+2 முடித்த பிறகு?

AFTER +2 ?

இந்த கேள்வி  என்னிடத்தில் நீண்ட காலமாக இருந்தது ஆனால் இப்பொழுது கொஞ்சம் தெளிவு அடைந்து இருக்கிறது! காரணம் என் அண்ணன் என்னிடம் கூறிய அறிவுரைகள் அப்படி! (ரொம்ப நல்லவங்க). பொதுவாக +2 முடித்த அனைவருக்கும் ஒரு சிறந்த பொறியியல் கல்லூரியில் சேர விரும்புவதே கனவாக இருக்கும். அதேபோல தான் எனக்கும் இருந்தது. ஆனால் சில நாட்கள் கழித்து என் அண்ணன் என்னிடம் பேசிய போது அது ஒரு கெட்ட கனவாகவே போய்விட்டது :) பொறியியல் படிக்க விரும்பும் அனைத்து மாணவர்களும் அந்த பொறியியல் படிப்பை விரும்பி எடுப்பதில்லை, எதிர்காலத்தில் அதன் வருமானத்தை எண்ணியே அதனை எடுக்கிறார்கள். உதாரணமாக என் நண்பன் என்னிடத்தில் கூறிய வார்த்தைகள் இவை.. "டேய் எப்படியாச்சு AIEEE நல்ல மார்க் எடுத்தா போதும் டா! NIT-ல சேர்ந்து படிச்சி மாசத்துக்கு லட்சகனக்குல சம்பாதிக்கலாம்". அவனின் எண்ணம் எல்லாம் அப்படிப்பின் மீது அல்லாமல் பணத்தின் மீதே  இருக்கிறது. (சரி போதும் இதோட நிறுத்திக்குவோம்).

இப்பொழுது யாரும் பொறியியல் படிப்பின் மீது ஆர்வத்தை காட்டும் அளவிற்கு அறிவியில் படிப்புகளில் ஆர்வம் காட்டுவத்தில்லை. யாரும் ஆராய்ச்சியில் ஈடுபட விரும்புவதும்  இல்லை. அதனை வலியுறுத்தவே இந்த பதிவு!

IISER (Indian Institute Of Science Education and Research) :-



 இந்த ஐந்து வருட BS மற்றும் MS (இரெண்டும் சேர்த்து) படிப்பில் சேர்வதற்கு KVPY , IIT-JEE எழுதி இருக்க வேண்டும் அல்லது நம் தமிழ்நாடு அரசு (State board), மத்திய அரசு (CBSE) நடத்தும் பொதுத் தேர்வுகளில் மிகச் சிறந்த மதிப்பெண்களை  பெற்றிருக்க வேண்டும் அதாவது OBC (non-creamy layer) மாணவர்கள் தொண்ணூறு சதவீதத்திற்கு மேலும் SC/ST மாணவர்கள் அறுவது சதவீதத்திற்கு மேலும் பெற்றிருக்க வேண்டும் மற்ற மாணவர்கள் 95.5% சவீதத்திற்கு மேல் பெற்றிருக்க வேண்டியது அவசியம் (இங்கு குறிப்பிட்டது போல) . IIT-JEE நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அந்த  நுழைவுத்தேர்வில் ஓர் இடமும் (Rank) +2 பொதுத் தேர்வில் 60% பெற்றிருக்க வேண்டியது அவசியம். இக்கல்வி நிறுவனமானது போபால்,கொல்கட்டா, பூனே,மொஹாலி மற்றும் திருவனந்தபுரத்தில் அமைந்து இருக்கிறது.  இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயமாக் அங்கு தங்கியே படிக்க வேண்டும் அது  அவர்களின் சாபக் கேடு!இப்படிப்பை முடித்த பிறகு உங்கள் கையில் இரண்டு பட்டமும் ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலையும் இருக்கும் மற்றும் பல விவரங்கள் கீழே உள்ள இணைப்பிலும்,படத்திலும் இருக்கிறது.
மேலும் சில சந்தேகங்கள் இருந்தால் இதனை சொடுக்கவும் --->

  TNAU -Coimbatore (Tamilnadu Agricultural University) :-


                                                                               விவசாயத்தின் பயன் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் மற்றும் இதனை நம்பியே நம் எதிர்காலம் இருக்கிறது என்று தெரிந்ததாலும் அதனை நாம் விரும்பி எடுப்பதில்லை! அதனாலேயே இந்த கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு அதிக பதிப்பென்கள் தேவைப்படுவதில்லை.+2-வில் கணிசமான பதிப்பென்கள் எடுப்பவர்கள்  இந்த கல்வி நிறுவனத்தில் தாராளமாக சேரலாம்!

                                                                         


+2 பொதுத் தேர்வில் அதிக பதிப்பெண்கள் பெற முடிய வில்லையே என்று எம்மை போன்ற மாணவர்கள் யாரும் வருத்தப் பட தேவை இல்லை ஏன் என்றால் என்னை பொறுத்த மட்டில் இது பொதுத் தேர்வு அல்ல மனபாடத் தேர்வு (அப்படின்னு மனச தேத்திக்கணும்) மேலும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் யாரும் அலட்டிக் கொள்ளவும் தேவையில்லை!

I'M BACK......!


ஒரு வழியாக திக்கித் தடுமாறி இந்த +2 பொதுத் தேர்வை முடித்து விட்டு வீட்டில் நிம்மதியாக இருக்கிறேன். இனி யாரும் என்னை உட்கார்ந்து படி! என்று கூற முடியாது அதனால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் :) இருந்தாலும் இந்த தேர்வை நான் சிறப்பாக எழுதவில்லை என்று  சில! சில! நேரத்தில் வருத்தம் தருகிறது(அது ஏனோ தூங்கும் போது மட்டும் வருகிறேது ). எது எப்படியோ நான் இப்பொழுது முழுவதுமாக சுதந்திரமாக உணருகிறேன் (சில நாட்களுக்கு மட்டும்) எனவே இந்த நாள் முதல் என் பதிவுகள் தொடரும் என்றும் அறிவித்துக் கொள்கிறேன்!