வலைப்பூவை
வேகமாகவும்,அழகாகவும் ஆக்க அனைத்து பதிவர்களுக்கும் ஆசை உண்டு.
ஆனால் அதனை எப்படி செய்வது என்று பல நபர்களுக்கு தெரியவில்லை.அதற்காகத்தான்
இந்த பதிவை எழுதுகிறேன்.முதலில் பதிவர்கள் வாசகர்களை கவர ஒரு நல்ல பலகையை
எடுக்க வேண்டும்.அந்த பலகை பார்க்க எளிமையாக இருக்க வேண்டும்.அவ்வாறு
எடுக்க இங்கு
செல்லுங்கள் அல்லது கீழே உள்ள தளங்களுக்குச் செல்லுங்கள்:-
பொதுவாக ப்ளாகர் பலகைகள் மேலே உள்ள வடிவங்களின் அடிப்படையில் தான் இருக்கும். இந்த வடிவங்களில் எது சிறந்த வடிவம் என்பதை தனியே நான் கட்டமிட்டு காட்டி உள்ளேன்.சரி இவ்வளவு வடிவங்கள் இருந்தும் ஏன் இவன் இந்த வடிவங்களை காட்டுகிறான் என்ற கேள்வி உங்கள் மனதில் எழும்.அதற்கான பதில்:- எப்பவுமே துணைப்பட்டை (sidebar) வலது பக்கம் இருந்தால் முதலில் நம் பதிவு சீக்கிரமாக லோட் (load) ஆகும்.ஏன் என்றால் வாசகர்களுக்கு அதுதான் முக்கியம்.இதுவே அந்த துணைப்பட்டை இடது பக்கத்தில் இருந்தால் முதலில் சைடுபாரில் இருக்கும் நிரல் பலகைகள் லோட் ஆகும் அதற்கு பிறகு தான் நம் பதிவு லோட் ஆகும்.வாசகர்களுக்கு அது முக்கியம் இல்லை.இப்பொழுது பலகையின் கீழ் (footer) பகுதியை எப்படி தேர்ந்தெடுப்பது என்று பார்ப்போம்.பொதுவாக பலகையின் கீழ் பகுதி கீழே உள்ளதைப் போன்று காணப்படும்.
அதிலும் சிறந்தது எது என்று நான் குறிப்பிட்டு இருக்கிறேன்.எப்பொழுதும் கீழ் பகுதியில் வாசகர்களுக்கு மிகவும் தேவையான நிரல் பலகையை வைக்க வேண்டும். உதாரணத்திற்கு: "இதை போன்ற நிரல் பலகைகள்", "சிறந்த பதிவுகள்", "உங்களைப் பற்றி", "சமீபத்திய கருத்துரைகள்"..
இப்பொழுது பலகைகளை எப்படி தேர்ந்தெடுப்பது என்று நாம் கற்றுக்கொண்டோம்.எனவே இப்பொழுது உங்கள் வலைப்பூவை எப்படி வேகமாக செயல்பட வைப்பது என்று பார்ப்போம்.உங்களது வலைப்பூவை வேகமாக செயல்பட வைக்க ஒரே வழி நிரல் எழுத்தினால் (script) ஆனா நிரல் பலகையை தவிர்ப்பது.ஒரு வலைப்பூவிற்கு ஏழு நிரல் பலகைகள் இருந்தால் போதுமானது.அதற்கு மேல் வைக்க வேண்டாம்!
பதிவர்களுக்கு தேவையான ஐந்து நிரல் பலகையை நான் ஒரு பதிவில் எழுதி இருக்கிறேன். அதனைப் படிக்க இங்கு செல்லவும்.சில நேரங்களில் இந்த நிரல் பலகைகளே லோட் ஆக நேரம் ஆக்கும்.எனவே இது போன்ற நிரல் பலகையை பயன்படுத்தவும்.மேலும் முகப்பு பகுதியில் ஐந்து அல்லது ஏழு இடுகைகள் வரைதான் போடா வேண்டும் அதற்கு மேல் போடாதீர்.அதிலும் சில பதிவுகள் பெரிய பதிவுகளாகவும் இருக்கு அது லோட் ஆக மிக நேரம் எடுக்கும்.அது போன்ற இடத்தில் இந்த முறையை கையாளுங்கள்.இந்த பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த பதிவிற்கு கட்டாயம் கருத்துரை இடுங்கள்:)
13 கருத்துரைகள்:
நல்ல டிப்ஸ். உண்மையிலேயே ப்ளாக்குக்கு உதவியான நல்ல விசயங்கள்,நன்றி
இளமுருகன்
நைஜீரியா
உங்களது கருத்துக்கு மிக்க நன்றி இளமுருகன் சார்:)
நல்ல பதிவு
நல்ல விசயங்கள்,நன்றி
//நீச்சல்காரன்
நல்ல பதிவு//
//பிரியமுடன் பிரபு
நல்ல விசயங்கள்,நன்றி //
உங்களது கருத்துக்கு மிக்க நன்றி.
அருமை .. இத்தனை சின்ன வயதில் எத்தனை ஆர்வம்?
க்ரெட்..வாழ்துகல்
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி Geetha6 அவர்களே:)
ப்ளாக்குக்கு உதவியான நல்ல விசயங்கள்,நன்றி
www.lalpet.com
//லால்பேட்டை . காம்
ப்ளாக்குக்கு உதவியான நல்ல விசயங்கள்,நன்றி
www.lalpet.காம்//
உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றிங்க!
Imran you are the best and useful blogger writer., its really helpful to the beginers. keep it up
thanks fr ur comment haalith:)
வாழ்த்துக்கள்..
வயது சிறிதுதான் - எண்ணங்கள் பெரிது..
உங்கள் முயற்சி - தொடரட்டும்
எனது "கம்ப்யூட்டர்வாதி" - தளத்தில் விரைவில் அறிமுகம் செய்கின்றேன்..
நட்புடன்-மஸாகி
01.05.2010
கருத்துக்கு நன்றி நண்பரே. உங்களின் சிறப்பான பணி தொடரும்.
Post a Comment
தமிழ் எழுத