தூய தமிழில் பதிவுகளை இடுவது எப்படி ?

இந்த பதிவில் நான் ஆங்கிலம் கலக்காத தூய தமிழில் எப்படி எழுதுவது என்று கூறப்போகிறேன். இது மிக எளிது (நீங்கள் நினைத்தால்:). இப்பொழுது அதனை எப்படி செய்வது என்று பார்ப்போம். நாம் பெரும்பாலும் சில பல ஆங்கில வார்த்தைகள் கலந்த பதிவுகளை இடுகிறோம். அது நம் தாய் மொழியை கொச்சைப்படுத்துவது போல் ஆகிவிடுகிறது. முக்கியமாக தொழில்நுட்ப பதிவர்கள் அதிகம் ஆங்கில வார்த்தைகளை கலந்தே பதிவுகளை இடுகிறார்கள். உதாரணத்திற்கு எனது சில பதிவையே எடுத்துக்கொள்ளுங்கள்.நான் முதன் முதலில் பதிவுகளை எழுத ஆரம்பிக்கும் பொழுது சில ஆங்கில வார்த்தைகள் கலந்து எழுத ஆரம்பித்தேன். எப்பவும் நான் பதிவுகளை எழுதி முடித்தவுடன் என் அண்ணனிடம் சரி பார்க்க சொல்வேன். அவ்வாறு சரி பார்க்கும் போது எனது அண்ணன் ஏன் இவ்வளவு ஆங்கில வார்த்தைகளை கலந்து எழுதுகிறாய் என்று கேட்டுவிட்டு எனக்கு ஒரு தமிழ் அகராதியை கொடுத்தார் (Tamil dictionary). சிறிது காலம் அதனை பயன்படுத்தி பதிவுகளை இட ஆரம்பித்தேன்.ஆனால் அதிலும் சில ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் கிடைக்கவே இல்லை. சரி இதில் கிடைக்காவிட்டால் என்ன நேரலையில் (online) இதற்கு என்றே சில தளங்கள் இருக்கின்றதே என்று கூகிளில் தேட ஆரம்பித்தேன். அப்பொழுது இரண்டு அற்புதமான  நேரலை தமிழ் அகராதி தளங்கள் கிடைத்தன. அதில் நமக்கு தேவையான அனைத்து வார்த்தைகளுக்கும் தமிழ் அர்த்தம் கிடைக்கிறது.எனவே இனிமேலாவது சில ஆங்கில வார்த்தைகள் கலக்காமல் பதிவுகளை  இட ஆரம்பிப்போம்.இப்பொழுது அந்த நேரலை அகராதி தளங்களின்  இணைப்பையும் மற்றும் என் அண்ணன் தேடித் தந்த தமிழ் அகராதியின் இணைப்பையும்  தருகிறேன்.
கவனனிக்க: இது போன்ற தூய தமிழில் எழுதும்போது சில கடினமான வார்த்தைகள் வரும். அந்த   கடினமான வார்த்தைகளை  ஒரு அடைப்புகுறியில்(அதன் பக்கத்திலேயே) அதற்கான ஆங்கில வார்த்தையை எழுதுங்கள். இதனால் வாசகர்கள் அதனை எளிதில் புரிந்துக் கொள்வர்.இதோ இது போன்று : இணையம் (internet), மேலேற்று (upload)..

நேரலை தமிழ் அகராதி தளங்கள் (online tamil dictionary) :-

1. http://www.tamildict.com/english.php?action=search&word=dictionary

2. http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp


தமிழ் அகராதி:-

http://www.scribd.com/doc/2421484/Tamil-Technical-Computer-Dictionary

கூகிள்:-
http://www.google.com/dictionary?langpair=ta|en

அகரமுதலி:- 
http://siththan.com/archives/1656

16 கருத்துரைகள்:

நண்பரே,
முக்கியமான கூகிள் அகராதியையும் இணைத்துக்கொள்ளுங்கள்
http://www.google.com/

இணைத்து விட்டேன் நண்பரே!உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

please add tamilish vote button. i wanted to vote but cannot find.

எனக்குத் தெரிந்த சில தமிழ்ச் சொற்களைப்(ஆங்கிலத்துக்கு இணையான) பட்டியலிட்டுள்ளேன். உதவியாக இருக்குமென்ற எண்ணத்துடன்………

காணுங்கள் http://siththan.com/archives/1656

உங்களின் அகரமுதலிலையும் இணைத்து விட்டேன் திரு.ஞானவெட்டியான் அவர்களே.

"அகரமுதலியையும்" என்று வரவேண்டும் அன்பரே!

மன்னிக்கவும் எழுத்துப்பிழை:)

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

தமிழ் வாழ்க....தமிழன் வாழ்க

http://yournight-srdhrn.blogspot.com/

(தமிழ் தானாக வளரும்!
-கவிஞர் வாலி.)

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ஸ்ரீ.

sir,i request you for a software to convert a tamil document written in handwritten form to typedtamil.please consider.it would be immensly be helpfull to persons like me to scan a document and modify to suit to needs. sorry could not post in tamil.

வணக்கம். சிறப்பான பதிவு. நீங்கள் சின்னப் பையனா, பெரிய பையனா என்று எமக்குத் தெரியாது. ஆனால் பெரிய பெரிய செய்திகளை பகிர்வதனால் உறுதியாக சொல்கிறோம், நீங்கள் அறிவில் பெரியவர் என்று. சிறு குறை. சுட்டிக்காட்டலாமா? நன்றி. உங்கள் பதிவில் பயன்படுத்திய சொற்களில் ஒரு சில சொற்கள் தமிழ்தானா? என்று சிறு ஐயம். அற்புதம் என்ற சொல்லுக்கு சிறப்பு, வியப்பு சொல்லலாமா? அதுபோல் அர்த்தம் என்பற்கு பொருள் என்று சொல்லமா? சுட்டிக்காட்டுவதில் உங்களுக்கு ஒன்றும் வருத்தம் இல்லையே? உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள். நாம் ஒன்றும் தமிழ் புலவர் கிடையாது. எம்மிடமும் மிகப்பெரிய குறையுள்ளது.

@கோவை செய்திகள்
நண்பரே நீங்கள் சொன்னதை நான் முயற்சி செய்து பார்க்கிரேன்.இதனால் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை!உங்களின் கருத்துக்கு நன்றி :)

நன்றி பாஸ்

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...