முப்பரிமான தொலைக்காட்சிகள் ஒரு பார்வை:-

சமீபத்தில் தான் லாஸ் வேகஸ்ஸில் நுகர்வோர் மின்ன‌ணுவியல் பொருட்காட்சி நடந்தது அதாவது Consumer Electronics Show . அந்த பொருட்காட்சியில் U.S தனது உலகளாவிய அற்புதமான தயாரிப்புகளை வெளிப்படுத்தியது முக்கியமாக முப்பரிமாண தொலைக்காட்சிப் பெட்டிகள். இதில் பல முன்னணி நிறுவனங்களான Panasonic, Sony, Samsung, Toshiba மற்றும் LG ஆகியோர் ஒன்றாக சேர்ந்து தரமான முப்பரிமாண தொலைக்காட்சிகளை வரும் ஆண்டில் வெளியிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.சரி இப்பொழுது முப்பரிமாண தொலைக்காட்சி என்றால் என்ன என்பதைக் காண்போம்.

முப்பரிமாண தொலைகாட்சி என்றால் அளவிலும்,நீளத்திலும்,அகலத்திலும் ஒரு தரமான, நிஜம் போல் தோன்றும் பொய்க் காட்சி. இப்பொழுது முப்பரிமாண படங்கள் அனைவராலும் மிகவும் கவரப்பட்டு வருகிறது, முக்கியமாக "அவதார்" திரைப்படத்திற்கு பிறகு. முப்பரிமாணம் என்பது திரைப்படத்தோடு நின்று விடாது அல்லவா! எனவே இதற்கு அடுத்த கட்டமாக முப்பரிமாண தொலைகாட்சி புனையப்பட்டுள்ளது (invention:) இந்த முப்பரிமாணம் பற்றி John Landau (அவதார் படத்தின் தயாரிப்பாளர்) கூறுகையில் "இந்த முப்பரிமாணம் என்பது எல்லா இடத்திலும் ஒரு ஒலி அலையைப் போல் இருக்கும்" என்கிறார்.

முப்பரிமாண தொலைகாட்சி:-
நாம் முப்பரிமாண திரைப்படங்களை ஒரு மூக்குக்கண்ணாடி மூலம் பார்ப்பது போல இந்த முப்பரிமாண தொலைக்காட்சிப் பெட்டியை காணவும் ஒரு மூக்குக்கண்ணாடித் தேவை. இந்த தொலைகாட்சிகள் அனைத்தும் இந்த ஆண்டில் வெளியிடுவதாக எதிர்பார்க்கப் படுகிறது.
இதே ஆண்டில் இந்த தொலைக்காட்சிக்கு தேவையான Blue-ray player போன்ற துணை‍‍சாதனங்களும் (sub devices) வெளியிடப்படும்.
இந்த ஒளித்தோற்றத்தை பாருங்கள் - http://magic.sc-streaming.com/player/shell.asp?campaignID=177_7245

3D OLED TVs:-
3D OLED(Organic Light Emitting Diode) என்பது முப்பரிமாண தொலைக்காட்சியை விட மிக மிக துல்லியமாக அழகாக காண்பிக்கக் கூடிய தொழில்நுட்பம்.

மேலும் அறிய‌ இந்த ஒளித்தோற்றத்தை பார்க்கவும்:-http://magic.sc-streaming.com/player/shell.asp?campaignID=177_7085

மூக்குக்கண்ணாடி இல்லாமல்:-
இந்த தொலைகாட்சியில் மிக மிக நமக்கு தொல்லை கொடுக்கும் செயல் மூக்குக்கண்ணாடி அணிவது. அவ்வாறு நாம் தினமும் மூக்குக்கண்ணாடி அணிந்து பார்த்தால் அந்த தொலைக்காட்சி நமக்கு "தொல்லைக்"காட்சி ஆகிவிடும். இதுவே நாம் மூக்குக்கண்ணாடி அணியாமல் பார்த்தால்.......இந்த ஒளித்தோற்றத்தைப் பாருங்கள்:-http://magic.sc-streaming.com/player/shell.asp?campaignID=177_7274

இப்பொழுது பல நிறுவனங்கள் தயாரித்த முப்பரிமாண தொலைக்காட்சிகளைப் பற்றி பார்க்கலாம்

Toshiba Cell TV:-
டோஷிபா நிறுவனம் இந்த ஆண்டில் பத்து முப்பரிமாண தொலைக்காட்சிகள் வெளியிடுவதாக கூறியது. அதில் இந்த Cell TV-யும் ஒன்று.Toshiba Genesis மற்றும் Toshiba Illusion இவை இரெண்டும் LED TVs வகையை சேர்ந்தது. இது இருபரிமாணம் சார்ந்த தொகுப்பகளை முப்பரிமாணமாக மாற்றி நம் கண் முன் தோன்ற வைக்கும். இதனால் நாம் சாதாரணமாக காணும் அனைத்து நிகழ்சிகளை முப்பரிமாணமாக காணலாம்! இதைப் பற்றி மேலும் அறிய இந்த படத்தை காணவும்:- http://magic.sc-streaming.com/player/shell.asp?campaignID=177_6980

Panasonic 3D TV:-

இந்த நிறுவனம் மட்டுமே முப்பரிமாண தொலைக்காட்சிக்குத் தேவையான அனைத்து துணைச் சாதனங்களும் வழங்குகிறது. உதாரணத்திற்கு முப்பரிமாண புகைப்படக் கருவி என அனைத்தும். அதுவும் Direct TV என்னும் நிறுவனத்துடன் சேர்ந்து. இந்த நிறுவனம் U.S-இல் அமைந்து உள்ளது. இதன் நோக்கம் மக்களிடம் முப்பரிமாண சாதனங்களை ஒளிபரப்புவது.

Panasonic 152-inch Full HD 3D plasma TV:-

இது தான் உலகத்திலேயே மிகப் பெரிய plasma திரை தொலைக்காட்சி. இந்த 152 அங்குலம் இந்த‌ தொலைக்காட்சி 3D மற்றும் HD வடிவில் காண தயாராகிவிட்டது.
. இது 4,096x2,160 படத்தினமம் பிரிதிறன் (pixel resolution) கொண்டது. இதனைக் குறித்து panasonic கூறுகையில் "இது ஒரு புரட்சிகரமான plasma display panel (PDP) அதுவும் இரண்டு மடங்கு பிரகாசமுள்ள வினைத்திரன் (efficiency) கொண்ட தொழில்நுட்பம்" என்று கூறியது.

Sky 3D TVs:-

இந்த sky நிறுவனம் தங்களது முப்பரிமாண தொலைக்காட்சியை U.K-வில் வீட்டிற்கு வந்து தருகிறதாம். அதுவும் sky U.K இந்த ஆண்டில் sky 3D channel என்னும் முப்பரிமாண நேரலை அலைவரிசையை (channel) துவங்க இருக்கிறதாம். Sky+HD DVR box என்னும் கருவி மூலம். இந்த கருவியை பொருத்துவதற்கு முப்பரிமாணம் உள்ள தொலைக்காட்சி தேவை!


Sony Bravia 3D and HD TVs:-

Sony நிறுவனம் இந்த ஆண்டில் braiva தொலைக்காட்சிப் பற்றி அனைத்து விவரங்களையும் வெளியிட்டது. மேலும் இந்த தொலைக்காட்சியில் wifi வசதியும் உண்டு. இது "monolithic design" என்னும் தொழில்நுட்பத்தால் ஆனது. இந்த தொலைக்காட்சிப் பற்றி விவரங்கள் அறிய:-http://www.sony.co.in/microsite/bravia/index.html?cid=bravia:smo

LG 3D TV projector:-
இந்த முப்பரிமாண படம் காட்டும் கருவி (projector) HD 1080p என்ற பிரிதிரன் (resolution) அளவில் அதுவும் 100Hz அளவில் காண்பிக்கிறது. இந்த LG CF3D தான் உலகத்திலேயே முதல் HD 3D படம் காட்டும் கருவி.

LG 3D TVs:-
LG நிறுவனம் அந்த பொருட்காட்சியில் தங்களது முப்பரிமாண தொலைக்காட்சியான LE9500 பற்றி கூறினார்கள். இந்த தொலைக்காட்சி மட்டுமே முப்பரிமாணத்தை துல்லியமாக, அழகாக காண்பிக்க கூடியது என்றும் கூறினார்கள். மேலும் இது 47 மற்றும் 55 அங்குலத்தில் சில காலம் கழித்துதான் கிடைக்கும்.

முடிவுரை:-
  • முதலில் முப்பரிமாண தொலைக்காட்சியில் பார்க்க முப்பரிமாண அலைவரிசைகள் (channels) இருக்க வேண்டும்.
  • நாம் என்னதான் இரு பரிமாணத்தை முப்பரிமாணமாக மாற்றி பார்த்தாலும் முப்பரிமாணத்தின் தரம் வராது.
  • பிறகு இதில் இருக்கும் பெரிய தொல்லை முப்பரிமாண மூக்குக்கண்ணாடி அணிவது.

ஆனால் நாம் என்னதான் குறை கூறினாலும் எதிர்காலத்தில் கலைஞரைப் போல அனைவருக்கும் முப்பரிமாண தொலைகாட்சியை வழங்கும் முதல்வர் வரத்தான் போகிறார் (அவரு நல்லா இருக்கணும்:).

4 கருத்துரைகள்:

What about Samsung 3d televisions?.. there have released first 3d TVs in many part of the world...

எனக்கு அந்த Panasonic 152-inch வேணும்

நல்லயிருக்கு

//compare 3d tv
What about Samsung 3d televisions?.. there have released first 3d TVs in many part of the world...//

you are absolutely correct but in samsung 3D quality is not good:)

//ஜில்தண்ணி
எனக்கு அந்த Panasonic 152-inch வேணும்
நல்லயிருக்கு//

அவ்வளுதானே வாங்கிடுவோ!ஆனால் அதுக்கு உங்கள் கையில காசு இருக்கணுமே அப்படி இருந்தா வாங்கி விடலாம் கவலைப்படாதீர்!

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...