உங்களுடைய பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடம் சுலபமாக பகிர்ந்துக்கொள்வது எப்படி?

How to share your facebook profile easily to others?

அவரவர் வீட்டில் இணைய இணைப்பு இருக்கிறதோ? இல்லையோ? ஆனால் அவர்களிடத்தில் பேஸ்புக் கணக்கு மட்டும்  நிச்சயமாக இருக்கும். ஒரு ஐந்து வயது சிறுவனிடத்திலும் பேஸ்புக் கணக்கு இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு சென்று பார்த்தால் கூகுளின் ஆர்குட் தான் மிக மிக பிரபலமாக  இருந்தது  ஆனால் இப்பொழுது அது தலைகீழாக மாறிவிட்டது. அமெரிக்காவில் பேஸ்புக் கூகுளை முந்திவிட்டது! என்றெல்லாம் தகவல் வந்தது அந்த அளவிற்கு பேஸ்புக் காய்ச்சல் பரவியுள்ளது.சரி இப்பொழுது விசயத்திற்கு வருவோம்.
பொதுவாக நம் பேஸ்புக் கணக்கின் முகவரி இப்படி இருக்கும்
http://facebook.com/123455669854537.
இதுவே அந்த முகவரி இப்படி இருந்தால் http://www.facebook.com/cpimran மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ள எவ்வளவு வசதியாக இருக்கும்!

இதை எப்படி செய்வது என்ற குழப்பம் உங்கள் மனதில் எழும். அந்த குழப்பத்தை போக்கவே இந்த பதிவு.

1.முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கை திறக்க வேண்டும். பிறகு ACCOUNT ---> ACCOUNT SETTINGS செல்ல வேண்டும்.

2.அங்கு சென்று USERNAME  என்ற இடத்தில் CHANGE என்பதை சொடுக்கவும்.
3. பிறகு உங்கள் தொலைப் பேசி  எண் கேட்கும் அதனை ஒப்படைத்து அது கூறும் வழிமுறையின்படி செய்யவும்,அவ்வளவுதான்!

கடினப்பட்டு விளையாடிய நிகழ்பட விளையாட்டை மீட்பது எப்படி?

How to restore the played games?


என் நண்பன் ஒருவன் ஒரு நிகழ்பட விளையாட்டை ஆர்வமாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன் தன் கணினியில் நிறுவி இருந்தது Windows xp, சில காரணங்களால் அவனது அண்ணன் Windows 7 நிறுவப்போவதாக கூறினான். ஆனால் அவனுக்கோ இவ்வாறு நிறுவினால் தான் கடினப்பட்டு விளையாடிய நிகழ்பட விளையாட்டு அழிந்து விடுமோ? என அஞ்சினான் அதனால் Windows 7-ஐ நிறுவ மறுத்தான். அச்சமயத்தில் எனது இன்னொரு நண்பன் "கவலைப்படாதே என்று கூறி,இதுவரை அவன் விளையாடி முடித்த நிகழ்பட விளையாட்டின் கோப்பை (அது என்ன கோப்பு என்பதை கீழே கூறுகிறேன்) எடுத்து தனது கைவட்டில் (pendrive) சேகரித்தான். Windows 7 நிறுவிய பிறகு அந்த நிகழ்பட விளையாட்டை திரும்பவும் என் நண்பன் நிறுவினான். அதன் பிறகு  தன் கைவட்டில் சேகரித்த கோப்பையை அவனது கணினியில் ஒட்டினான், ஆச்சர்யம் அவன் இதுவரை விளையாடி இருந்த நிகழ்பட விளையாட்டு அழியாமல் அப்படியே இருந்தது.

சரி, இப்பொழுது அது எப்படி அழியாமல் இருந்தது என்று பார்ப்போம் :-

பொதுவாக நாம் இதுவரை விளையாடி முடித்த நிகழ்பட விளையாட்டு அனைத்தும் My documents-யில்அந்த நிகழ்பட விளையாட்டின் பெயரைக் கொண்டு ஒரு கோப்பு இருக்கும்  அல்லது நீங்கள் அந்த நிகழ்பட விளையாட்டை நிறுவிய இடத்தில் Profiles /saved games என்ற கோப்பில் இருக்கும். பிறகு அதனை தனியே உங்களது கைவட்டில் சேகரித்து வைக்க வேண்டும்.
அடுத்த முறை நீங்கள் அதனை நிறுவும் போது கைவட்டில் சேகரித்து வைத்திருந்த கோப்பை எங்கே சேகரித்தீர்களோ அங்கேயே ஒட்டவும். அவ்வளவுதான் வேலை முடிந்தது:)