கீழேவிவரிக்கப்படுள்ள
குழுவின் மூலம் உங்களின் சுயதொழிலுக்கு
தேவையான நிதிகளை அரசு மற்றும்
தனியார் நிறுவனங்களின் வாயிலாக பெறலாம்.
1) நுண்
சிறு இடைநிலை வணிக முயற்சி
(Micro Small Medium Enterprise[MSME], இந்தியஅரசு:
இந்த முயற்சி மூலம் உங்களின்
தொழில் முனைவை இந்திய அரசின்
அங்கீகரிக்கப்பட்ட தொழில்வளர்ப்பு மையங்களின் வழியாக உங்களது விளைப்பொருள்/சேவைகளுக்கு(product/service) தேவையான நிதியை பெற்றுகொள்ளலாம்.
2)TREC-அறிவியல் & தொழில்நுட்ப சுயதொழில் பூங்கா [TREC - STEP ( Trichy Regional Engineering College-
Science & Technology Entrepreneurship Park)]:
இந்த சுய தொழில் முனைவர்
பூங்கா திருச்சியின் தேசிய தொழில்நுட்ப கல்விக் கழகம்(NIT) அருகில் அமைந்துள்ளது.
இப்பூங்கா பல பன்னாட்டு நிறுவனங்களுடன்
சேர்ந்து செயல்படுகிறது. இதன்மூலம் உங்களுடைய தொழில் முனை வடிப்புகள்(ideas)
தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுத்தபடுகின்றன.
3) ஊடக ஆய்வுக்கூடம் ஆசியா (Media Lab Asia) :
இந்நிறுவனம்
பல விளைப்பொருள்/சேவைகளை(product/service) தாமாகவே உருவாக்கி அதனை
லாபநோக்குடன் உபயோகபடுத்துகிறது. இதே விளைப்பொருள்/சேவைகளை(product/service) நீங்கள்
உங்களின் தொழில்முனை யூக்தியொடு சேர்த்து பயன்படுத்தினால் உங்களுக்கும் இந்த மையம் ஊக்க/வைப்பு நிதியை வழங்கும்.
4) புதிய
தொழில்முனைவு-முயற்சி கழகம் இந்தியா
( New Ventures India ) :
நீங்கள்
சமூக-சுற்றுசூழல்(socio-environment) தொடர்பான விளைப்பொருள்/சேவைகளை செய்ய துடிக்கும்
ஆவலராக இருந்தால் இக்கழகத்தின் மூலம் உங்களது வடிப்புகளை
செயலாக்கலாம்.
5) முனை
துவக்கம் ( Headstart):
இது ஒரு தனிப்பட்ட குழுமமாக
செயல்பட்டு சுயதொழில் முனைவர்களை இணைக்கும் மேடையாக இயங்கி வருகிறது.
இக்குழுவின் வாயிலாக உங்களுடைய சுயதொழிலில்
ஏற்படும் சிறுபெரு இடையூறுகளை பற்றியும் விவாதிக்கலாம். வல்லுனர்களின் ஆலோசனையும் பெறலாம். கூகிள் குழுவும் இதற்காக
உள்ளது.
6)தேசிய சுயதொழில் -முனைவு கட்டமைப்பு (National Entrepreneurship Network):
இக்குழுவின்
மூலம் எல்லாவிதமான சுயதொழில்களுக்கு தேவையான ஊக்க/வைப்புநிதிகள்,
பன்னாட்டு வர்த்தகமையங்களின் வாயிலாக வழங்கப்படுகின்றன. உங்களது
வடிப்புகளை இக்குழுமத்திற்கு கொண்டு சென்றால் அவர்கள்
அதனை செயல்வடிவமாக்குவதற்கான வழிவகைகளை வகுத்துரைப்பார்கள்.
1 கருத்துரைகள்:
மிகவும் பயனுள்ள blog. நன்றி Imran அவர்களே!
Post a Comment
தமிழ் எழுத