இது ப்ளாகர் அடுத்ததாக செய்ய இருக்கும் புதிய தொழில்நுட்பத்தோடும்,சகல வசதிகளோடும் காணப்படும் ஒரு புதிய ப்ளாகர் எனவும் கூறலாம்!இதற்கு நீங்கள் draft.blogger.com என்னும் முகவரிக்கு செல்ல வேண்டும்.அந்த பக்கத்தை நீங்கள் ப்ளாகரின் இயல்பு நிலை டஷ்போர்டாகவும்(default dashboard) மாற்றிக்கொள்ளலாம்.
இதனின் சிறப்பு அம்சங்கள்:-
நமக்கு அதிகம் தேவைப்படும் மேலும் படிக்க(read more),நட்சத்திர தரமிடல்(star rating),பதிவுகளுக்கு கிழே கருத்துரைப் பெட்டியை சேர்க்க என அனைத்து வசதிகளுடன் இது காணப்படுகிறது.
இப்பொழுது மேலும் படிக்க வசதியை எப்படி சேர்ப்பது என்று பார்ப்போம்...
இப்பொழுது உங்களுக்குள் ஒரு கேள்வி எழும் அதாவது "சின்ன பையன் இதை எல்லாம் சொல்லிட்டான் ஆனா இந்த read more என்கிற ஆங்கில வார்த்தையை தமிழ் வார்த்தையாக மாத்துற முறைய சொல்ல மறந்துட்டானே "என்றெல்லாம் கேள்விகள் எழும் அதற்கும் விடை இருக்கின்றது கவலைப்படாதீர்கள்!
அதற்கு முதலில் layout-->page elements-ற்கு செல்லவும்.அங்கு blog post என்ற இடத்தில் edit என்பதினை அழுத்தவும்.அழுத்தியவுடன் இதோ கிழே உள்ள படத்தை போல தெரியும்.அதில் உள்ள read more என்னும் எழுத்தை தமிழில் மாற்றிக்கொள்ளுங்கள்.
"இருங்க! இருங்க! உடனே மூடி விடாதிங்க அதற்கு கிழே தான் நட்சத்திர தரமிடல் நிரல்பலகை (star rating widget) இருக்கின்றது"இதனை நீங்கள் உங்கள் பதிவுகளில் சேர்ப்பதன் மூலம் வாசகர்கள் உங்களது பதிவுகளை மதிப்பிடுவார்கள்.
இப்பொழுது எனக்கு விசைப்பலகையை தட்டி! தட்டி! கை வலிக்கிறது அதனால் இதனின் பல வசதிகளை அடுத்த பதிவுகளில் காண்போம்:)
2 கருத்துரைகள்:
பகிர்விற்கு நன்றிகள் நண்பரே! தொடருங்கள். வாழ்த்துக்கள்.
பயனான பகிர்வுக்கு நன்றி.
Post a Comment
தமிழ் எழுத