Format Factory:-
இந்த மென்பொருள் என் நண்பன் என்னிடம் கொடுத்தது. அதனை நான் ஒரு வருடமாக பயன்படுத்தி வருகிறேன். மற்ற மென்பொருளை விட இது வேகமாக ஒரு உருமாட்டில் (Format) இருந்து மற்றொரு உருமாட்டில் மாற்றுகிறது மற்றும் இந்த மென்பொருளை வைத்துக்கொண்டு எல்லா விதமான நிரல்களையும் (பெரும்பாலானவை!) ஒரு உருமாட்டில் இருந்து மாற்றொரு உருமாட்டில் மாற்றிக்கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒளித்தோற்றம் (video), பாட்டு (audio), படிமம் (image), DVD-இலியிருந்து ISO, ஒளித்தோற்ற இணைப்பி (video joiner), பாட்டு இணைப்பி (audio joiner) என அனைத்தும் ஒரே மென்பொருளில் செய்து கொள்ளலாம்! பயன்படுத்துவதற்கும் எளிதாக உள்ளது.
அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய :- http://www.formatoz.com/
நிரல்களை ஒரு உருமாட்டில் இருந்து மற்றொரு உருமாட்டில் எப்படி மாற்றுவது? (கீழ்கண்ட ஒளித்தோற்றத்தை பார்க்க)
1 கருத்துரைகள்:
thanks you for the gud info
Post a Comment
தமிழ் எழுத