sandboxie........ அப்படி என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியாது என்பது எனக்கு தெரியும் (தெரிந்தவர்கள் மேலும் படியுங்கள்:). அதனால் அதனை பற்றி ஓர் சிறிய தொடக்கம். Sandboxie என்பது ஓர் அருமையான மென்பொருள்.அது நீங்கள் நிறுவப்போகும் ஒவ்வொரு மென்பொருளையும் மற்ற நிரல்களுக்கு மற்றும் உங்கள் கணினிக்கு பாதிப்பு உண்டாக்காமல் கட்சிதமாக நிறுவ உதவும். ஒரு வேலை நீங்கள் நிறுவப் போகும் மென்பொருளில் ஏதுனும் தவறு அல்லது வைரஸ் கண்டறிந்து அது உங்கள் கணினிக்கும் மற்ற நிரல்களுக்கும் பாதிப்பு உண்டாக்கும் என்று கருதினால் இந்த மென்பொருளை வைத்து நீங்கள் விரும்பும் மென்பொருளை நிறுவுங்கள் பிரச்சனை முடிந்தது. அது மட்டும் இல்லாமல் நீங்கள் இணையத்தில் யாருக்கும் தெரியாமல் உலாவ விரும்பினால் அந்த உலாவியை இந்த மென்பொருளை கொண்டு நிறுவி சுலபமாக மற்றவர்கள் கண்களில் மண்ணை தூவிவிட்டு உலாவலாம் ! இதனால் உங்கள் கணினியும் அதில் உள்ள நிரல்களும் பத்திரமாக இருக்கும். மேலும் நீங்கள் ஒரு மென்பொருளை நிறுவினால் அதனால் சில மாற்றங்கள் கணினியில் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் அந்த மாற்றங்கள் மற்ற நிரல்களிலும் செயல்படும் இது போன்ற செயலினை தடுக்க இந்த மென்பொருள் மிகவும் உதவும்.இன்னும் புரியும் படி சொல்ல வேண்டுமானால் இல்லை இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்... (இதுக்கு மேல எனக்கு விளக்க தெரியல அவ்!)
image source :- Sandboxie.com
மேலும் விவரங்களுக்கு மற்றும் தரவிறக்கத்திற்கு (கவலைபடாதிங்க இலவசம்தான்:) :- http://www.sandboxie.com/
3 கருத்துரைகள்:
தெரியாத தகவல். பகிர்ந்ததற்கு நன்றி.
Thanks for useful info
Super Info.....
By http://hari11888.blogspot.com
Post a Comment
தமிழ் எழுத