நாளுக்கு நாள் பதிவுத் திருடர்களின் எண்ணிக்கை அதிமாகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நாம் நமது பதிவுகளுக்கு காப்புரிமை பெற்றே தீர வேண்டும். காப்புரிமையை எப்படி பெறுவது என்ற சந்தேகம் உங்களிடத்தில் இருக்கும். அந்த சந்தேகத்தை போக்கவே இந்த பதிவு. கீழே உள்ள தளம் உங்களின் பதிவுகளுக்கு காப்புரிமை பெற்றுத் தரும்.
தளத்தின் முகவரி: http://myfreecopyright.com/
இதில் நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கி அதில் உங்களது செய்தியோடையை (feed) ஒப்படைத்தால் போதுமானது.இதனால் என்ன பயன்?
உங்கள் பதிவுகளை இவ்வாறு காப்புரிமை பெறுவதன் மூலம் அந்த பதிவுகள் அனைத்தும் நீங்கள் தான் எழுதியது என்று ஒரு அடையாளம் இருக்கும். மேலும் உங்கள் பதிவுகளை பதிவுத் திருடர்கள் திருடினால் "இந்த பதிவு என்னுடையது நான் காப்புரிமை பெற்று உள்ளேன்" என்றும் முறையிடலாம். நீங்கள் புதிதாக எழுதிய பதிவுகள் தானாகவே காப்புரிமை பெற்று உங்கள் மின் அஞ்சலில் "நீங்கள் இந்த பதிவுக்கு காப்புரிமை பெற்று விட்டீர்கள்" என்று வரும். அதனை நீங்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். தயவு செய்து அதை அழித்து விடாதீர்கள்!
my free copyright-ல் உங்களது செய்தியோடையை ஒப்படைத்த பிறகு அந்த தளம் ஒரு பொத்தானைத் (button) தரும். அந்த பொத்தானை உங்களது வலைப்பூவின் துணைப் பட்டையில் (sidebar) ஒட்டி விட்டு அதற்கு கீழ்/மேல் "இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை" என்று எழுதி விடுங்கள்.
10 கருத்துரைகள்:
நன்றி! நல்ல தகவல் நண்பரே!
ஆனால் இந்த தளத்தில் எனது ப்ளாக்கிற்கு காப்புரிமை பெற்ற பிறகு (உடனே அல்ல, மூன்று வாரங்களுக்கு பிறகு) தமிழ்10 மற்றும் தட்ஸ்தமிழ் போன்ற திரட்டிகளில் எனது வலைப்பூவில் இருந்து எந்த ஒரு இடுகையையும் இணைக்க முடியவில்லை.
"இந்த யூஆர்எல் தடை செய்யப் பட்டுள்ளது" என்ற செய்தி வருகிறது.
நீங்களும் சோதித்துப் பார்த்து எனது கருத்து சரியா/தவறா என்று கூறுங்கள்
அன்புடன்
சூர்யா கண்ணன்
நன்றி! நல்ல தகவல் நண்பரே!
ஆனால் இந்த தளத்தில் எனது ப்ளாக்கிற்கு காப்புரிமை பெற்ற பிறகு (உடனே அல்ல, மூன்று வாரங்களுக்கு பிறகு) தமிழ்10 மற்றும் தட்ஸ்தமிழ் போன்ற திரட்டிகளில் எனது வலைப்பூவில் இருந்து எந்த ஒரு இடுகையையும் இணைக்க முடியவில்லை.
"இந்த யூஆர்எல் தடை செய்யப் பட்டுள்ளது" என்ற செய்தி வருகிறது.
நீங்களும் சோதித்துப் பார்த்து எனது கருத்து சரியா/தவறா என்று கூறுங்கள்
அன்புடன்
சூர்யா கண்ணன்
நல்ல பயனுள்ள பதிவு.ஏற்கனவே நான் இந்த காப்பி ரைட் வாங்கியிருக்கிறேன்,ஆனால் my free copyright logo வை என் ப்ளாக்கில் இணைக்கவில்லை.
பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி
பதிவுக்கு மிக்க நன்றி. இந்த வலைத் தளம் வழங்கும் காப்புரிமைக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் இருக்கிறதா? யாராவது சொன்னால் நல்லது!
//சூர்யா ௧ண்ணன்
நன்றி! நல்ல தகவல் நண்பரே!
ஆனால் இந்த தளத்தில் எனது ப்ளாக்கிற்கு காப்புரிமை பெற்ற பிறகு (உடனே அல்ல, மூன்று வாரங்களுக்கு பிறகு) தமிழ்10 மற்றும் தட்ஸ்தமிழ் போன்ற திரட்டிகளில் எனது வலைப்பூவில் இருந்து எந்த ஒரு இடுகையையும் இணைக்க முடியவில்லை...//
நண்பரே உங்களுக்கு வந்த பிழையை (error) சேகரித்து எனது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப இயலுமா. மேலும் உங்களுக்கு மற்ற திரட்டிகளான தமிழிஷ்,தலைவன் ஆகியவற்றில் எந்த விதமான பிழையும் இன்றி சேர்க்க முடிகிறதா?
//LK
thanks//
it,s my pleasure
//asiya omar
நல்ல பயனுள்ள பதிவு.ஏற்கனவே நான் இந்த காப்பி ரைட் வாங்கியிருக்கிறேன்,ஆனால் my free copyright logo வை என் ப்ளாக்கில் இணைக்கவில்லை.//
உங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே!
//hayyram
gud post
regards
ram
www.hayyram.blogspot.com//
Thanks for your comment ram.
//KaruppuSwamy Thangaraj
பதிவுக்கு மிக்க நன்றி. இந்த வலைத் தளம் வழங்கும் காப்புரிமைக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் இருக்கிறதா? யாராவது சொன்னால் நல்லது!//
இது சட்டப்பூர்வமான அங்கீகாரம் தான்.
Post a Comment
தமிழ் எழுத