித்தோற்றம்,பாட்டு ஆகியவையெல்லாம் நிரம்பி வழியும். அதனை எல்லாம் அழிக்க இந்த மென்பொருளை பயன்படுத்துங்கள்:- http://freshney.org/xinorbis/
இந்த மென்பொருள் உங்கள் தட்டை (hard disk) பரிசோதித்து (scan) எது அதிக அளவில் வைத்து இருக்கிறீர் எது குறைவாக வைத்து இருக்கிறீர் என்று அனைத்தையும் வரைபடம் (graph) போட்டு காண்பிக்கும்.இதனால் எந்த நிரல்,படம்... அதிகமாக இருக்கிறதோ அதனை நீங்கள் கண்டறிந்து அழித்துக் கொள்ளலாம்.

இதோடு இந்த பதிவு முடிந்து விட்டது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கருத்துரை இடவும்.

ஓர் அறிவிப்பு இந்த பதிவு நானாக எழுதவில்லை என் அண்ணன் கூறி எழுதியது. அதனால் இந்த சின்ன பையனுக்கு இவ்வளவு அறிவா என்றெல்லாம் நினைக்க வேண்டாம் மக்களே:)

தூய தமிழில் பதிவுகளை இடுவது எப்படி ?

இந்த பதிவில் நான் ஆங்கிலம் கலக்காத தூய தமிழில் எப்படி எழுதுவது என்று கூறப்போகிறேன். இது மிக எளிது (நீங்கள் நினைத்தால்:). இப்பொழுது அதனை எப்படி செய்வது என்று பார்ப்போம். நாம் பெரும்பாலும் சில பல ஆங்கில வார்த்தைகள் கலந்த பதிவுகளை இடுகிறோம். அது நம் தாய் மொழியை கொச்சைப்படுத்துவது போல் ஆகிவிடுகிறது. முக்கியமாக தொழில்நுட்ப பதிவர்கள் அதிகம் ஆங்கில வார்த்தைகளை கலந்தே பதிவுகளை இடுகிறார்கள். உதாரணத்திற்கு எனது சில பதிவையே எடுத்துக்கொள்ளுங்கள்.நான் முதன் முதலில் பதிவுகளை எழுத ஆரம்பிக்கும் பொழுது சில ஆங்கில வார்த்தைகள் கலந்து எழுத ஆரம்பித்தேன். எப்பவும் நான் பதிவுகளை எழுதி முடித்தவுடன் என் அண்ணனிடம் சரி பார்க்க சொல்வேன். அவ்வாறு சரி பார்க்கும் போது எனது அண்ணன் ஏன் இவ்வளவு ஆங்கில வார்த்தைகளை கலந்து எழுதுகிறாய் என்று கேட்டுவிட்டு எனக்கு ஒரு தமிழ் அகராதியை கொடுத்தார் (Tamil dictionary). சிறிது காலம் அதனை பயன்படுத்தி பதிவுகளை இட ஆரம்பித்தேன்.ஆனால் அதிலும் சில ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் கிடைக்கவே இல்லை. சரி இதில் கிடைக்காவிட்டால் என்ன நேரலையில் (online) இதற்கு என்றே சில தளங்கள் இருக்கின்றதே என்று கூகிளில் தேட ஆரம்பித்தேன். அப்பொழுது இரண்டு அற்புதமான  நேரலை தமிழ் அகராதி தளங்கள் கிடைத்தன. அதில் நமக்கு தேவையான அனைத்து வார்த்தைகளுக்கும் தமிழ் அர்த்தம் கிடைக்கிறது.எனவே இனிமேலாவது சில ஆங்கில வார்த்தைகள் கலக்காமல் பதிவுகளை  இட ஆரம்பிப்போம்.இப்பொழுது அந்த நேரலை அகராதி தளங்களின்  இணைப்பையும் மற்றும் என் அண்ணன் தேடித் தந்த தமிழ் அகராதியின் இணைப்பையும்  தருகிறேன்.
கவனனிக்க: இது போன்ற தூய தமிழில் எழுதும்போது சில கடினமான வார்த்தைகள் வரும். அந்த   கடினமான வார்த்தைகளை  ஒரு அடைப்புகுறியில்(அதன் பக்கத்திலேயே) அதற்கான ஆங்கில வார்த்தையை எழுதுங்கள். இதனால் வாசகர்கள் அதனை எளிதில் புரிந்துக் கொள்வர்.இதோ இது போன்று : இணையம் (internet), மேலேற்று (upload)..

நேரலை தமிழ் அகராதி தளங்கள் (online tamil dictionary) :-

1. http://www.tamildict.com/english.php?action=search&word=dictionary

2. http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp


தமிழ் அகராதி:-

http://www.scribd.com/doc/2421484/Tamil-Technical-Computer-Dictionary

கூகிள்:-
http://www.google.com/dictionary?langpair=ta|en

அகரமுதலி:- 
http://siththan.com/archives/1656

உங்களது அனைத்து இடுகைகளையும் ஒரே பக்கத்தில் காண வைப்பது எப்படி? - ப்ளாகர்

இந்த நிரல் பலகை நீங்கள்  இதுவரை எழுதிய அனைத்து இடுகைகளையும் ஒரே பக்கத்தில் காண வைக்க உதவும்.இதோ இது போல:- http://cp-in.blogspot.com/2009/08/blog-post_25.html .இதனை செய்தவர்   அபுபர்ஹான். சரி இப்பொழுது  இதனை எப்படி உங்களது வலைப்பூவில் நிறுவுவது என்று பார்ப்போம் (இதனை நிறுவுவது மிக சுலபம் கவலைப்படாதீர்).

முதலில் BLOGGER-->NEW POST-->EDIT HTML. அங்கு சென்றவுடன் கீழே உள்ளதை சேகரித்து ஒட்டுங்கள்

<script style="text/javascript" src="http://dl.dropbox.com/u/8936154/Table%20of%20contents.js"></script>
<script src="http://Your-Blog-url/feeds/posts/default?max-results=9999&alt=json-in-script&callback=loadtoc"></script>

http://Your-Blog-url/ என்ற  இடத்தில் உங்கள் வலைப்பூவின் முகவரியை குறிப்பிடுங்கள். அதனைக் குறிப்பிட்டவுடன் PUBLISH POST என்பதை  சொடுக்கினால் போதும்!(இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கருத்துரை இடவும்)

உங்களது வலைப்பூவை வேகமாகவும் அழகாகவும் ஆக்குவது எப்படி?

வலைப்பூவை வேகமாகவும்,அழகாகவும் ஆக்க அனைத்து பதிவர்களுக்கும் ஆசை உண்டு. ஆனால் அதனை எப்படி செய்வது என்று பல நபர்களுக்கு தெரியவில்லை.அதற்காகத்தான் இந்த பதிவை எழுதுகிறேன்.முதலில் பதிவர்கள் வாசகர்களை கவர ஒரு நல்ல பலகையை எடுக்க வேண்டும்.அந்த பலகை பார்க்க எளிமையாக இருக்க வேண்டும்.அவ்வாறு எடுக்க இங்கு செல்லுங்கள் அல்லது கீழே உள்ள தளங்களுக்குச்  செல்லுங்கள்:-


சரி நண்பா இத்தனை பலகை இருக்கிறதே அதில் எப்படி இந்த பலகை சிறந்த  பலகை என்று கண்டுபிடிப்பது  என்று குழப்பமாக இருக்கிறதா:)அதற்கு பதில் கீழே உள்ளது:-

பொதுவாக ப்ளாகர் பலகைகள் மேலே  உள்ள  வடிவங்களின் அடிப்படையில் தான் இருக்கும். இந்த வடிவங்களில் எது சிறந்த வடிவம் என்பதை தனியே நான் கட்டமிட்டு காட்டி உள்ளேன்.சரி இவ்வளவு வடிவங்கள் இருந்தும் ஏன் இவன் இந்த வடிவங்களை காட்டுகிறான் என்ற கேள்வி உங்கள் மனதில் எழும்.அதற்கான பதில்:- எப்பவுமே துணைப்பட்டை (sidebar) வலது பக்கம் இருந்தால் முதலில் நம்  பதிவு சீக்கிரமாக லோட் (load) ஆகும்.ஏன் என்றால் வாசகர்களுக்கு அதுதான் முக்கியம்.இதுவே அந்த துணைப்பட்டை  இடது பக்கத்தில் இருந்தால் முதலில் சைடுபாரில் இருக்கும் நிரல் பலகைகள் லோட் ஆகும் அதற்கு  பிறகு தான் நம் பதிவு லோட் ஆகும்.வாசகர்களுக்கு அது முக்கியம் இல்லை.இப்பொழுது பலகையின் கீழ் (footer) பகுதியை எப்படி தேர்ந்தெடுப்பது என்று பார்ப்போம்.பொதுவாக பலகையின்  கீழ் பகுதி கீழே உள்ளதைப் போன்று காணப்படும்.

அதிலும் சிறந்தது எது என்று நான் குறிப்பிட்டு இருக்கிறேன்.எப்பொழுதும் கீழ் பகுதியில் வாசகர்களுக்கு மிகவும் தேவையான நிரல் பலகையை வைக்க வேண்டும். உதாரணத்திற்கு: "இதை போன்ற நிரல் பலகைகள்", "சிறந்த பதிவுகள்", "உங்களைப் பற்றி", "சமீபத்திய கருத்துரைகள்"..
இப்பொழுது பலகைகளை எப்படி தேர்ந்தெடுப்பது என்று நாம் கற்றுக்கொண்டோம்.எனவே இப்பொழுது உங்கள் வலைப்பூவை எப்படி வேகமாக செயல்பட வைப்பது என்று பார்ப்போம்.உங்களது வலைப்பூவை வேகமாக செயல்பட வைக்க ஒரே வழி நிரல் எழுத்தினால் (script) ஆனா நிரல் பலகையை தவிர்ப்பது.ஒரு வலைப்பூவிற்கு ஏழு நிரல் பலகைகள் இருந்தால் போதுமானது.அதற்கு  மேல் வைக்க வேண்டாம்!
பதிவர்களுக்கு தேவையான ஐந்து நிரல் பலகையை நான் ஒரு பதிவில் எழுதி இருக்கிறேன். அதனைப் படிக்க இங்கு செல்லவும்.சில நேரங்களில் இந்த நிரல் பலகைகளே லோட் ஆக நேரம் ஆக்கும்.எனவே இது போன்ற நிரல் பலகையை பயன்படுத்தவும்.மேலும் முகப்பு  பகுதியில் ஐந்து அல்லது ஏழு இடுகைகள் வரைதான் போடா வேண்டும் அதற்கு மேல் போடாதீர்.அதிலும் சில பதிவுகள் பெரிய பதிவுகளாகவும் இருக்கு அது லோட் ஆக மிக நேரம் எடுக்கும்.அது போன்ற இடத்தில் இந்த முறையை கையாளுங்கள்.இந்த பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த பதிவிற்கு கட்டாயம் கருத்துரை இடுங்கள்:)

இப்பொழுது நாம் இணைப்பில் இயக்கு தளத்தை ( online os) வைத்துக்கொள்ளலாம்


GLIDE:-
இந்த இணைப்பு இயக்கு தளத்தில் (online OS) உங்களது கோப்புகள்(file),படங்கள்,பாடல்கள் என அனைத்தையும் வைத்துக்கொள்ளலாம்.அந்த இயக்கு தளம் (OS) மூலமே பாடல்களை கேட்டுக்கொள்ளாலாம்,படங்களை பார்த்துக் கொள்ளலாம் .இதனை உங்களது தொலைபேசி உலாவியிலும்(mobile browser) பயன்படுத்தலாம்.ஒரு இயக்கு தளத்திலேயே ஆறு உறுப்பினர்கள் வரை சேர்த்துக்கொள்ளலாம்,அதாவது உங்கள் நண்பர்கள்,சொத்தகாரர்கள் என ஆறு கணக்குகள் வரை உருவாக்கிக்கொள்ளலாம்.ஏன் குழந்தைகளுக்கு என்று ஒரு தனி கணக்கை உருவாக்கலாம்.இதிலேயே ஒளி பதிப்பி (photo editor), காட்சியளிப்பு (presentation), வர்ணவரைவு (painting) என அனைத்தையும் செய்துவிடலாம்.இந்த இயக்கு தளத்தை பயன்படுத்த கீழே உள்ள இணைப்பை(link) சொடுக்குங்கள்:-
அங்கு சென்று ஒரு கணக்கை உருவாக்கினால் போதுமானது.இது இலவசமாக 30GB வரை இடம் அளிக்கிறது.மேலும்  அதிக பரப்பை(space) வேண்டுவோர் பணத்தை செலுத்தி பெற்றுகொள்ளலாம்

இந்த இயக்கு தளத்தை உங்களது தொலைப்பேசியில் பயன்படுத்த இதனைச் சொடுக்கவும்.

கவனிக்க:-இந்த இயக்கு தளம் குறிப்பிட்ட தொலைபேசியில் மட்டும் தான் செயல்படும்.Android, BlackBerry, iPhone,windows mobile ஆகியவற்றில் மட்டுமே செயல்படும்.

குறிப்பு:-மேலும் சில இணைப்பு இயக்கு தளம் இணையத்தில் இருக்கின்றன.அதனைப் பற்றி நான் ஏற்கனவே எழுதி உள்ளேன்.அந்த பதிவைப் படிக்க இங்கு செல்லவும்.

Rapidshare,Megaupload போன்ற தளங்களில் time limit-ஐ தவிர்ப்பது எப்படி?


நாம் இப்பொழுதெல்லாம் அதிகம் தரவிறக்கம் செய்வது Rapidshare,Ziddu,Mediafire.....
போன்ற தளங்களில் இருந்து தான்.அவ்வாறு தரவிறக்கம் செய்யும் போது முப்பதோ அல்லது அறுவதோ சில நேரங்களில் நூறு நொடிகள் வரை காத்திருந்து தரவிறக்கம் செய்வோம்.அதுவும் ஒரு முறை மட்டும் தான் மேலும் சில கோப்புகளை தரவிறக்கம் செய்ய முப்பது நிமிடங்கள் கழித்தே தரவிறக்கம் செய்ய முடியம்.ஒரே நேரத்தில் இரு கோப்புகளையும் தரவிறக்கம் செய்ய முடியாது.இது போன்ற நிலையில் நாம் என்ன செய்வது என்று நமக்கே தெரியாது.சரி இதிலிருந்து தப்பித்து எப்படி தரவிறக்கம் செய்வது என்று பார்ப்போம்!

இதெற்கு எல்லாம் ஒரே வழி இதோ கீழே உள்ள மென்பொருளை தரவிறக்கம் செய்தால் போதுமானது.
http://www.brothersoft.com/jdownloader-171166.html

இந்த மென்பொருள் உங்களது தரவிறக்கத்தை மிக எளிமையாக ஆக்கிவிடும்.ஒரே நேரத்தில் எத்தனை கோப்புகளை வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்துக் கொள்ளாம்.rapidshare,megaupload,Ziddu.. என அனைத்து தளங்களிலும் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.இதனின் சிறப்பு அம்சம் நாம் ஒரே நேரத்தில் Rapidshare,Megaupload இணைப்பை(link) எல்லாம் சேகரித்து அதில் போட்டால் அந்த மென்பொருள் ஒவ்வொன்றாக நமக்கு தரவிறக்கம் செய்து தரும்.மேலும் இந்த மென்பொருளுக்கு firefox-ல் ஒரு கூட்டுறுபு (addon) இருக்கின்றது.அந்த கூட்டுறுபை இணைத்தால் நாம் நேரடியாகவே firefox-ல் இருந்துக்கொண்டே jdownloader மூலம் தரவிறக்கம் செய்துக் கொள்ளாம்.அந்த கூட்டுறுபை தரவிறக்கம் செய்ய இங்குச் செல்லவும்.

Twitter மற்றும் facebook பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு பயனுள்ள நிரல் பலகைகள்(Widget):-

Twitter "Follow me" widget:-

இந்த நிரல் பலகை(widget) மற்றவர்கள் உங்களை பின்தொடர உதவும். அது மட்டும் இல்லாமல் நீங்கள் உங்கள் சொடுக்கியை(mouse) மேலும் கீழுமாக ஆட்டும் போது இந்த நிரல் பலகையும் உங்களுடன் சேர்ந்தே நகரும்.இந்த நிரல் பலகையை பெற கிழே உள்ளதை சொடுக்கவும்

http://www.go2web20.net/twitterFollowBadge/

இதே போன்று twitter-ல் நிறைய நிரல் பலகைகள் உள்ளது அந்த நிரல் பலகைகள் எல்லாம் நம் ப்ளாகரே தருகிறது.அதனைப் பெற BLOGGER-->LAYOUT-->ADD WIDGET.


Facebook fan widget:-


இந்த நிரல் பலகை மற்றவர்கள் உங்களின் ரசிகர்கள் ஆக உதவும்.இந்த நிரல் பலகையை பெற கீழே உள்ள இணைப்பை(link) சொடுக்கவும்.
http://www.facebook.com/facebook-widgets/fanbox.php
இதே போன்று facebook-கிலும் நிறைய நிரல் பலகைகள் உள்ளது அதனைப் பெற இங்கு செல்லவும்.

ப்ளாகரில் பதிவின் சுருக்கத்தை காட்ட "Automatic Read more hack"

"மேலும் வாசிக்க" என்ற வசதியை ஏற்கனவே நமது tvs50 அவர்கள் எழுதியுள்ளார்.ஆனால் அந்த வசதியில் page break என்ற காரியங்கள் எல்லாம் செய்ய வேண்டிய இருக்கும்.சில நேரங்களில் அதனை செய்ய நாம் மறந்து விடுவோம்.அவ்வாறு மறப்பவர்களுக்கு இந்த பதிவு உதவும் என்று நினைக்கிறேன்:)
இந்த வசதி நாம் எழுதிய (இதற்கு முன்பு எழுதிய பதிவையும்) அனைத்து பதிவுகளையும் சுருக்கி விடும்.இதற்கு நேரடி மாதிரி எனது வலைப்பூவிலேயே உள்ளது

சரி இப்பொழுது இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்
குறிப்பு:இதனை செய்வதற்கு முன்பு உங்களது பலகையை ஒரு பாதுகாப்பிற்காக(backup) சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் BLOGGGER-->DASHBOARD-->LAYOUT-->EDIT HTML.அதன் பிறகு Expand Widget Templates ஐ மறக்காமல் சொடுக்கி விடவும்.பிறகு கீழே உள்ளதை தேடவும்(Ctrl+F)
</head>
இரெண்டாம் படி:-இதனை தேடிக் கண்டு பிடித்தவுடன் கீழே உள்ளதை சேகரித்து </head> என்ற குறீயீட்டுக்கு மேலே ஒட்டவும்:-

<script type='text/javascript'>var thumbnail_mode = &quot;no-float&quot; ;

summary_noimg = 500;

summary_img = 450;

img_thumb_height = 100;


img_thumb_width = 120;

</script>

<script src='http://www.mdn.fm/files/88199_fcbow/read-more_auto.js]read-more_auto.js' type='text/javascript'/>
நான் சிகப்பு மையினால் எழுதியதை நீங்கள் உங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளாம் .
summary_noimg = 500;- இந்த குறீயீடு ஒரு பதிவிற்கு படம்(thumbnail/image) இல்லாத நிலையில் சுருக்கத்தின் நீளம் ஐநூறாக இருக்கும்.

summary_img = 450;-இந்த குறீயீடு ஒரு பதிவிற்கு படம் இருக்கும் நிலையில் சுருக்கத்தின் நீளம் 450 என்ற நீளத்தில் இருக்கும்.

img_thumb_height = 100;-இந்த குறீயீடு அந்த படத்தின் உயரத்தை குறிக்கும்.


img_thumb_width = 120;-இந்த குறீயீடு படத்தின் அகலத்தை குறிக்கும்.

மூன்றாம் படி:-இதனை முடித்ததும் கீழே உள்ளதை தேடவும்

<data:post.body/>

தேடியவுடன் கீழே உள்ளதை சேகரித்து மேலே உள்ள குறீயீட்டுக்கு பதிலாக ஒட்டவும்:-


<b:if cond='data:blog.pageType == "item"'>

<data:post.body/><b:else/>

<b:if cond='data:blog.pageType == "static_page"'>

<data:post.body/><b:else/>

<div expr:id='"summary" + data:post.id'>

<data:post.body/>

</div><script type='text/javascript'>


createSummaryAndThumb("summary<data:post.id/>");</script>

<div style='clear: both;'/>

<span class='rmlink' style='float:right;padding-top:20px;'><a expr:href='data:post.url'> மேலும் படிக்க <data:post.title/> </a></span></b:if></b:if>

இந்த "மேலும் படிக்க" என்பதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.அவ்வளவுதான் இது முடிந்து விட்டது:)

க்ரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி- டி3 ராக்கெட் நாளை மாலை விண்ணில் ஏவப்படுகிறது.


பெங்களூர்: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட க்ரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி- டி3 ராக்கெட் நாளை மாலை விண்ணில் ஏவப்படுகிறது.

இதுகுறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய செய்தித் தொடர்பாளர் சதீஷ் நிருபர்களிடம் கூறுகையில்,

இப்போது ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் தான் க்ரையோஜெனிக் என்ஜின்களால் இயங்கும் அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்டுகள் உள்ளன.

ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தை நாம் பெற முடியாத அளவுக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டன. இதனால் இந்திய விஞ்ஞானிகளே கடந்த 18 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி க்ரையோஜெனிக் என்ஜினைத் தயாரித்தனர்.

இந்த என்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி- டி3 ராக்கெட் நாளை மாலை 4.27 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை 11.27 மணிக்குத் துவங்குகிறது.

சதீஷ் தவான் ராக்கெட் தளத்தின் 2-வது தளத்திலிருந்து ஏவப்படும் இந்த ராக்கெட்டில் 2,218 கிலோ எடை கொண்ட அதி நவீன தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோளான ஜி-சாட்4 விண்ணில் செலுத்தப்படுகிறது.

தகவல் தொடர்பு, கடல் வழித்தட தகவல்களுக்கு இந்த செயற்கைக்கோள் உதவும் என்றார்.

50 மீட்டர் உயரமும் 416 டன் எடையும் கொண்ட இந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட் பொறுத்தப்படவுள்ள க்ரையோஜெனிக் என்ஜின் தமிழகத்தில் உள்ள மகேந்திரகிரியில் உருவாக்கப்பட்டதாகும்.

அது என்ன க்ரையொஜெனிக் என்ஜின்?:

திட அல்லது திரவ எரிபொருள்களால் ஆன ராக்கெட்டுகளைத் தான் இதுவரை இந்தியா ஏவி வந்துள்ளது. இந்த ராக்கெட்டுகளால் செயற்கைக் கோள்களை சில நூறு கி.மீ. உயரம் வரை தான் ஏவ முடியும்.

இந்த செயற்கைக் கோள்களை ஆய்வுப் பணிக்குத் தான் பயன்படுத்த முடியுமே தவிர தகவல் தொடர்புக்கு பயன்படுத்த முடியாது.

பூமியில் இருந்து சுமார் 35,000 கி.மீ. உயரத்தில் செயற்கைக் கோளை ஏவினால் தான் அது தகவல் தொடர்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வளவு உயரத்தில் செயற்கைக் கோளை விண்ணில் ஏவ அதிக சக்தி வாய்ந்த ராக்கெட் தேவை. அதற்கு ராக்கெட்டில் பொறுத்த மிக சக்தி வாய்ந்த என்ஜின் தேவை.

இது தான் க்ரையோஜெனிக் என்ஜின். இது திரவ நிலையில் இருக்கும் ஹைட்ரஜன், ஆக்ஸிஜனை எரிபொருளாகக் கொணடு இயங்கும் என்ஜினாகும்.

இந்த என்ஜினை பல ஆண்டுகளுக்கு முன்பே ரஷ்யா நமக்கு வழங்க இருந்தது. ஆனால், இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியதால் அமெரிக்காவின் முயற்சியால் விதிக்கப்பட்ட தொழில்நுட்பத் தடைகள் இந்தியாவுக்கு இந்த தொழில்நுட்பம் கிடைப்பதை தடுத்துவிட்டது.

இதையடுத்து இதை இந்தியாவே உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இப்போது வெற்றி பெற்றுள்ளது.

இந்த என்ஜினில் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் -183 டிகிரி செல்சியசுக்கு குளிரூட்டப்பட்டு திரவ நிலையில் இருக்கும். அதே போல ஹைட்ரஜன் -253 டிகிரி குளிரூட்டப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்பமடைவதைத் தவிர்க்க இந்த ஆக்ஸிஜன்-ஹைட்ரஜன் திரட எரிபொருள கலவையை ராக்கெட் ஏவப்படும் சில மணி நேரங்களுக்கு முன் தான் நிரப்ப வேண்டும். ராக்கெட் கிளம்புவதற்கு 30 நொடிகள் இருக்கும் வரை எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்குமாம்.எனவே இந்த க்ரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி- டி3 ராக்கெட் எந்தவித பாதிப்பும் தடங்களும் இன்றி விண்ணில் ஏவ கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.இதுதான் நம்மால் செய்ய முடியும் காரியம்!

பாடல்களுக்கு வரி சொல்லும் மென்பொருள்!


இந்த மென்பொருள் ஒரு பாடலுக்கான வரிகளை தேடும் வேலையை மிச்சமாக்குகிறது . ஆங்கிலம்,ஹிந்தி போன்ற அனைத்து பாடலுக்குமே இந்த மென்பொருள் வரிகளை தேடித் தருகிறது.ஆனால் இது தமிழ் பாடல்களின் சில பாடலுக்கு மட்டுமே வரிகள் தேடித் தருகிறது.எனினும் இதனை கையாளுவது மிக எளிது.நாம் சாதரணமாக ஏதாவது ஒரு ஊடக இயக்கியின்(media player) மூலம் ஒரு பாட்டை பாட வைத்தால் இந்த மென்பொருள் அந்த பாடலுக்கான வரியை இணையத்தில் தேடிக் கண்டுப்பிடித்து அந்த ஊட இயக்கியின் கீழ் கொண்டு வந்து சேர்த்து விடும்.இதோ கீழே இருக்கும் படத்தை போன்று

மேலும் இந்த பாடல் வரிகளை நாம் சேமித்து வைத்துக் கொள்ளலாம்!இந்த மென்பொருள் கீழே உள்ள ஊடக இயக்கியை எல்லாம் ஆதரிக்கும்(support)

Winamp
Windows Media Player
Zune software
Foobar2000
Apple iTunes
RealPlayer
VLC Media Player
Songbird
Quintessential Player
Spotify
MediaMonkey
The KMPlayer
JetAudio
Yahoo! Music Engine
J. River Media Center
J. River Media Jukebox
XMPlay
AIMP2
Helium Music Manager
AlbumPlayer
Silverjuke
BSPlayer

தரவிறக்கம் செய்ய:-

விலாசப்பட்டையில்(address bar) உள்ள ப்ளாகரின் சின்னத்தை(icon) எடுத்து விட்டு நாம் விரும்பிய சின்னத்தை பதிய வைப்பது எப்படி?

அனைவருக்கும் தங்களது சின்னத்தை வலைப்பூவின்(blog) விலாசப்பட்டையில்(address bar) பதிய வைக்க ஆசை உண்டு. ஆனால் என்ன செய்வது அங்கு தான் ப்ளாகரின் சின்னம் இருக்கிறதே அதனை எப்படி நாம் எடுப்பது என்று யோசிக்கிறீர்களா? அதற்காகத்தான் இந்த பதிவு.
இதற்கு வேண்டுவன உங்களுக்கென்று ஒரு சின்னம் மட்டும் தான்!அந்த சின்னத்தை ஆங்கிலத்தில் Favicon என்று குறிப்பிடுவார்கள் அதற்கு அர்த்தம் விரும்பிய சின்னம்(Favourite icon) ஆகும். அது போகட்டும் இந்த சின்னத்தை எப்படி உருவாக்குவது என்று உங்களுக்குள் கேள்வி எழும் அதற்கு கிழே உள்ள இணைப்பை(link) ஒரு சொடுக்கு சொடுக்கினால் போதுமானது,
நேரடி மாதிரிக்கு எனது விலாசப்பட்டையை பார்க்கவும் அங்கு ப்ளாகரின் சின்னம் இல்லாமல் எனது சின்னமாகிய cp என்ற சின்னம் இருக்கும்.

http://www.favicon.cc/ - இந்த இணைப்பு ஒரு சின்னத்தை உருவாக்க.

http://www.html-kit.com/favicon/ - இந்த இணைப்பு உங்களது படங்கள் அல்லது வேறு படங்களை சின்னமாக மாற்ற.
http://www.genfavicon.com/ - இதுவும் அதே போன்று தான்.
http://www.favicongenerator.com/ - " "

நமக்கு இதெல்லாம் ஒத்து வராதுப்பா! என்று கூறுவோர் ஏற்கனவே தயார் செய்த(ready made) சின்னத்தை இங்கு எடுத்துக் கொள்ளுங்கள்

சரி இப்பொழுது சின்னத்தை உருவாக்கிய உடன் அந்த சின்னத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள தளங்களில் மேலேற்றுங்கள்(upload).

http://www.myimgs.net/index.php

http://photobucket.com/

மேலேற்றியவுடன் அது ஒரு முகவரியை தரும் அதனை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு ப்ளாகர் கணக்கிற்கு செல்லவும்.அங்கு சென்று, LAYOUT-->EDIT HTML ‍ன் கீழ் இதனை தேடவும்:
</head>


இதனைத் தேடி கண்டு பிடித்தவுடன் </head> என்ற குறியீடுக்கு மேல் கீழே உள்ளதை சேகரித்து ஒட்டவும்.


<link href='YOUR-FAVICON-URL' rel='shortcut icon'/>
<link href='YOUR-FAVICON-URL' rel='icon'/>

YOUR-FAVICON-URL என்ற இடத்தில் மேலேற்றிய முகவரியை குறிப்பிடவும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும்!

நிரல்பலகைகளை(widgets) வலைப்பூவின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் காண வைப்பது எப்படி?

நாம் ஒரு நிரல்பலகையை(widget) வலைப்பூவில் நிறுவினால் அது வலைப்பூவின் எல்லா பக்கங்களிலும் காட்சி அளிக்கும்.ஆனால் சில நிரல்பலகைகள் இந்தந்த பக்கங்களில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நம் மனதில் தோன்றும்.அதற்காகத்தான் இந்த சிறிய பதிவை எழுதுகிறேன்:)
இதற்கு முதலில் நீங்கள் எந்த நிரல்பலகையை குறிப்பிட்ட/முதற் பக்கத்தில் மட்டும் காட்ட விரும்புகிறீர்களோ அந்த நிரல் பலகைக்கு ஒரு பெயரை சூட்டுங்கள்(ஒரே பெயரில் பல நிரல் பலகைகளை வைக்காதீர்).
பின்பு "LAYOUT--->EDIT HTML" செல்லவும்.அங்கு சென்றவுடன் "Expand Widget Templates" என்றதை திருத்தவும்/சொடுக்கவும்.இப்பொழுது நான் சொன்னவாறு நீங்கள் நிரல்பலகைக்கு சூட்டிய பெயரை தேடவும்(Ctrl + F).
நீங்கள் தேடியது கீழ் கண்டவாறு இருக்கும்:-


<b:widget id='HTML3' locked='false' title='நிரல் பலகையின் பெயர்' type='HTML'>
<b:includable id='main'>
<!-- only display title if it's non-empty -->
<b:if cond='data:title != &quot;&quot;'>
<h2 class='title'><data:title/></h2>
</b:if>
<div class='widget-content'>
<data:content/>
</div>

<b:include name='quickedit'/>
</b:includable>
</b:widget>

இதனை நாம் இப்பொழுது சிறிது திருத்தம் செய்ய வேண்டும கீழே இருப்பது போன்று.
இந்த திருத்தம் நிரல்பலகையை முதற்பக்கம் மட்டும் காண வைக்க:-
<b:widget id='HTML3' locked='false' title='Widget Title' type='HTML'>
<b:includable id='main'>
<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
<!-- only display title if it's non-empty -->
<b:if cond='data:title != &quot;&quot;'>
<h2 class='title'><data:title/></h2>
</b:if>
<div class='widget-content'>
<data:content/>
</div>

<b:include name='quickedit'/>
</b:if>
</b:includable>
</b:widget>
நான் சிகப்பு மையினால் குறிப்பிட்டதை மட்டும் சேர்க்க வேண்டும்!

இந்த திருத்தம் குறிப்பிட் பக்கத்தில் மட்டும் காண வைத்தல்:-
<b:widget id='HTML3' locked='false' title='Widget Title' type='HTML'>
<b:includable id='main'>
<b:if cond='data:blog.url == "SPECIFIC_BLOG_POST_URL"'>
<!-- only display title if it's non-empty -->
<b:if cond='data:title != &quot;&quot;'>
<h2 class='title'><data:title/></h2>
</b:if>
<div class='widget-content'>
<data:content/>
</div>

<b:include name='quickedit'/>
</b:if>
</b:includable>
</b:widget>

" SPECIFIC_BLOG_POST_URL" என்ற இடத்தில் நிரல் பலகையை காட்ட விரும்பும் பக்கத்தின் முகவரியைக் குறிப்பிடவும்.

இந்த திருத்தம் முதற் பக்கத்தைத் தவிர மற்ற பக்கத்தில் காண வைத்தல்:-

<b:widget id='HTML3' locked='false' title='Widget Title' type='HTML'>
<b:includable id='main'>
<b:if cond='data:blog.pageType == "item"'>
<!-- only display title if it's non-empty -->
<b:if cond='data:title != &quot;&quot;'>
<h2 class='title'><data:title/></h2>
</b:if>
<div class='widget-content'>
<data:content/>
</div>

<b:include name='quickedit'/>
</b:if>
</b:includable>
</b:widget>

இந்த திருத்தம் நிரல் பலகையை குறிப்பிட்ட பக்கத்தில் மட்டும் மறைத்து மற்ற பக்கத்தில் காண வைத்தல்:-

<b:widget id='HTML3' locked='false' title='Widget Title' type='HTML'>
<b:includable id='main'>
<b:if cond='data:blog.url != "SPECIFIC_BLOG_POST_URL"'>
<!-- only display title if it's non-empty -->
<b:if cond='data:title != &quot;&quot;'>
<h2 class='title'><data:title/></h2>
</b:if>
<div class='widget-content'>
<data:content/>
</div>

<b:include name='quickedit'/>
</b:if>
</b:includable>
</b:widget>
இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்!

நான் இப்பொழுது ஒரு சுதந்திரப் பறவை!

ஹே!ஹே! என்  பொதுத் தேர்வுகள் அனைத்தும் முடிந்தது.இப்பொழுது என் வேலையெல்லாம் சாப்பிட்டு தூங்குவது மட்டுமே.ஆனால் எனக்கு என்ன மதிப்பெண்கள் வருமோ! என்று பயமாக இருக்கின்றது.எனவே அனைவரும் நான் நல்ல மதிப்பெண்களை வாங்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்:)