சுயதொழில் முனைவர்களுக்கான ஊக்க/வைப்பு நிதி வழிமுறைகள் (entrepreneurial funding opportunities):


கீழேவிவரிக்கப்படுள்ள குழுவின் மூலம் உங்களின் சுயதொழிலுக்கு தேவையான நிதிகளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வாயிலாக பெறலாம்.

1) நுண் சிறு இடைநிலை வணிக முயற்சி (Micro Small Medium Enterprise[MSME], இந்தியஅரசு:
வலைதள முகவரி: http://dcmsme.gov.in/schemes/NMCPscheme.htm

இந்த முயற்சி மூலம் உங்களின் தொழில் முனைவை இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட தொழில்வளர்ப்பு மையங்களின் வழியாக உங்களது விளைப்பொருள்/சேவைகளுக்கு(product/service) தேவையான நிதியை பெற்றுகொள்ளலாம்.


2)TREC-அறிவியல் & தொழில்நுட்ப  சுயதொழில் பூங்கா [TREC - STEP ( Trichy Regional Engineering College- Science & Technology Entrepreneurship Park)]:
வலைதள முகவரி: http://www.trecstep.com/
இந்த சுய தொழில் முனைவர் பூங்கா திருச்சியின் தேசிய தொழில்நுட்ப கல்விக் கழகம்(NIT)  அருகில் அமைந்துள்ளது. இப்பூங்கா பல பன்னாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுகிறது. இதன்மூலம் உங்களுடைய தொழில் முனை வடிப்புகள்(ideas) தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுத்தபடுகின்றன.

3) ஊடக ஆய்வுக்கூடம் ஆசியா (Media Lab Asia) :
வலைதள முகவரி: www.medialabasia.in

இந்நிறுவனம் பல விளைப்பொருள்/சேவைகளை(product/service) தாமாகவே உருவாக்கி அதனை லாபநோக்குடன் உபயோகபடுத்துகிறது. இதே விளைப்பொருள்/சேவைகளை(product/service)  நீங்கள் உங்களின் தொழில்முனை யூக்தியொடு சேர்த்து பயன்படுத்தினால் உங்களுக்கும் இந்த மையம் ஊக்க/வைப்பு நிதியை வழங்கும்.

4) புதிய தொழில்முனைவு-முயற்சி கழகம் இந்தியா ( New Ventures India  ) :
வலைதள முகவரி: http://www.newventuresindia.org/
நீங்கள் சமூக-சுற்றுசூழல்(socio-environment) தொடர்பான விளைப்பொருள்/சேவைகளை செய்ய துடிக்கும் ஆவலராக இருந்தால் இக்கழகத்தின் மூலம் உங்களது வடிப்புகளை செயலாக்கலாம்.


5) முனை துவக்கம் ( Headstart):

இது ஒரு தனிப்பட்ட குழுமமாக செயல்பட்டு சுயதொழில் முனைவர்களை இணைக்கும் மேடையாக இயங்கி வருகிறது. இக்குழுவின் வாயிலாக உங்களுடைய சுயதொழிலில் ஏற்படும் சிறுபெரு இடையூறுகளை பற்றியும் விவாதிக்கலாம். வல்லுனர்களின் ஆலோசனையும் பெறலாம். கூகிள் குழுவும் இதற்காக உள்ளது.


6)தேசிய சுயதொழில் -முனைவு கட்டமைப்பு   (National Entrepreneurship Network):
வலைதள முகவரி: www.nenonline.org

இக்குழுவின் மூலம் எல்லாவிதமான சுயதொழில்களுக்கு தேவையான ஊக்க/வைப்புநிதிகள், பன்னாட்டு வர்த்தகமையங்களின் வாயிலாக வழங்கப்படுகின்றன. உங்களது வடிப்புகளை இக்குழுமத்திற்கு கொண்டு சென்றால் அவர்கள் அதனை செயல்வடிவமாக்குவதற்கான வழிவகைகளை வகுத்துரைப்பார்கள்.

                                                                                                               

ப்ளாகரின் "BLOGGER IN DRAFT" - ஒரு பார்வை

இது ப்ளாகர் அடுத்ததாக செய்ய இருக்கும் புதிய தொழில்நுட்பத்தோடும்,சகல வசதிகளோடும் காணப்படும் ஒரு புதிய ப்ளாகர் எனவும் கூறலாம்!இதற்கு நீங்கள் draft.blogger.com என்னும் முகவரிக்கு  செல்ல வேண்டும்.அந்த பக்கத்தை நீங்கள் ப்ளாகரின் இயல்பு நிலை டஷ்போர்டாகவும்(default dashboard) மாற்றிக்கொள்ளலாம்.

 இதனின் சிறப்பு அம்சங்கள்:-
 நமக்கு அதிகம்  தேவைப்படும் மேலும் படிக்க(read more),நட்சத்திர தரமிடல்(star rating),பதிவுகளுக்கு கிழே கருத்துரைப் பெட்டியை சேர்க்க என அனைத்து வசதிகளுடன் இது காணப்படுகிறது.

இப்பொழுது மேலும் படிக்க வசதியை எப்படி சேர்ப்பது என்று பார்ப்போம்...

 நான் அங்கு  கூறியவாறு draft.blogger.com என்னும் முகவரியை அணுகவும்.பிறகு அங்கு சென்றவுடன் new post என்பதை சொடுக்கவும்.முதலில் முகப்பில் காட்ட விரும்புவதை மட்டும் எழுதவும்.அதனை எழுதி முடித்தவுடன் insert jump break என்னும் பொத்தானை(button) அழுத்துங்கள் இதன் மூலம் தான் நீங்கள் மேலும் படிக்க வசதியை பெற முடியும்.இதற்கு பிறகு நீங்கள் மறைக்க விரும்புவதை எழுதவும்! 


இப்பொழுது உங்களுக்குள் ஒரு கேள்வி எழும் அதாவது "சின்ன பையன் இதை எல்லாம்   சொல்லிட்டான்  ஆனா இந்த read more என்கிற ஆங்கில வார்த்தையை தமிழ் வார்த்தையாக மாத்துற முறைய சொல்ல மறந்துட்டானே "என்றெல்லாம் கேள்விகள் எழும் அதற்கும் விடை இருக்கின்றது கவலைப்படாதீர்கள்!
அதற்கு முதலில்   layout-->page elements-ற்கு செல்லவும்.அங்கு blog post என்ற இடத்தில் edit என்பதினை அழுத்தவும்.அழுத்தியவுடன் இதோ கிழே உள்ள படத்தை போல தெரியும்.அதில் உள்ள  read more என்னும் எழுத்தை தமிழில் மாற்றிக்கொள்ளுங்கள்.


"இருங்க! இருங்க! உடனே  மூடி விடாதிங்க  அதற்கு கிழே தான் நட்சத்திர தரமிடல் நிரல்பலகை (star rating widget)  இருக்கின்றது"இதனை நீங்கள் உங்கள் பதிவுகளில் சேர்ப்பதன் மூலம் வாசகர்கள்  உங்களது பதிவுகளை மதிப்பிடுவார்கள்.

இப்பொழுது எனக்கு விசைப்பலகையை தட்டி! தட்டி! கை வலிக்கிறது  அதனால் இதனின்  பல வசதிகளை அடுத்த பதிவுகளில் காண்போம்:)