தரமான புதிய பாடல்களை (320kbps) தரவிறக்கம் செய்வது எப்படி?

How to download high quality songs?

புதிய பாடல்களை தரமான இசையில் தரவிறக்கம் செய்வது மிகவும் எளிது. ஆனால் அது கூகுளில் தேடுவதை பொறுத்தே அமையும். உதாரணத்திற்கு நீங்கள் நான் மகான் அல்ல பாடல்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால் இவ்வாறு தட்டச்ச வேண்டும் naan mahaan alla 320kbps vbr இவ்வாறு தட்டச்சினால் தான் நீங்கள் தரமான இசையை தரவிறக்க செய்ய முடியும். அதாவது முதலில் நீங்கள் தேட விரும்பும் பாடலின் படம் பெயர் அல்லது வெறும் பாடலின் பெயர் பிறகு 320kbps கடைசியில் vbr அவ்வளவுதான்.

சரி, இப்பொழுது அந்த 320kbps என்றால் என்ன? என்பதை பார்க்கலாம்:-
Kbps என்றால் kilo bits per second என்று அர்த்தம். அதாவது ஒரு பாட்டை தரம் பிரிப்பது ஆகும். உதாரணத்திற்கு பெரும்பாலான பாட்டுக்கள் 128kbps அளவில் இருக்கும். அவை யாவும் 4 அல்லது 5mb கணக்கில் காணப்படும். இதுவே அது 320kbps அளவில் இருந்தால் அது எட்டு முதல் பதினைந்து mb-யில் காணப்படும்.ஆனால் ஒரு பாட்டுக்கு இவ்வளவு இடமா? என்ற கேள்வி உங்களிடத்தில் எழும் அதனால் தான் நான் உங்களை கூகிளில் vbr (various bit rate) என்று தேடச்சொன்னேன்! இவ்வாறு தேடுவதால் ஒரு பாடல் ஆறு mb-யில் முடிவடைந்துவிடும்.

மேலும் நீங்கள் கீழ்கண்ட தளங்களில் கூட தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்:-
Www.djluv.in (ஹிந்தி பாடலுக்கு)
www.tamilwire.com (தமிழ் பாடலுக்கு)
Www.techsatish.com (தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி பாடலுக்கு)
Www.aimini.net (ஆங்கில பாடலுக்கு)

ப்ளாகரில் நேரடி தரவிறக்கம் செய்வது எப்படி? மற்றும் ஓர் இலவச ப்ளாகர் பலகை:-

Direct download in blogger!


 
அது என்ன நேரடி தரவிறக்கம்?
நாம் எப்பொழுதும் ஒரு கோப்பை அல்லது ஒரு பாட்டை  மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள box.net,Zshare என பல தளங்களில் சென்று நாம்  பகிர விரும்பும் கோப்புகளை மேலேற்றி பிறகு அதன் தரவிறக்க முகவரியை சேகரித்து அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்வோம். பிறகு அந்த கோப்பினை ஒருவர் தரவிறக்கம் செய்ய அந்த தளத்திற்கு சென்று முப்பது அல்லது அறுவது நிமிடங்கள் வரை காத்திருந்து தரவிறக்கம் செய்ய வேண்டும். அதனால் வாசகர்கள் தரவிறக்கம் செய்யவே சோம்பேறித்தனம் படுவார்கள். இதுவே அந்த கோப்பு ஒரே சொடுக்கில் உங்களது வலைப்பூவில் இருந்துக்கொண்டே தரவிறக்கம் செய்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். அதற்காகத்தான் இந்த பதிவு.

முதல் படி :-  இதற்கு நீங்கள்  ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு அதனை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும்.
                                                தரவிறக்கம் செய்ய:- https://www.dropbox.com/


இரெண்டாம் படி :-  அவ்வாறு நிறுவும் போது ஒரு கணக்கை உருவாக்குமாறு கேட்கும். நீங்களும் அதற்கு சரி என்று சொல்லி உருவாக்க வேண்டும்.

விளக்கம்:- அட! என்னடா இவன் இதை உருவாக்கணும் இதை தரவிறக்கம் செய்யணும் என்று தொல்லைக்  கொடுக்கிறான் என்று நீங்கள் மனதில் திட்டுவது எனக்கு கேட்கிறது. அதனால் நான் விசயத்திற்கு வருகிறேன்.
இந்த மென்பொருள் உங்களுக்கு மிக மிக பயன்படும். ஏன் என்றால் இதில் நீங்கள் பகிர விரும்பும் கோப்பையை உங்களது கணினியின் மூலமாக இணையத்திற்கு மேலேற்றலாம். இதற்கு நீங்கள் அந்த தளத்திற்கு தனியே சென்று மேலேற்ற அவசியம் இல்லை மற்றும் இது 2GB வரை இடம் அளிக்கிறது அதுவும் நேரடி தரவிறக்க முகவரியோடு (புரியவில்லை என்றால் படிப்பத்தை தொடரவும் அப்பொழுதான் புரியும்).

மூன்றாம் படி :-  கணக்கை உருவாக்கி அந்த மென்பொருள்  முழுவதுமாக நிறுவிய பிறகு நீங்கள் பகிர விரும்பும் கோப்பை சேகரிக்கவும். உங்கள் கணினியின் முகப்பில் உள்ள Dropbox குறுக்கு வழி குறும்படத்தை அழுத்தவும்.பிறகு நீங்கள் சேகரித்த கோப்பையை Public என்ற கோப்பில் ஒட்டவும். இப்பொழுது நீங்கள் பகிர விரும்பும் கோப்பை உங்களது கணினியில் இருந்துக் கொண்டே இணையத்திற்கு மேலேற்றி விட்டீர்கள்.

நான்காம் படி :-  இதன் பிறகு உங்கள் உலாவியில் (browser) சென்று https://www.dropbox.com/  
 என்று தட்டவும். அங்கு உங்கள் கணக்கை திறந்து உள்ளே செல்லவும். நீங்கள் பகிர்ந்த கோப்பு public என்ற கோப்பில் இருக்கும்.ஆதலால் File-->Public என்ற கோப்பை அழுத்தவும். இப்பொழுது நீங்கள் பகிர்ந்த கோப்பின் நேரடி முகவரியை சேகரித்துக் கொள்ளுங்கள்.

ஐந்தாம் படி :-  சேகரித்த கோப்பை உங்களது வலைப்பூவில் ஒரு முகவரியாக வெளியிடவும். வாசகர்கள் அதனை தரவிறக்கம் செய்ய வெறும் அந்த முகவரியை மட்டும் அழுத்தினால் போதும்! (எப்பூடி! :)

ஓர் இலவச ப்ளாகர் பலகை :-


ப்ளாகரில் வாசகர் பக்கம் மற்றும் தொடர்புக்கொள்க பக்கத்தை இணைப்பது எப்படி?

How to add forms and guest book in blogger?

கடந்த ஒரு வாரமாக என்னால் பதிவுகள் எழுத முடியவில்லை காரணம் பள்ளி விடுமுறை முடிந்து எனக்கு பள்ளி ஆரம்பித்து விட்டது. அதுவும் பதினோராம் வகுப்பு அப்படியே பத்தாம் வகுப்புக்கு எதிர்மறையாக இருக்கிறது. ஒவ்வொரு பாடமும் இரண்டு புத்தகமாக இருக்கிறது. காலையில் பள்ளிக்கு சென்றால் இரவு எட்டு மணிக்குத்தான் வீடு திரும்ப முடிகிறது அதனால் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு பதிவுகள் வரை எழுதலாம் என்று இருக்கிறேன். சரி இப்பொழுது விசயத்திற்கு வருவோம்!அனைத்து பதிவர்களுக்கும் தங்களது வாசகர்களிடம் இருந்து நல்ல கருத்துக்களைக் கேட்க ஆசைதான். அவ்வாறு வாசகர்கள் கருத்துரை இட ஒரு வாசகர் பக்கம் அல்லது உங்களுடன் தொடர்புக்கொள்ள ஒரு பக்கம் என்று வலைப்பூவில் நிறுவினால் வாசகர்களுக்கு எவ்வளவு வசதியாக இருக்கும். எனவே அந்த வாசகர் பக்கம் மற்றும் உங்களுடன் தொடர்புக்கொள்ள ஒரு பக்கத்தை எப்படி இணைப்பது என்று பாப்போம் (இது மிகவும் சுலபமானது கவலைப்படாதீர்:)

முதலில் கீழே உள்ள தளத்திற்கு சென்று ஒரு கணக்கை உருவாக்குங்கள்.
பிறகு உங்கள் கணக்கின் முகப்பு பகுதியில் WEB TOOLS என்ற இடத்தில் Forms,Guset book,Forums என்று பட்டியலிடப் பட்டிருக்கும். இதோ கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இது மூன்றுமே இலவசம் தான் கவலைப்படாதீர்.இதில் எது உங்களுக்கு வேண்டுமோ அதனை சொடுக்கி பிறகு அதனை உங்களது வலைப்பூவிற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளுங்கள். மாற்றிய பிறகு அந்த தளம் தரும் குறியீடுகளை சேகரித்து BLOGGER ---> NEW POST சென்று ஒட்டவும்.அவ்வளவுதான் வேலை முடிந்தது. இந்த தளம் இது போன்ற நிறைய தேவையான கருவிகளை தருகிறது அதனையும் நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள்.