விண்டோஸ் நிரல்களை லினக்ஸ்ஸில் நிறுவுவது எப்படி?

How to install windows programs in linux?நிறைய நபர்களுக்கு லினக்ஸ் பிடிக்காமல் விண்டோஸ் இயக்குதளத்தையே பயன்படுத்துவதற்கு முக்கிய காரணம் விண்டோஸ் நிரல்களை (program)  லினக்ஸ் இயக்குதளத்தில் நிறுவ முடியாது என்பதன் காரணமாகத்தான். இதனை சரி செய்யும் வகையில் லினக்ஸ் இயக்குதளத்தில் இந்த மென்பொருளை நிறுவினால் போதுமானது! இதனை நான் பயன்படுத்தி பார்க்கும் போது மிக நன்றாக வேலை செய்தது. இதில் நான் winamp,vlc,MS office என நாம் அன்றாட விண்டோஸ் இயக்குத்தலத்தில் பயன்படுத்தும் மென்பொருளை பயன்படுத்தி பார்த்தேன் ம்ம்ம்ம்.... வேலை செய்தது ஆனால் மிகப் பெரிய மென்பொருள்கள் அதாவது வரைகலை (graphics) மிகுதியாக இருக்கும் மென்பொருள் வேலை செய்யவில்லை. மேலும் இதில் நான் நிகழ்பட விளையாட்டை நிறுவி பார்க்கவில்லை அதனால் நீங்கள் இதனை பயன்படுத்தி எனக்கு கூறுங்கள்! 
இந்த மென்பொருளை உங்கள் லினக்ஸ் இயக்குதளத்தில் நிறுவ :- http://www.winehq.org/download/

கவனிக்க:- இந்த மென்பொருள் ஆப்பில் ,சொலாரிஸ் என பல இயக்குதளங்களில் வேலை செய்யும்! அதனால் இதனை வைத்து கொண்டு எந்த இயக்குதளத்திலும் விண்டோஸ் நிரல்களை நிறுவலாம்!

2 கருத்துரைகள்:

நன்றி பயனுள்ள பதிவு

"எனது சந்தேகங்கள்" என்ற பதிவிட்டுள்ளேன்
உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்


http://speedsays.blogspot.com/2011/03/blog-post.html

@Speed Master
கருத்துக்கு நன்றி நண்பரே மற்றும் உங்களது பதிவு நான்றாக உள்ளது!

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...