விலாசப்பட்டையில்(address bar) உள்ள ப்ளாகரின் சின்னத்தை(icon) எடுத்து விட்டு நாம் விரும்பிய சின்னத்தை பதிய வைப்பது எப்படி?

அனைவருக்கும் தங்களது சின்னத்தை வலைப்பூவின்(blog) விலாசப்பட்டையில்(address bar) பதிய வைக்க ஆசை உண்டு. ஆனால் என்ன செய்வது அங்கு தான் ப்ளாகரின் சின்னம் இருக்கிறதே அதனை எப்படி நாம் எடுப்பது என்று யோசிக்கிறீர்களா? அதற்காகத்தான் இந்த பதிவு.
இதற்கு வேண்டுவன உங்களுக்கென்று ஒரு சின்னம் மட்டும் தான்!அந்த சின்னத்தை ஆங்கிலத்தில் Favicon என்று குறிப்பிடுவார்கள் அதற்கு அர்த்தம் விரும்பிய சின்னம்(Favourite icon) ஆகும். அது போகட்டும் இந்த சின்னத்தை எப்படி உருவாக்குவது என்று உங்களுக்குள் கேள்வி எழும் அதற்கு கிழே உள்ள இணைப்பை(link) ஒரு சொடுக்கு சொடுக்கினால் போதுமானது,
நேரடி மாதிரிக்கு எனது விலாசப்பட்டையை பார்க்கவும் அங்கு ப்ளாகரின் சின்னம் இல்லாமல் எனது சின்னமாகிய cp என்ற சின்னம் இருக்கும்.

http://www.favicon.cc/ - இந்த இணைப்பு ஒரு சின்னத்தை உருவாக்க.

http://www.html-kit.com/favicon/ - இந்த இணைப்பு உங்களது படங்கள் அல்லது வேறு படங்களை சின்னமாக மாற்ற.
http://www.genfavicon.com/ - இதுவும் அதே போன்று தான்.
http://www.favicongenerator.com/ - " "

நமக்கு இதெல்லாம் ஒத்து வராதுப்பா! என்று கூறுவோர் ஏற்கனவே தயார் செய்த(ready made) சின்னத்தை இங்கு எடுத்துக் கொள்ளுங்கள்

சரி இப்பொழுது சின்னத்தை உருவாக்கிய உடன் அந்த சின்னத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள தளங்களில் மேலேற்றுங்கள்(upload).

http://www.myimgs.net/index.php

http://photobucket.com/

மேலேற்றியவுடன் அது ஒரு முகவரியை தரும் அதனை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு ப்ளாகர் கணக்கிற்கு செல்லவும்.அங்கு சென்று, LAYOUT-->EDIT HTML ‍ன் கீழ் இதனை தேடவும்:

</head>


இதனைத் தேடி கண்டு பிடித்தவுடன் </head> என்ற குறியீடுக்கு மேல் கீழே உள்ளதை சேகரித்து ஒட்டவும்.


<link href='YOUR-FAVICON-URL' rel='shortcut icon'/>
<link href='YOUR-FAVICON-URL' rel='icon'/>

YOUR-FAVICON-URL என்ற இடத்தில் மேலேற்றிய முகவரியை குறிப்பிடவும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும்!

4 கருத்துரைகள்:

அருமை... அருமை... மிக்க நன்றி..... :-)

@sethupathy

நன்றி!சேதுபதி

நண்பரே நீங்கள் சொன்ன வழிமுறைகளை நான் பின்பற்றி நாளும் விலாசப்பட்டையில் நான் விரும்பிய சின்னத்தை பதிய வைத்தால் Your template could not be parsed as it is not well-formed. Please make sure all XML elements are closed properly. XML error message: The element type "link" must be terminated by the matching end-tag "".
இது மாதிரியான தகவல்கள் தான் எனக்கு கிடைக்கிறது

@ரேவாநண்பரே அதனை நீங்கள் ஒட்டும் போது ஒரு coma,closing tag விடாமல் கட்சிதமாக ஓட்ட வேண்டும். நீங்கள் அந்த படத்தின் முகவரியை ஒட்டும் போது சரியாக ஒட்டுங்கள் கண்டிப்பாக வரும்!

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...