கூகிள் தேடல்:-

கூகுள் என்றால் அது வெறும் தகவலை மட்டும் தேடித் தரும் இயந்திரம் என்று நினைக்கிறோம். ஆனால் அது நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறும், ஒரு மேதை போல. அவ்வாறு நீங்கள் கேள்விகள் கேட்க ஒரு சில முறைகள் இருக்கிறது அதனைப் பற்றி இங்கு பார்ப்போம்.

முதலில் ஓர் இடத்திற்கான பருவநிலையை எப்படி கண்டறிவது?

இதற்கு நீங்கள் கூகளில் தேடலில் "weather trichy" என்று தட்டச்ச வேண்டும். "trichy" என்ற இடத்தில் நீங்கள் காண விரும்பும் இடத்தின் பருவநிலையை குறிக்க வேண்டும்.


ஓர் இடத்தை தேட:-
நாம் கூகிளில் சுலபமாக ஓர் இடத்தை தேடிக் கண்டுபிடித்து விடலாம். உதாரணத்திற்கு கூகிளில் "where is kanyakumari" என்று தேடுங்கள் கன்னியாகுமரி எங்கு அமைந்து உள்ளது என்று தெரியும்.


நேரத்தை அறிய:-கூகிளில் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் நேரத்தை அறியலாம். உதாரணத்திற்கு "time new york" தட்டச்சினால் நியூ யார்க் நகரத்தின் நேரத்தை அறியலாம்.

மொழி பெயர்த்தல்:-
ஓர் வார்த்தையை ஒரு மொழியில் இருந்தது இன்னொரு மொழியில் மொழி பெயர்க்க இவ்வாறு தட்டச்சவும் "translate home in hindi". இதில் நான் home என்ற ஆங்கில வார்த்தை இந்தி மொழியில் மொழி பெயர்க்க தேடி உள்ளேன். அதனின் முடிவு இவ்வாறு இருக்கும்:-
இதில் நீங்கள் தமிழில் மொழி பெயர்க்க முடியாது. இருப்பினும் இதற்கு என்று சில தளங்கள் இருக்கிறது அங்கு சென்று நீங்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துக் கொள்ளலாம். அதனை நான் இங்கு பட்டியலிட்டு உள்ளேன் http://cp-in.blogspot.com/2010/04/blog-post_24.html
திரை அரங்குகளின் திரைப்படப் பட்டியலை அறிய:-
உங்கள் நகரத்தில் திரையிடும் திரைப்படப் பட்டியலை அறிய கூகிளில் movie <உங்கள் நகரத்தின் பெயர்> <உங்களின் நாடு> அதாவது இவ்வாறு தட்டச்ச வேண்டும் "movie madurai india" அதனின் முடிவுகள் கீழே உள்ள படத்தை போன்று இருக்கும்


விவரங்கள் அறிய:-
நீங்கள் ஓர் வார்த்தைக்கான விவரங்கள் அறிய கூகுள் மிக மிக உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு கூகிளில் "define: physics" என்று தேடினால் பெளதிகம் பற்றிய விவரங்கள் அனைத்தும் வரும். இதில் "define :" என்ற வார்த்தை இருந்தால் மட்டுமே விவரங்களை அறிய முடியும்.

கோடிட்ட இடத்தை நிரப்புக:-
நாம் சிறு வயதில் இருந்து இதனை அந்தர் பல்டி அடித்து மனப்பாடம் செய்வோம் ஆனால் தேர்வில் மறந்து விடுவோம். ஆனால் கூகுள் இதற்கும் பதில் அளிக்கும். உதாரணத்திற்கு "the capital of malaysia is * " என்று தட்டச்சினால் கூகுள் இதற்கான விடையை கூறிவிடும். இதில் இந்த * குறியீடு இருந்தால் மட்டுமே கூகுள் விடை சொல்லும்.


உங்களுடைய தேவையற்ற இணைய கணக்குகளை நீக்குவது எப்படி?

நாம் இணையத்தில் இருக்கும் போது சில தேவையில்லாத கணக்குகளை (account) உருவாக்கி,பிறகு அதனை நீக்க முயல்வோம். ஆனால் கடைசிவரை அதனை சுலபமாக நீக்க இயலாது. அந்த சிக்கலை போக்கவே ஒரு இணையதளம் இருக்கிறது. அங்கு செல்ல கீழே உள்ளதை சொடுக்கவும்:-


இந்த தளத்தின் மூலம் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தளபட்டியலில் உள்ள உங்களது தேவையற்ற அனைத்து கணக்குகளையும் நீக்கலாம்:-
http://deleteyouraccount.com/sites/list/all
இதில் என்ன சிறப்பு என்றால் கணக்குளை அழிப்பது மட்டும் இல்லாமல் அழிந்த கணக்குகளை எவ்வாறு மீட்பது எனவும் இந்த தளம் எடுத்துரைக்கிறது!(ரொம்ப ரொம்ப நல்லவனா இருக்குது:)

உங்களது தொடக்கப் பட்டியலை (start menu) வேகமாக்குவது எப்படி?

என் முதல் நிகழ்படம் பயிற்சி (video tutorial) இது. இதில் உங்களின் கணினியில் உள்ள தொடக்கப் பட்டியலை (start menu) எப்படி வேகமாக்குவது? என்று கூறியுள்ளேன். இந்த நிகழ்படம் பயிற்சி அனைத்தும் இரண்டு நிமிடம் மட்டுமே திரையாகும் அதுவும் தமிழில்:)

தமிழில்:-you tube இணைப்பு :- http://www.youtube.com/watch?v=bV4eDuCa1F0
தரவிறக்கம் செய்ய :- http://www.box.net/shared/t7qdk1jm33
உங்களது தளத்தில் ஒளிபரப்ப:-
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/bV4eDuCa1F0&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/bV4eDuCa1F0&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>
ஆங்கிலத்தில்:-You tube இணைப்பு:- http://www.youtube.com/watch?v=OlfZuiGcXTo
தரவிறக்கம் செய்ய :- http://www.box.net/shared/oa06qbz5qx
உங்களது தளத்தில் ஒளிபரப்ப :-

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/OlfZuiGcXTo&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/OlfZuiGcXTo&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

நமது தளத்தை கூகிளில் சிறந்து விளங்க வைக்க:-

நாம் என்ன தான் தமிழிஷிலும்,தமிழ் 10-னிலும் சிறந்து விளங்கினாலும் கூகிள் மற்றும் இதர தேடலில் சிறந்து விளங்குவது கடினமே. அதற்கு காரணம் நாம் சரியாக தேடுபொறிகளை புரிந்துக்கொள்ளாததுதான். முதலில் நாம் நம் முடைய தளத்தை google, yahoo , bing போன்ற தேடுபொறிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு முன் நாம் தேடுபொறி உகப்பாக்கம் அதாவது SEO என்றால் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். அதைப் பற்றி தெரிந்துக்கொள்ள இங்கு சொடுக்கவும். உங்கள் தளத்தை கூகிள் மற்றும் சில தளங்களிடத்தில் ஒப்படைக்க கீழே உள்ளதை சொடுக்கவும்:-
http://www.addme.com/submission/free-submission-start.php
மேலே உள்ள தளத்தில் யாஹூ,பிங் ஆகிய தேடுபொறிகளிடம் ஒப்படைக்க முடியாது அதனால் நீங்கள் உங்கள் தளத்தை தனியே சென்று இணைத்துக்கொள்ளுங்கள்.
இந்த இணைப்பு உங்களது தளத்தை யஹூவிடும் ஒப்படைக்க உதவும்.
இந்த இணைப்பு பிங் தேடுபொறியிடம் ஒப்படைக்க பயன்படும்.

இவ்வாறு ஒப்படைத்த பிறகு "அப்பாடி! முன்னணி தேடுபொறிகளிடம் ஒப்படைத்து விட்டோம்" என்றெல்லாம் நினைக்க வேண்டாம். ஏன் என்றால் இப்பொழுதுதான் உண்மையான வேலையை ஆரம்பிக்க போகிறோம்:)சரி இப்பொழுது கீழே உள்ள meta tag குறியீடுகளை சேகரிக்கவும்.

<meta name="title" content="Title" />
<meta name="description" content="Description" />
<meta name="keywords" content="keywords" />
<meta name="author" content="Author" />
<meta name="owner" content="Owner" />
<meta name="copyright" content="(c) 2010" />

பின்பு Blogger --> Layout or Design --> Edit HTML -லில்
<b:include data='blog' name='all-head-content'/>
என்ற குறியீட்டுக்கு கீழ் ஓட்ட வேண்டும்.
கவனிக்க:- நான் சிகப்பு மையினால் சுட்டிக் காட்டியதை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளுங்கள். அதாவது "Title" என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவின் தலைப்பை எழுத வேண்டும். "Description" என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவைப் பற்றி இரண்டு வரிகளில் ஒரு சிறிய விவரிப்பை (description) எழுத வேண்டும் மற்றவை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.
இதனால் என்ன பயன் என்ற கேள்வி உங்களிடத்தில் எழும். அதற்கான விடையை அறிய கீழே உள்ள படத்தை பாருங்கள்

இந்த படத்தில் என் வலைப் பூவின் தலைப்பு அழகான விவரிப்புடன் (description) கூகிளில் தெரிகிறது. இதற்கு எல்லாம் காரணம் இந்த meta குறியீடுகளின் இணைப்பே ஆகும்.

இதன் பிறகும் நாம் நிறைய செய்ய வேண்டும். அது என்னவென்றால் நாம் இப்பொழுது எழுதும் அனைத்து பதிவுகளிலும் குறிச்சொற்களை (keywords) சேர்ப்பதுதான். இதனால் நாம் அனைத்து தேடுபொறிகளிடமும் சிறந்து விளங்கலாம். அதற்கு செய்ய வேண்டுவன, நம்முடைய பதிவின் முகவரியை பதிவுக்கு ஏற்றவாறு மாற்றுதல். நாம் தமிழ் பதிவர்கள் அதனால் நம் பதிவின் முகவரிகள் அனைத்தும் இது போன்று காட்சி அளிக்கும் http://cp-in.blogspot.com/2010/04/blog-post_21.html.
இந்த முகவரியில் ஏதேனும் பதிவுக்கு ஏற்ற சில குறிச்சொற்கள் இருக்கிறதா? இல்லை. அதனால் நாம் எப்பொழுதும் பதிவுகளை இடும் போது ஆங்கிலத்தில் தலைப்பு மட்டும் எழுதி பிரசுரப்படுத்த (publish) வேண்டும். பிரசுரப்படுத்திய அடுத்த நிமிடமே அந்த பதிவின் தலைப்பை தமிழில் மாற்றி விட வேண்டும் இதனால் அந்த பதிவின் முகவரி பதிவிற்கு ஏற்ற முகவரியாக மாறிவிடும் (எப்பூடி!).இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கருத்துரை மூலம் தெரிவிக்கவும் (சந்தேகம் இல்லை என்றாலும் தெரியப்படுத்தவும்:)