நெருப்பு நரியில்(firefox) ஏராளமான கூட்டு உருபுகள்(addon) இருந்தாலும் அதில் நமக்கு தேவையானவற்றை கண்டறிவது சிறிது கடினமே!இதில் இன்னொரு சுவாரசியமான செய்தி என்னவென்றால் நெருப்பு நரி தனது கைப்பேசி உலாவியை(mobile browser) அறிமுகம் செய்ய போகிறது.அதனை பற்றிய விரிவான கட்டுரையை இங்கு படிக்கவும் http://news.bbc.co.uk/2/hi/technology/8425906.stm.இப்பொழுது நாம் நெருப்பு நரியின் 15 கூட்டுறுபுக்களை காண்போம்........:)
No Script:-
இந்த கூட்டுறுப்பு ஒரு வலைத்தளத்தில் இருக்கும் ஸ்க்ரிப்டை(script) மறித்து உங்கள் தேடல்களை வேகமாகவும்,எளிதாகவும் ஆக்க உதவும்.
Ad-block:-
நமக்கு அதிகமாக தொல்லை கொடுப்பது இந்த விளம்பரங்கள் தான் அதனை இந்த கூட்டுறுப்பு மறித்து உங்கள் தொல்லையை நீக்கி விடும்!
Cooliris:-
படம்(image),ஒளித்தோற்றம்(video) போன்றவற்றை தேட இது மிகவும் உதவும்!மேலும் இதன் 3d மிக அருமையாக இருக்கின்றது.
IE-tab:-
இன்னும் சில பல வலைத்தளங்கள் internet explorer உலாவியைக் கொண்டுதான் பார்க்க முடிகிறது.அதற்காக நாம் ஒரு தனி சன்னலை துறந்து IE மூலம் தேடுவோம்.இது போன்றவற்றை தடுக்க நீங்கள் வெறும் open this link in IE tab என்று சொடுக்கினால் போதுமானது நெருப்பு நரி தானாகவே தனது உலாவியில் துறந்து விடும்.
scribe fire:-
இது நம்மை போன்ற ஆட்களுக்கு மிகவும் உதவும்.இதன் மூலம் நாம் நெருப்பு நரியில் இருந்து கொண்டே நம் வலைப்பூவிற்கு பதிவுகளை இடலாம்.இதற்காக நாம் ப்ளாகர் கணக்கிற்கு போக வேண்டிய அவசியம் இல்லை!
Video Download Helper:-
இது ஒரு அருமையான கூட்டுறுப்பு.இது you tube,google videos போன்ற ஒளித்தோற்றங்களை நேரடியாக தரவிறக்கம் செய்ய உதவும் மற்றும் படங்களையும்(image) தரவிறக்கம் செய்ய உதவும்.
Page Title Eraser:-
நீங்கள் தேடுவதை மற்றவர்கள் பார்க்கக்கூடாது என்று விரும்புவர்கள் இந்த கூட்டுருபை பயன் படுத்த வேண்டும்.இது நாடாக்களில்(tab) உள்ள தலைப்பினை அழித்து விடும்(படத்தில் காணப்படுவது போல).இதனால் மற்றவர்கள் நீங்கள் என்ன தேடிக்கொண்டு இருக்கீறீர் என மண்டையை பிய்த்துக் கொள்வார்கள்!
Skip Screen:-
இனிமேல் நாம் காத்திருந்தது போதும்! ஏனென்றால் இது rapidshare,mediafire,megaupload என அனைத்திலும் உள்ள காத்திருப்பு நேரத்தை தள்ளி நமது தரவிறக்கத்தை எளிதாக்க உதவும்!(இதனை கேட்கவே உங்களுக்கு இனிமையாக இருக்கும்!)
Colo Unread Tabs:-
இந்த கூட்டுறுப்பு நீங்கள் படிக்காத நாடாக்களை(tab) சிகப்பு மையினால் காட்டும்.
Click Cutter Auto Search:-
நீங்கள் வெறும் ஒரு சொல்லை கவன்யீர்புச்(highlight) செய்தால் போதுமானது அது தானாகவே நகல் எடுத்து(auto copy) கூகுளில் தேட வேண்டுமா அல்லது யாகூவை தேட வேண்டுமா என உங்களிடம் கேட்கும்! இதன்மூலம் நீங்கள் தனியாக கூகிள் அல்லது யாஹூவில் சென்று தேட அவசியம் இல்லை.
Download Statusbar:-
நாம் தரவிறக்கம் செய்யும் அனைத்தயும் நெருப்பு நரியில் உள்ள நிலைமைப் பட்டையில்(status bar) தரவிறக்கம் நிலையை அழகாக காட்டும் இதற்காக தனி சன்னலில் தரவிறக்கம் செய்து நேரத்தை வீணாக்காதீர்!
தமிழ் விசைப்பலகை:-
இந்த கூட்டுறுப்பு மூலம் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சலாம்.
Colour Tabs:-
இது ஒவ்வொரு நாடாக்களையும் வண்ணமயமாக காண்பிக்கும்
Click Cutter Autocopy:-
நீங்கள் நகல் எடுக்க விரும்பும் சொல்லை வெறும் கவன்யீர்புச்(highlight) செய்து வலது பக்கச் சொடுக்கியை(right click) சொடுக்கினால் போதுமானது அதுவே தானாக நகல் எடுத்து விடும்.
Tab Wheel Scrool:-
இது நீங்கள் அவிழ்த்துவிட்ட நாடாக்களை(tab) சொடுக்கியின் உருட்டியின் மூலம் உருட்டினால் நாடாக்களை நீங்கள் திருப்பலாம்.
மேலே உள்ள அனைத்து கூட்டுறுபுக்களும் உங்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.இதனைப்பற்றிய ஏதேனும் சந்தேகம் இருந்தால் கிழே உள்ள கருத்துரைப்பெட்டியில் உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள்!
2 கருத்துரைகள்:
பயனுள்ள பதிவு. நன்றி.
super...very nice cinna payyan keep it up
Post a Comment
தமிழ் எழுத