தரமான புதிய பாடல்களை (320kbps) தரவிறக்கம் செய்வது எப்படி?

How to download high quality songs?

புதிய பாடல்களை தரமான இசையில் தரவிறக்கம் செய்வது மிகவும் எளிது. ஆனால் அது கூகுளில் தேடுவதை பொறுத்தே அமையும். உதாரணத்திற்கு நீங்கள் நான் மகான் அல்ல பாடல்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால் இவ்வாறு தட்டச்ச வேண்டும் naan mahaan alla 320kbps vbr இவ்வாறு தட்டச்சினால் தான் நீங்கள் தரமான இசையை தரவிறக்க செய்ய முடியும். அதாவது முதலில் நீங்கள் தேட விரும்பும் பாடலின் படம் பெயர் அல்லது வெறும் பாடலின் பெயர் பிறகு 320kbps கடைசியில் vbr அவ்வளவுதான்.

சரி, இப்பொழுது அந்த 320kbps என்றால் என்ன? என்பதை பார்க்கலாம்:-
Kbps என்றால் kilo bits per second என்று அர்த்தம். அதாவது ஒரு பாட்டை தரம் பிரிப்பது ஆகும். உதாரணத்திற்கு பெரும்பாலான பாட்டுக்கள் 128kbps அளவில் இருக்கும். அவை யாவும் 4 அல்லது 5mb கணக்கில் காணப்படும். இதுவே அது 320kbps அளவில் இருந்தால் அது எட்டு முதல் பதினைந்து mb-யில் காணப்படும்.ஆனால் ஒரு பாட்டுக்கு இவ்வளவு இடமா? என்ற கேள்வி உங்களிடத்தில் எழும் அதனால் தான் நான் உங்களை கூகிளில் vbr (various bit rate) என்று தேடச்சொன்னேன்! இவ்வாறு தேடுவதால் ஒரு பாடல் ஆறு mb-யில் முடிவடைந்துவிடும்.

மேலும் நீங்கள் கீழ்கண்ட தளங்களில் கூட தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்:-
Www.djluv.in (ஹிந்தி பாடலுக்கு)
www.tamilwire.com (தமிழ் பாடலுக்கு)
Www.techsatish.com (தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி பாடலுக்கு)
Www.aimini.net (ஆங்கில பாடலுக்கு)

6 கருத்துரைகள்:

320 kbps சாங்கிற்க்கும் 128 kbps பாடலிற்க்கும் எஃபக்ட் மாறுபடும் தானே

@ஜில்தண்ணி - யோகேஷ்
ஆமாம் ஜில்தண்ணி அவர்களே!

என்னுடைய ப்ளாக்கில் ப்ளோக்கை போஸ்ட்
செய்தால் எழுத்து 10 C.M. இடைவெளியில் தெரிகிறது.
எப்படி சரி செய்வது? உதவி செயுங்கள்.
email : pashameed@gmail.com

@pashameed
நண்பரே இதற்கான பதிலை நான் மின் அஞ்சலின் மூலம் தெரிவித்து விட்டேன்.மேலும் உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி!

ஐயா வணக்கம், தங்களின் வலைப்பூ பயன்மிக்க பல தகவல்களை செறிந்து தருவதால், தங்களின் வலைத்தளத்தை தமிழி திரட்டியில் இணைத்துள்ளோம். இதனால் பலவாறு தமிழ் வாசகர்கள் தங்களின் வலைத்தளத்தை படித்து பயனுறுவர். தங்களின் வலைத்தள இணைப்பினால் அறிவு சொத்துரிமை மீறல் இருப்பின் தயைகூர்ந்து எமக்கு அறியத்தரவும். மேன்மேலும் தமிழில் எழுதி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பயன் தர எமது வாழ்த்துக்கள்.
நன்றி
தமிழி நிர்வாகம் , கனடா

thank you for sharing...really i good to see this..
@thepriselive

http://www.thepriselive.co.in/

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...