ஜில்லா விட்டு ஜில்லா வந்த.......! (சில பிரச்சனைக்கு தீர்வு!)

Audio and subtitle synchronization in VLC :-
இன்று நான் ஒரு ஒளித்தோற்றத்தை (video) கடினப்பட்டு தரவிறக்கம் செய்தேன் அது வேறு ஒன்றும் இல்லை ஈசன் படத்தில் வரும் ஜில்லா விட்டு.....  என்னும் பாட்டுத்தான்.அதில் நடனக்கலை நன்றாக உள்ளதே என எண்ணி உயர்ந்த தரத்தில் தரவிறக்கம் செய்தேன். சில நிமிடங்களுக்கு பிறகு தரவிறக்கம் செய்த ஒளித்தோற்றத்தை திறந்து பார்த்தேன். பார்த்த எனக்கு கணினியை நொறுக்கும் அளவிற்கு கோபம் வந்தது, காரணம் அப்பாட்டில் இசைத்த ஒளியானது பாட்டிற்கு சம்பந்தம் இல்லாமல் தனியாக கேட்டதுதான்! சரி என்ன செய்வது என எண்ணி இதற்கான விடையை கண்டறிய கூகுளை நாடினேன். எப்படியோ திக்கித் திணறி தத்தளித்து விடையை கண்டறிந்தேன்.
அதனை செயல்படுத்தி பார்த்த போது நல்ல பலன் கிட்டியது.

இப்பொழுது அதனை எப்படி சரி செய்வது என கூறுகிறேன் (இது VLC ஊடக இயக்கிக்கு மட்டும் பொருந்தும்).
முதலில் அந்த ஒளித்தோற்றத்தை VLC ஊடக இயக்கியில் திறந்து வையுங்கள். பிறகு Tools --> Track synchronization --> Advance of audio over video  சென்று நான் சொல்வது போல  மாற்றுங்கள். 
உங்கள் ஒளித்தோற்றம்  முதலில் ஒலி எழுப்பினால் அதாவது அங்கு நிகழும் அசைவுக்கு முன்பு ஒலி எழுப்பினால் மேல் பொத்தானை அழுத்தவும் அல்லது   இதற்கு நேர் மாறாக வந்தால் கீழே உள்ள பொத்தானை அழுத்தவும் (அது சரியாகும் வரை அழுத்தவும்).

சில நேரங்களில் நாம் படம் பார்க்கும் போது துனைமொழியானது (subtitle)  அவர்கள் பேசிய பிறகு பொறுமையாக வரும் அதனை நீங்கள் கீழே உள்ள subtitles/video என்னும் பிரிவில் சரி செய்து கொள்ளலாம்.

4 கருத்துரைகள்:

நல்ல தக்வல் நன்றி

இன்று எனக்கும் உதவியது. தரவிறக்கிய படம் பாதி வரை ஆடியோ ஒழுங்காக வந்தது. பின்னர் ஆடியோ முன்னே செல்லவும் இந்த பதிவைப் பார்த்துவிட்டு மாற்றம் செய்தேன். பிறகு சரியாக ஆடியோவினைக் கேட்டு படத்தை ரசித்தேன். இதற்கு முன்னர் ஒரு படத்தில் இதே பிரச்சினை வந்த போது எப்படி சரிசெய்வது எனத் தெரியாமல் தலைவலியோடு பார்த்து முடித்தேன். பதிவிற்கு நன்றி.

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...