திரைப்படங்களுக்கு துணை மொழியை சேர்ப்பது எப்படி?

How to add subtitles for movies?


பொதுவாக நாம் ஆங்கிலப் படங்களை பார்க்க ஆர்வம் காட்டுவது உண்டு. ஆனால் சில நேரங்களில் அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றே புரியாது! அதற்கு உதவியாக அந்த படத்திற்கு துணை மொழி ஒன்று இருந்தால் நமக்கு நன்றாக புரியும். சரி நண்பா இதெல்லாம் எப்படி அந்த படத்திற்கு கொண்டு வருவது? என்று யோசிப்பீர்கள் அதற்கான விடை இதோ, கூகிளில் சென்று இவ்வாறு தட்டச்சவும்
movie name english subtitle srt
இதில் movie name என்ற இடத்தில் அந்த படத்தின் பெயரை குறிப்பிடுங்கள். இதில் srt என்பது அந்த கோப்பின் வடிவம் (format). பிறகு அதனை தரவிறக்கம் செய்து உங்களது கணினியில் வைக்கவும். VLC ஊடக இயக்கியை (media player) பயன்படுத்தி படத்தை பார்க்கவும் அதே சமயத்தில் அந்த துணை மொழி கோப்பை இழுத்து ஊடக இயக்கியில் போடா மறந்து விடாதீர்!! மற்றும் நீங்கள் இதற்கு minilyrics மென்பொருளையும் பயன்படுத்தலாம். சில நேரங்களில் நீங்கள் தரவிறக்கம் செய்த துனைமொழியானது  படத்திற்கு சம்பந்தம் இல்லமால் ஓடிக்கொண்டிருக்கும்   அதனால் நீங்கள் பார்க்கும்  படத்தின் கோப்புப்  பெயர் எப்படி இருக்கிறதோ அதே போன்று கூகளில் தட்டச்சி தேட வேண்டும். தரவிறக்கம் செய்த அந்த கோப்பை படத்தின் பக்கத்திலயே ஒட்டவும் மறந்து விடாதீர்!

துணை மொழியை தரவிறக்கம் செய்ய சில தளங்கள்:-

3 கருத்துரைகள்:

ஏம்ப்பா இத கொஞ்சம் புரியிற மாறி சாதாரணமா நாம பேசுற ஸ்டைல்ல போடலாம்ல என் சுத்த தமிழ்ல போட்டு புரியாம கொளம்ப வைக்கிறீங்க பரவால்ல நல்ல உதவியான பதிவு வாழ்க நலம்

நண்பரே இவ்வாறு சுத்தத் தமிழில் எழுதினால் தான் நீங்கள் சில ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் தெரிந்துக்கொள்ள முடியும். மேலும் நமது தமிழை வளர்க்கலாம்!

அருமையான பதில் சின்னப்பையன். கடினமாகவே தோன்றினாலும் இப்படி எழுதுவதுதான் நமக்கு மட்டுமல்ல,வருங்காலத்து தமிழ் மறந்த தமிழர்களுக்கு உதவியாக இருக்கும்.

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...