நமது தளத்தை கூகிளில் சிறந்து விளங்க வைக்க:-

நாம் என்ன தான் தமிழிஷிலும்,தமிழ் 10-னிலும் சிறந்து விளங்கினாலும் கூகிள் மற்றும் இதர தேடலில் சிறந்து விளங்குவது கடினமே. அதற்கு காரணம் நாம் சரியாக தேடுபொறிகளை புரிந்துக்கொள்ளாததுதான். முதலில் நாம் நம் முடைய தளத்தை google, yahoo , bing போன்ற தேடுபொறிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு முன் நாம் தேடுபொறி உகப்பாக்கம் அதாவது SEO என்றால் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். அதைப் பற்றி தெரிந்துக்கொள்ள இங்கு சொடுக்கவும். உங்கள் தளத்தை கூகிள் மற்றும் சில தளங்களிடத்தில் ஒப்படைக்க கீழே உள்ளதை சொடுக்கவும்:-
http://www.addme.com/submission/free-submission-start.php
மேலே உள்ள தளத்தில் யாஹூ,பிங் ஆகிய தேடுபொறிகளிடம் ஒப்படைக்க முடியாது அதனால் நீங்கள் உங்கள் தளத்தை தனியே சென்று இணைத்துக்கொள்ளுங்கள்.
இந்த இணைப்பு உங்களது தளத்தை யஹூவிடும் ஒப்படைக்க உதவும்.
இந்த இணைப்பு பிங் தேடுபொறியிடம் ஒப்படைக்க பயன்படும்.

இவ்வாறு ஒப்படைத்த பிறகு "அப்பாடி! முன்னணி தேடுபொறிகளிடம் ஒப்படைத்து விட்டோம்" என்றெல்லாம் நினைக்க வேண்டாம். ஏன் என்றால் இப்பொழுதுதான் உண்மையான வேலையை ஆரம்பிக்க போகிறோம்:)சரி இப்பொழுது கீழே உள்ள meta tag குறியீடுகளை சேகரிக்கவும்.

<meta name="title" content="Title" />
<meta name="description" content="Description" />
<meta name="keywords" content="keywords" />
<meta name="author" content="Author" />
<meta name="owner" content="Owner" />
<meta name="copyright" content="(c) 2010" />

பின்பு Blogger --> Layout or Design --> Edit HTML -லில்
<b:include data='blog' name='all-head-content'/>
என்ற குறியீட்டுக்கு கீழ் ஓட்ட வேண்டும்.
கவனிக்க:- நான் சிகப்பு மையினால் சுட்டிக் காட்டியதை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளுங்கள். அதாவது "Title" என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவின் தலைப்பை எழுத வேண்டும். "Description" என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவைப் பற்றி இரண்டு வரிகளில் ஒரு சிறிய விவரிப்பை (description) எழுத வேண்டும் மற்றவை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.
இதனால் என்ன பயன் என்ற கேள்வி உங்களிடத்தில் எழும். அதற்கான விடையை அறிய கீழே உள்ள படத்தை பாருங்கள்

இந்த படத்தில் என் வலைப் பூவின் தலைப்பு அழகான விவரிப்புடன் (description) கூகிளில் தெரிகிறது. இதற்கு எல்லாம் காரணம் இந்த meta குறியீடுகளின் இணைப்பே ஆகும்.

இதன் பிறகும் நாம் நிறைய செய்ய வேண்டும். அது என்னவென்றால் நாம் இப்பொழுது எழுதும் அனைத்து பதிவுகளிலும் குறிச்சொற்களை (keywords) சேர்ப்பதுதான். இதனால் நாம் அனைத்து தேடுபொறிகளிடமும் சிறந்து விளங்கலாம். அதற்கு செய்ய வேண்டுவன, நம்முடைய பதிவின் முகவரியை பதிவுக்கு ஏற்றவாறு மாற்றுதல். நாம் தமிழ் பதிவர்கள் அதனால் நம் பதிவின் முகவரிகள் அனைத்தும் இது போன்று காட்சி அளிக்கும் http://cp-in.blogspot.com/2010/04/blog-post_21.html.
இந்த முகவரியில் ஏதேனும் பதிவுக்கு ஏற்ற சில குறிச்சொற்கள் இருக்கிறதா? இல்லை. அதனால் நாம் எப்பொழுதும் பதிவுகளை இடும் போது ஆங்கிலத்தில் தலைப்பு மட்டும் எழுதி பிரசுரப்படுத்த (publish) வேண்டும். பிரசுரப்படுத்திய அடுத்த நிமிடமே அந்த பதிவின் தலைப்பை தமிழில் மாற்றி விட வேண்டும் இதனால் அந்த பதிவின் முகவரி பதிவிற்கு ஏற்ற முகவரியாக மாறிவிடும் (எப்பூடி!).இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கருத்துரை மூலம் தெரிவிக்கவும் (சந்தேகம் இல்லை என்றாலும் தெரியப்படுத்தவும்:)

22 கருத்துரைகள்:

பாராட்டுகள் நண்பரே..! மிகவும் பயனுள்ள தகவல்கள்.! தொடருங்கள் தங்கள் சேவையை... வாழ்த்துகளுடன் பிரவின்.

It would be useful to state that the items in Red colour has to be updated according to the post, just in case if someone does not understand this.

//பிரவின்குமார்
பாராட்டுகள் நண்பரே..! மிகவும் பயனுள்ள தகவல்கள்.! தொடருங்கள் தங்கள் சேவையை... வாழ்த்துகளுடன் பிரவின்.//


நண்பரே கவனிக்க நான் சிகப்பு மையினால் சுட்டிக் காட்டியதை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளுங்கள். அதாவது "Title" என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவின் தலைப்பை எழுத வேண்டும். "Description" என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவைப் பற்றி இரண்டு வரிகளில் ஒரு சிறிய விவரிப்பை (description) எழுத வேண்டும் மற்றவை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

//Raam
It would be useful to state that the items in Red colour has to be updated according to the post, just in case if someone does not understand this.//

yes friend i did it:)

//soundar
நல்ல தகவல்....//

thanks for your comment soundar.

சின்ன பையா தேங்க்ஸ் இது எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது .இதில் எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றல் add me il பதிவு செய்ததும் ஒரு கோடை காபி பண்ணி பிஸ்ட் பண்ண சொன்னார்கள் நான் அதை செய்ய வில்லை இதனால் எதாவது பதிப்புஉண்டாகுமோ

//karthikeyan
சின்ன பையா தேங்க்ஸ் இது எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது .இதில் எனக்கு ஒரு..../

அதெல்லாம் ஒன்றும் தேவை இல்லை நண்பரே!

நல்ல தகவல், நிச்சயமாக நீங்கள் சின்ன பையன் இல்லை.

மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்

//நிச்சயமாக நீங்கள் சின்ன பையன் இல்லை.//

நண்பரே சொன்னா நம்புங்க நான் சின்ன பையன்தான்.

கலக்கிட்டிங்க போங்க....

//பாடுமீன்
கலக்கிட்டிங்க போங்க....//

உங்களின் கருத்துக்கு ரொம்ப நன்றிங்கோ!

ஹாய் சின்னப்பையன். நலமா?

@Tamilfa
நான் இங்கு நலம். நீங்கள் அங்கு நலமா!

பயனுல்ல தகவல் கொடுத்தமைக்கு நன்ரி. எனக்கு ஒரு சந்தேகம் உல்லது நன்பா. எனது தமிழ் பதிவுக்கு meta taக் இல் "title, keyword and descriptioந்" அகியவைகலை நான் தமிழில் தட்டச்சு செய்யவா? அல்லது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவா? தயவு செய்து கூருங்கல் நன்பா. உங்கல் பதிலுக்காக கத்திருக்கிரேன்.

@senthilraj
ஆங்கிலத்திலியே தட்டச்சவும் நண்பரே!

புதிதாக ப்ளாக் தொடங்கிய என்னைப் போன்றோருக்கு மிகவும் பயனுள்ள விளக்கங்கள். உங்கள் நற்பணி மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள், சின்னப் பையன் !

தேங்க்ஸ் .......

விளக்கமாக கூறுங்கள் நண்பா

ஹாய் cp. எனக்கு seo பத்தி நிறைய சந்தேகங்கள் உள்ளன. அதை சாட்டிங் மூலமாத்தான் தீர்த்து கொள்ள முடியும்போல. தயவுசெய்து சட செய்ய வாருங்கள். மேலும் உங்களது பதிவில் addme.com சென்று நமது தளத்தை ஒப்படைக்குமாறு கூறியுள்ளீர்கள். எனக்கு இதில் என்ன சந்தேகம் என்றால் addme.com என்பது google add url போன்றதா இல்ல இந்த தளம் நேரடியாகவே சென்று கூக்ளிடமும் மற்ற தேடு பொறிகளிடமும் ஒப்படைக்க கூடியதா அப்படியே ஒப்படைக்க குடியதாக இருக்கும்பட்சத்தில் நம் சரியான keywoed,description,title போன்றவைகளை கொடுத்திருந்தால் எத்தனை நாட்கள் அல்லது வாரத்தில் கூகிள் மற்றும் இதர தேடு பொறிகளில் நமது தளம் வரும் என் கூறவும். உங்களது பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்.
(ஏனெனில் google add url என்பது பேருக்கு நான் ஒரு தளத்தை உருவாக்கியுள்ளேன் என கூறுவதற்கு மட்டுமே என கேள்விபட்டுளேன் )

cp enna achu ennudaiya santhegathukku bathilaiye kanom?

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...