கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) மூன்றாவது மனிதர்களின் மென்பொருள் இல்லாமல் பிரிப்பது எப்படி?

ஒருநாள் என் தொலைப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்தது அவன் வேறு யாரும் இல்லை என் நண்பன். அவன் உடனே ஓர் windows 7 குறுந்தட்டை (CD) எடுத்து வருமாறு கூறினான். நானும் அவ்வாறே எடுத்துச் சென்றேன். அதனை அவன் தன் கணினியில் நிறுவுமாறு கூறிக்கொண்டான். நானும் நிறுவிக் கொடுத்தேன். ஒரு வழியாக நிறுவிய பிறகு என் நண்பன் "கணினியில் இருக்கும் வன்வட்டுகளை (hard disk) எப்படி பிரிப்பது?" என்று ஒரு கேள்வியை எழுப்பினான். நான் அதற்கு ஓர் மென்பொருளை நமது கூகிள் தேடலில் தேட ஆரம்பித்தேன். அப்போது இது என் கண்ணில் சிக்கியது.அது என்ன என்றால் "தட்டுகளை பிரிப்பதற்கு மூன்றாவது மனிதர்களின் மென்பொருளை பயன்படுத்தாமல் windows இயக்கத்தின் மூலம் எப்படி பிரிப்பது?" இது windows vista மற்றும் windows 7-லில் மட்டுமே பொருந்தும்.அதனை நான் இந்த தளத்தில் இருந்து தேடிக் கண்டுப் பிடித்தேன்:- http://www.nirmaltv.com/2009/05/12/how-to-resize-disk-partition-in-windows-7/
அவருக்கு ஓர் நன்றியை தெரிவித்து இந்த பதிவுக்கு செல்லலாம். இதற்கு முதலில் நீங்கள் Control Panel செல்ல வேண்டும். அங்கு சென்றவுடன் இதனைத் தேட வேண்டும்:- "partition". அதன் பிறகு கீழே உள்ள படத்தை போல இருக்கும்


அதில் "create and format hard disk partitions" என்பதை அழுத்தவும். அதனை அழுத்தியவுடன் இதோ இது போல இருக்கும்
இதில் நீங்கள் ஒரு வன்வட்டின் அளவை குறைக்க விரும்பினால் உங்கள் வலச்சொடுக்கியை (right-click) சொடுக்குங்கள். அதில் "shrink" என்பதை சொடுக்கி உங்களது வன்வட்டின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். இதுவே நீங்கள் அந்த வன்வட்டின் அளவை அதிகரிக்க விரும்பினால் "Extend volume" என்பதை சொடுக்குங்கள். அவ்வளவுதான்:)

9 கருத்துரைகள்:

Are you really tenth standard student?

Now i'm promoted to 11th standard:)

அட ராஜா..தம்பி.. இந்த வயசுல என்னமாடா எழுதுர.. நல்லாயிரு ராசா.. நல்லாயிரு..

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சிங்கம்!

Good looking -useful blog..nice---vimalavidya

//vimalavidya
Good looking -useful blog..nice---vimalavidya//

Thanks for your comment vimalavidya.

சிங்கமுத்து கமென்ட் தான் என் கமென்ட்.

@Sultan - Saudi Arabia
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சுல்தான்.

உண்மையில் பாராட்ட வார்த்தை இல்லை உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...