வரைகலைக்கு தொடர்பான அனைத்து பொருள்களும்...!


என்னிடம் எப்பொழுதாவது சரக்கு தீர்ந்து போனால் என் அண்ணனிடம் கேட்பது வழக்கம்... சொல்லப் போனால் இங்கு இருக்கும் பெரும்பாலான மென்பொருட்கள் என் அண்ணன் என்னிடம் கூறியது. அவ்வாறு நான் எதாவது செய்தி இருக்கிறதா என கேட்டபோது ஒரு  தளத்தின்  முகவரியினை கொடுத்தார்.

அத்தளத்தில் வரைகலைக்கு  தொடர்பான அனைத்து மென்பொருள்களும், இணைப்புகளும்,ஒளித்தோற்ற பயிற்சி, மின் புத்தகம் என அனைத்தும் இருந்தது. அது உங்களுக்கு பயன்படும் என எண்ணினேன். இதோ அந்த முகவரி

இத்தளத்தில் நீங்கள் HTML,PHP,CSC,Photoshop என அனைத்தும் மின் புத்தகம் மூலமோ அல்லது நிகழ்பட பயிற்சியின் மூலம் கற்றுத்தேறலாம். மேலும் இங்கு Wordpress பதிவர்களுக்கு தேவையான பலகைகளும், புதிதாக இணைய தளம் உருவாக்குபவர்களுக்கு தேவையான பலகைகளும், குறும்படம் (icon ), காவி வரைகலை (vector graphics ) என அனைத்தும் கிடைக்கிறது.

இத்தளத்தில் குறிப்பாக Lynda ஒளித்தோற்ற பயிற்சி நிறைய இருக்கிறது. இந்த Lynda ஒளித்தோற்ற பயிற்சி ஏறக்குறைய நாம் பயன்படுத்த கடினம் என்று நினைக்கும் அனைத்து மென்பொருளையும் சின்ன பையனுக்கு :) சொல்லித்தருவது போல சொல்லித்தரும்!

மேலும் இத்தளத்தை போன்று வேறு சில தளங்கள் உள்ளன. அதனை காண...
இப்பொழுது நீங்கள் சென்ற தளமானது, அதாவது http://www.similarsites.com/ தளமானது நீங்கள் தேடிய இணையதளம் போன்று வேறு ஏதாவது தளம் இருக்கிறதா என தேடிக் கூறும்.

2 கருத்துரைகள்:

இது போல் பல தளங்கள் உள்ளது. எனக்கு தெரிந்தது சில,
http://www.viethak.com/
http://gfxvn.net/
பெரும்பாலும் இது போன்ற தளங்களின் பதியப்பெறும் விசயங்கள் ஒரே மாதிரியாகவே இருக்கும். இத்தளங்களில் சின்ன பையன்(?) நுழையும் போது அடல்ட் ஒன்லி படங்களை பார்க்க நேரிடும்.

பகிர்வுக்கு மிக்க நன்றி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

Post a Comment

தமிழ் எழுத

Related Posts Plugin for WordPress, Blogger...