க்ரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி- டி3 ராக்கெட் நாளை மாலை விண்ணில் ஏவப்படுகிறது.


பெங்களூர்: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட க்ரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி- டி3 ராக்கெட் நாளை மாலை விண்ணில் ஏவப்படுகிறது.

இதுகுறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய செய்தித் தொடர்பாளர் சதீஷ் நிருபர்களிடம் கூறுகையில்,

இப்போது ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் தான் க்ரையோஜெனிக் என்ஜின்களால் இயங்கும் அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்டுகள் உள்ளன.

ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தை நாம் பெற முடியாத அளவுக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டன. இதனால் இந்திய விஞ்ஞானிகளே கடந்த 18 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி க்ரையோஜெனிக் என்ஜினைத் தயாரித்தனர்.

இந்த என்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி- டி3 ராக்கெட் நாளை மாலை 4.27 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை 11.27 மணிக்குத் துவங்குகிறது.

சதீஷ் தவான் ராக்கெட் தளத்தின் 2-வது தளத்திலிருந்து ஏவப்படும் இந்த ராக்கெட்டில் 2,218 கிலோ எடை கொண்ட அதி நவீன தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோளான ஜி-சாட்4 விண்ணில் செலுத்தப்படுகிறது.

தகவல் தொடர்பு, கடல் வழித்தட தகவல்களுக்கு இந்த செயற்கைக்கோள் உதவும் என்றார்.

50 மீட்டர் உயரமும் 416 டன் எடையும் கொண்ட இந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட் பொறுத்தப்படவுள்ள க்ரையோஜெனிக் என்ஜின் தமிழகத்தில் உள்ள மகேந்திரகிரியில் உருவாக்கப்பட்டதாகும்.

அது என்ன க்ரையொஜெனிக் என்ஜின்?:

திட அல்லது திரவ எரிபொருள்களால் ஆன ராக்கெட்டுகளைத் தான் இதுவரை இந்தியா ஏவி வந்துள்ளது. இந்த ராக்கெட்டுகளால் செயற்கைக் கோள்களை சில நூறு கி.மீ. உயரம் வரை தான் ஏவ முடியும்.

இந்த செயற்கைக் கோள்களை ஆய்வுப் பணிக்குத் தான் பயன்படுத்த முடியுமே தவிர தகவல் தொடர்புக்கு பயன்படுத்த முடியாது.

பூமியில் இருந்து சுமார் 35,000 கி.மீ. உயரத்தில் செயற்கைக் கோளை ஏவினால் தான் அது தகவல் தொடர்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வளவு உயரத்தில் செயற்கைக் கோளை விண்ணில் ஏவ அதிக சக்தி வாய்ந்த ராக்கெட் தேவை. அதற்கு ராக்கெட்டில் பொறுத்த மிக சக்தி வாய்ந்த என்ஜின் தேவை.

இது தான் க்ரையோஜெனிக் என்ஜின். இது திரவ நிலையில் இருக்கும் ஹைட்ரஜன், ஆக்ஸிஜனை எரிபொருளாகக் கொணடு இயங்கும் என்ஜினாகும்.

இந்த என்ஜினை பல ஆண்டுகளுக்கு முன்பே ரஷ்யா நமக்கு வழங்க இருந்தது. ஆனால், இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியதால் அமெரிக்காவின் முயற்சியால் விதிக்கப்பட்ட தொழில்நுட்பத் தடைகள் இந்தியாவுக்கு இந்த தொழில்நுட்பம் கிடைப்பதை தடுத்துவிட்டது.

இதையடுத்து இதை இந்தியாவே உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இப்போது வெற்றி பெற்றுள்ளது.

இந்த என்ஜினில் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் -183 டிகிரி செல்சியசுக்கு குளிரூட்டப்பட்டு திரவ நிலையில் இருக்கும். அதே போல ஹைட்ரஜன் -253 டிகிரி குளிரூட்டப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்பமடைவதைத் தவிர்க்க இந்த ஆக்ஸிஜன்-ஹைட்ரஜன் திரட எரிபொருள கலவையை ராக்கெட் ஏவப்படும் சில மணி நேரங்களுக்கு முன் தான் நிரப்ப வேண்டும். ராக்கெட் கிளம்புவதற்கு 30 நொடிகள் இருக்கும் வரை எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்குமாம்.எனவே இந்த க்ரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி- டி3 ராக்கெட் எந்தவித பாதிப்பும் தடங்களும் இன்றி விண்ணில் ஏவ கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.இதுதான் நம்மால் செய்ய முடியும் காரியம்!

1 கருத்துரைகள்:

தமிழில் நான் அறிந்த சிறந்த வலைப்பூக்களில் இதுவும் ஒன்று.


Tamil Boy baby Names

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...