ப்ளாகரில் நேரடி தரவிறக்கம் செய்வது எப்படி? மற்றும் ஓர் இலவச ப்ளாகர் பலகை:-

Direct download in blogger!


 
அது என்ன நேரடி தரவிறக்கம்?
நாம் எப்பொழுதும் ஒரு கோப்பை அல்லது ஒரு பாட்டை  மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள box.net,Zshare என பல தளங்களில் சென்று நாம்  பகிர விரும்பும் கோப்புகளை மேலேற்றி பிறகு அதன் தரவிறக்க முகவரியை சேகரித்து அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்வோம். பிறகு அந்த கோப்பினை ஒருவர் தரவிறக்கம் செய்ய அந்த தளத்திற்கு சென்று முப்பது அல்லது அறுவது நிமிடங்கள் வரை காத்திருந்து தரவிறக்கம் செய்ய வேண்டும். அதனால் வாசகர்கள் தரவிறக்கம் செய்யவே சோம்பேறித்தனம் படுவார்கள். இதுவே அந்த கோப்பு ஒரே சொடுக்கில் உங்களது வலைப்பூவில் இருந்துக்கொண்டே தரவிறக்கம் செய்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். அதற்காகத்தான் இந்த பதிவு.

முதல் படி :-  இதற்கு நீங்கள்  ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு அதனை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும்.
                                                தரவிறக்கம் செய்ய:- https://www.dropbox.com/


இரெண்டாம் படி :-  அவ்வாறு நிறுவும் போது ஒரு கணக்கை உருவாக்குமாறு கேட்கும். நீங்களும் அதற்கு சரி என்று சொல்லி உருவாக்க வேண்டும்.

விளக்கம்:- அட! என்னடா இவன் இதை உருவாக்கணும் இதை தரவிறக்கம் செய்யணும் என்று தொல்லைக்  கொடுக்கிறான் என்று நீங்கள் மனதில் திட்டுவது எனக்கு கேட்கிறது. அதனால் நான் விசயத்திற்கு வருகிறேன்.
இந்த மென்பொருள் உங்களுக்கு மிக மிக பயன்படும். ஏன் என்றால் இதில் நீங்கள் பகிர விரும்பும் கோப்பையை உங்களது கணினியின் மூலமாக இணையத்திற்கு மேலேற்றலாம். இதற்கு நீங்கள் அந்த தளத்திற்கு தனியே சென்று மேலேற்ற அவசியம் இல்லை மற்றும் இது 2GB வரை இடம் அளிக்கிறது அதுவும் நேரடி தரவிறக்க முகவரியோடு (புரியவில்லை என்றால் படிப்பத்தை தொடரவும் அப்பொழுதான் புரியும்).

மூன்றாம் படி :-  கணக்கை உருவாக்கி அந்த மென்பொருள்  முழுவதுமாக நிறுவிய பிறகு நீங்கள் பகிர விரும்பும் கோப்பை சேகரிக்கவும். உங்கள் கணினியின் முகப்பில் உள்ள Dropbox குறுக்கு வழி குறும்படத்தை அழுத்தவும்.பிறகு நீங்கள் சேகரித்த கோப்பையை Public என்ற கோப்பில் ஒட்டவும். இப்பொழுது நீங்கள் பகிர விரும்பும் கோப்பை உங்களது கணினியில் இருந்துக் கொண்டே இணையத்திற்கு மேலேற்றி விட்டீர்கள்.

நான்காம் படி :-  இதன் பிறகு உங்கள் உலாவியில் (browser) சென்று https://www.dropbox.com/  
 என்று தட்டவும். அங்கு உங்கள் கணக்கை திறந்து உள்ளே செல்லவும். நீங்கள் பகிர்ந்த கோப்பு public என்ற கோப்பில் இருக்கும்.ஆதலால் File-->Public என்ற கோப்பை அழுத்தவும். இப்பொழுது நீங்கள் பகிர்ந்த கோப்பின் நேரடி முகவரியை சேகரித்துக் கொள்ளுங்கள்.

ஐந்தாம் படி :-  சேகரித்த கோப்பை உங்களது வலைப்பூவில் ஒரு முகவரியாக வெளியிடவும். வாசகர்கள் அதனை தரவிறக்கம் செய்ய வெறும் அந்த முகவரியை மட்டும் அழுத்தினால் போதும்! (எப்பூடி! :)

ஓர் இலவச ப்ளாகர் பலகை :-


7 கருத்துரைகள்:

னன்றி சின்னப்பயன். உபயோகமான தகவல்.

ஆமா +1 படிப்பு எப்படி போகுது?.

@Jey
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ஜெய். என் 11 வகுப்பு படிப்பு சற்று கடினமாகத்தான் இருக்கிறது முடிந்தால் நீங்கள் எனக்கு சொல்லித் தாருங்களேன்:)

That's another useful post..Thanks

@Raam

Thanks for your comment raam!

உபயோகமானதொரு இடுகை. பகிர்வுக்கு நன்றி

@வரதராஜலு .பூ
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி வரதராஜலு

எனக்கு மிகவும் உபயோகமான பதிவு இது நன்றி!

ஆனால் இப்படி நேரடியாக Download செய்தால் எத்தனை பேர் Download செய்தார்கள் என்று பார்க்க முடியாது என்று நினைக்கிறேன்.

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...