சோக்கா போடு சட்டைய! (நெருப்பு நரிக்கு மட்டும்) :-

Personas  for firefox :-


நான் பார்த்த வரை அதிக நபர்கள் நெருப்பு நரியை (Firefox) மட்டுமே உபயோக்கிக்கிரார்கள். அதற்கு காரணம் மற்ற உலாவிகளை விட இது நிறைய வசதிகளை பெற்றுள்ளதுதான்! சரி இப்பொழுது விசயத்திற்கு வருவோம்.
நான் இப்பொழுது கூறப்போகும் தளமானது உங்கள் நெருப்பு நரியை மாற்றி அமைக்கும்.அதாவது உங்களுக்கு பிடித்த நடிகர்கள்,  நடிகைகள், இயற்கை காட்சிகள் என எதை வேண்டுமானாலும் உங்கள் நெருப்பு நரிக்கு உடுத்திக் கொள்ளலாம். இது நெருப்பு நரியை மேலும் கவர்ச்சியாக்கும். இதனை நிறுவுவதும் மிக சுலபம்.

கவனிக்க:- நாம் பொதுவாக நெருப்பு நரிக்கு உடுத்தும் சட்டையானது நெருப்பு நரியின் பொத்தான்,நாடா (tab) என அனைத்தையும் மாற்றி விடும். ஆனால் இந்த வகையான சட்டையானது (theme) உலாவியில் உள்ள எதையும் மாற்றாமல் உலாவியின் பின் புறத்தில்  ஒரு புதிய பொலிவினை  தரும் (உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்).

ஜில்லா விட்டு ஜில்லா வந்த.......! (சில பிரச்சனைக்கு தீர்வு!)

Audio and subtitle synchronization in VLC :-
இன்று நான் ஒரு ஒளித்தோற்றத்தை (video) கடினப்பட்டு தரவிறக்கம் செய்தேன் அது வேறு ஒன்றும் இல்லை ஈசன் படத்தில் வரும் ஜில்லா விட்டு.....  என்னும் பாட்டுத்தான்.அதில் நடனக்கலை நன்றாக உள்ளதே என எண்ணி உயர்ந்த தரத்தில் தரவிறக்கம் செய்தேன். சில நிமிடங்களுக்கு பிறகு தரவிறக்கம் செய்த ஒளித்தோற்றத்தை திறந்து பார்த்தேன். பார்த்த எனக்கு கணினியை நொறுக்கும் அளவிற்கு கோபம் வந்தது, காரணம் அப்பாட்டில் இசைத்த ஒளியானது பாட்டிற்கு சம்பந்தம் இல்லாமல் தனியாக கேட்டதுதான்! சரி என்ன செய்வது என எண்ணி இதற்கான விடையை கண்டறிய கூகுளை நாடினேன். எப்படியோ திக்கித் திணறி தத்தளித்து விடையை கண்டறிந்தேன்.
அதனை செயல்படுத்தி பார்த்த போது நல்ல பலன் கிட்டியது.

இப்பொழுது அதனை எப்படி சரி செய்வது என கூறுகிறேன் (இது VLC ஊடக இயக்கிக்கு மட்டும் பொருந்தும்).
முதலில் அந்த ஒளித்தோற்றத்தை VLC ஊடக இயக்கியில் திறந்து வையுங்கள். பிறகு Tools --> Track synchronization --> Advance of audio over video  சென்று நான் சொல்வது போல  மாற்றுங்கள். 
உங்கள் ஒளித்தோற்றம்  முதலில் ஒலி எழுப்பினால் அதாவது அங்கு நிகழும் அசைவுக்கு முன்பு ஒலி எழுப்பினால் மேல் பொத்தானை அழுத்தவும் அல்லது   இதற்கு நேர் மாறாக வந்தால் கீழே உள்ள பொத்தானை அழுத்தவும் (அது சரியாகும் வரை அழுத்தவும்).

சில நேரங்களில் நாம் படம் பார்க்கும் போது துனைமொழியானது (subtitle)  அவர்கள் பேசிய பிறகு பொறுமையாக வரும் அதனை நீங்கள் கீழே உள்ள subtitles/video என்னும் பிரிவில் சரி செய்து கொள்ளலாம்.

டிவிட்டர் பறவை பறக்கும் நிரல் இப்பொழுது வெவ்வேறு நிறங்களில் ப்ளாகருக்காக :-

Twitter bird flying widget for blogger  in different colours :-


-----------------------------
இந்த நிரலை யார் வடிவமைத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இதனை நான் இந்த வலைப்பூவில் கண்டறிந்தேன்
http://vandhemadharam.blogspot.com/2011/04/blog-post.html மற்ற சில தளங்களிலும்.மேலும் இந்த Javascript குறியீடுகளை திருத்த எனக்கு உரிமை இருக்கிறது என எண்ணி இதனை நான் உங்களுக்கு பல நிறங்களில் மாற்றினேன்!
---------------------

இந்த நிரல் மிகவும் வித்தியாசமானது. வாசகர்களை கவர்ந்து இழுக்கக்கூடியது. இதனை நீங்கள் உங்கள் வலைப்பூவில் இணைத்தால் முகப்பு பக்கத்தை தவிர மற்ற பக்கம் அதாவது பதிவுகள் எழுதிய பக்கங்களில் இந்த டிவிட்டர் பறவையானது வாசகர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ (உங்கள் பக்கத்தில் மட்டும்) அங்கெல்லாம் பறந்தது வந்து நிற்கும். அதனை சொடுக்கினால் Tweet this மற்றும் Follow me என்று காட்டும்.இதனால் உங்களுக்கு டிவிட்டரில் பலர் பின்தொடரவும்,டுவீட் செய்யவும் அதிக வாய்ப்பு உண்டு.
இப்பொழுது இதனை எப்படி நிறுவுவது என்று பார்ப்போம்.

1. முதலில் blogger.com செல்லவும்.

2. அதன் பிறகு Design --> Edit HTML செல்லவும்.
 கவனிக்க:- இதனை செய்வதற்கு முன்பு Download full template என்பதனை சொடுக்கி ஒரு தற்காப்பிற்காக பலகைகையை  சேகரித்து வைத்துக் கொள்ளவும்.

3. அங்கு சென்று </body> என்பதனை தேடவும். (Ctrl + F அழுத்தி தேடவும்)

4. அதன் பிறகு கீழே உள்ள குறியீடுகளை சேகரித்து </body> என்ற குறியீட்டின் மேல்  ஒட்டவும்.

இக்குறியீடு நீல நிறப் பறவைக்காக:-

<script src='http://dl.dropbox.com/u/8936154/Flying%20twitter%20bird%20for%20blogger-blue.js' type='text/javascript'>
</script>
<script type='text/javascript'>
var twitterAccount = &quot;Your Twitter Account Name&quot;;
var tweetThisText = &quot; <data:blog.pageTitle/>: <data:blog.url/> &quot;;
tripleflapInit();
</script>


கவனிக்க :-  மேலே உள்ள குறியீட்டில் சிகப்பு மையினால் சுட்டிக் காட்டியதில் உங்களது டிவிட்டர் கணக்கின் பெயரை கொடுங்கள்.

5. ஒட்டிய பிறகு Save template என்பதனை அழுத்தவும் அவ்வளவுதான். 

இந்த நீல நிறப் பறவை பிடிக்கவில்லை என்றால் இந்த பச்சை நிறப் பறவையை பார்க்கவும்:-

இதற்கான குறியீடு:-
                                    
<script src='http://dl.dropbox.com/u/8936154/Flying%20twitter%20bird%20for%20blogger%20-%20green.js' type='text/javascript'>
</script>
<script type='text/javascript'>
var twitterAccount = &quot;Your Twitter Account Name&quot;;
var tweetThisText = &quot; <data:blog.pageTitle/>: <data:blog.url/> &quot;;
tripleflapInit();
</script>

இதுவும் பிடிக்கவில்லை என்றால் இந்த சிகப்பு நிறப் பறவையை பார்க்கவும்:-
இதற்கான குறியீடு:-

<script src='http://dl.dropbox.com/u/8936154/Flying%20twitter%20bird%20for%20blogger%20-%20red.js' type='text/javascript'>
</script>
<script type='text/javascript'>
var twitterAccount = &quot;Your Twitter Account Name&quot;;
var tweetThisText = &quot; <data:blog.pageTitle/>: <data:blog.url/> &quot;;
tripleflapInit();
</script>


கடிசியாக இந்த இளஜ்சிவப்பு நிறம் உங்களுக்கு பிடிக்கும் என எண்ணி.... (முக்கியமாக பெண்களுக்கு!)

இதற்கான குறியீடு :-


<script src='http://dl.dropbox.com/u/8936154/Flying%20twitter%20bird%20for%20blogger-pink.js' type='text/javascript'>
</script>
<script type='text/javascript'>
var twitterAccount = &quot;Your Twitter Account Name&quot;;
var tweetThisText = &quot; <data:blog.pageTitle/>: <data:blog.url/> &quot;;
tripleflapInit();
</script>

 கவனிக்கவும் நண்பர்களே இது போன்று வெவ்வேறு நிறங்களில்  நீங்கள் இணையத்தில் தேடினாலும் கிடைக்காது. இது நான் உங்களுக்கு பயன்படும் என எண்ணி , முயன்று பல வண்ணங்களில் செய்தது. உங்களுக்கு வேறு ஏதாவது நிறங்களில் அல்லது உங்கள் பலகைக்கு ஏற்றவாறு வேண்டும் என்றால் எனது  மின் அஞ்சலிலோ அல்லது கீழே உள்ள கருத்துரை பெட்டியிலோ கேளுங்கள் செய்து தருகிறேன்.இதில் ஏதேனும் பிழை இருந்தாலும் கூறவும்.

you tube ஒளித்தோற்றத்தை நல்ல தரத்தில் தரவிறக்கம் செய்வது எப்படி?



சுத்தி வளைக்காமல் விசயத்திற்கு வருகிறேன். 

1. முதலில் நீங்கள் பார்த்த you tube ஒளித்தோற்றத்தின் முகவரியை சேகரித்து வைத்துக் கொள்ளவும்.

2. பிறகு கீழ்கண்ட முகவரிக்கு செல்லவும் 

3. அங்கு சென்று சேகரித்த முகவரியை url என்ற இடத்தில் ஒட்டி Download என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.

4. சிறிது நேரத்தில் ஓர் pop up வரும் அதில் Run என்பதனை அழுத்தவும். 
கவனிக்க :- pop up வரவில்லை என்றால் உங்கள் உலாவியின் முகவரிப் பட்டையின்  கீழ்  ஓர் குறஞ் செய்தி தோன்றும்  அதாவது pop up-ஐ அனுமதிக்க வேண்டுமா வேண்டாமா என்று அதில் Allow pop ups என்று அழுத்தவும்.
5. கடைசியாக நீங்கள் தரவிறக்கம் செய்ய விரும்பும் ஒளித்தோற்றம் எந்த உருமாட்டில் எந்த தரத்தில் வேண்டும் என்று பட்டியளிடம். அதில் உங்களுக்கு தேவையானதை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
கவனிக்க:- 
இவ்வாறு நீங்கள் தரவிறக்கம் செய்ய இந்த JAVA நிரலை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும். அதனை தரவிறக்கம் செய்ய 


எனக்கு இந்த மாதிரி தலைவலி எல்லாம்  வேண்டாம் பா! (அல்லது)  நீ சொல்லறது ஒண்ணுமே புரியல!  என்று கூறுபவர்கள் இந்த தளத்திற்கு சென்று தரவிறக்கம் செய்யுங்கள்:-
(இத்தளம் அத்தளத்தை போல தலைவலி தராது ஆனால் தரவிறக்கம் செய்ய விரும்பும் ஒளித்தோற்றத்தை நாம் வெவ்வேறு உருமாட்டில் தரவிறக்கம் செய்ய முடியாது! )

புதிய ப்ளாகர் பலகைகள்:-

வரைகலைக்கு தொடர்பான அனைத்து பொருள்களும்...!


என்னிடம் எப்பொழுதாவது சரக்கு தீர்ந்து போனால் என் அண்ணனிடம் கேட்பது வழக்கம்... சொல்லப் போனால் இங்கு இருக்கும் பெரும்பாலான மென்பொருட்கள் என் அண்ணன் என்னிடம் கூறியது. அவ்வாறு நான் எதாவது செய்தி இருக்கிறதா என கேட்டபோது ஒரு  தளத்தின்  முகவரியினை கொடுத்தார்.

அத்தளத்தில் வரைகலைக்கு  தொடர்பான அனைத்து மென்பொருள்களும், இணைப்புகளும்,ஒளித்தோற்ற பயிற்சி, மின் புத்தகம் என அனைத்தும் இருந்தது. அது உங்களுக்கு பயன்படும் என எண்ணினேன். இதோ அந்த முகவரி

இத்தளத்தில் நீங்கள் HTML,PHP,CSC,Photoshop என அனைத்தும் மின் புத்தகம் மூலமோ அல்லது நிகழ்பட பயிற்சியின் மூலம் கற்றுத்தேறலாம். மேலும் இங்கு Wordpress பதிவர்களுக்கு தேவையான பலகைகளும், புதிதாக இணைய தளம் உருவாக்குபவர்களுக்கு தேவையான பலகைகளும், குறும்படம் (icon ), காவி வரைகலை (vector graphics ) என அனைத்தும் கிடைக்கிறது.

இத்தளத்தில் குறிப்பாக Lynda ஒளித்தோற்ற பயிற்சி நிறைய இருக்கிறது. இந்த Lynda ஒளித்தோற்ற பயிற்சி ஏறக்குறைய நாம் பயன்படுத்த கடினம் என்று நினைக்கும் அனைத்து மென்பொருளையும் சின்ன பையனுக்கு :) சொல்லித்தருவது போல சொல்லித்தரும்!

மேலும் இத்தளத்தை போன்று வேறு சில தளங்கள் உள்ளன. அதனை காண...
இப்பொழுது நீங்கள் சென்ற தளமானது, அதாவது http://www.similarsites.com/ தளமானது நீங்கள் தேடிய இணையதளம் போன்று வேறு ஏதாவது தளம் இருக்கிறதா என தேடிக் கூறும்.

இணையப் பக்கத்தை எப்படி pdf உருமாட்டில் மாற்றுவது? (நெருப்பு நரி மற்றும் கூகுள் குரோமிர்க்கு கூட்டுறுபு)

How to change a web page into pdf format? (Firefox addon)


நாம் இணையத்தில் உலாவும் போது சில முக்கியமான இணையப் பக்கங்களை சேகரித்து அல்லது அதனை அடையாளப்படுத்துவது (bookmark) வழக்கம். ஆனால் அவ்வாறு செய்வது நமக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு நீங்கள் அந்த பக்கத்தை சேகரிக்க விரும்பினால் சேகரித்த பக்கமானது இரண்டு கோப்புகளாக உங்கள் கணினியில் இடம்பெறும். அதில் ஒன்று தொலைந்தால் அம்பேல்! அந்த பக்கத்தை அடையாளப்படுத்த விரும்பினால், அந்த பக்கத்தை காண உலாவியை திறந்து அந்த உலாவி அந்த பக்கத்தை திறந்து  நம் கண் முன் நிறுத்தும் வரை நம்மவர்க்கு பொறுமை இருக்காது. அதுவே அந்த பக்கத்தை pdf உருமாட்டில் மாற்றி கணினியில் சேகரித்து வைத்தால் நாம் எப்பொழுது வேண்டுமானாலும் அதனை படித்து கொள்ளலாம்.

அவ்வாறு செய்ய இந்த கூட்டுறுபை நீங்கள் உங்கள் நெருப்பு நரி அல்லது கூகுள் குரோம் உலாவியில் நிறுவ வேண்டும்.
இதனை நிறுவினால் உங்கள் உலாவியில் முகவரிப் பட்டைக்கு அருகில்  ஓர் சிறிய படம் புதிதாக தோன்றும் (மேலே உள்ள படம் போன்று). அந்த படத்தை சொடுக்கினால் நீங்கள் மாற்ற விரும்பும் பக்கத்தை சுலபமாக pdf உருமாட்டில் மாற்றி தரும். நீங்கள் மாற்றிய பக்கம் A4 பக்க வடிவில் இருக்கும்.

இல்லை எனக்கு A7 பக்க வடிவில்  தான் வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களுக்கு  நெருப்பு நரியில் Tools --> Add-ons --> Save as pdf --> Option செல்லவும். அங்கே சென்று உங்கள் விருப்பம் போன்று மாற்றிக் கொள்ளுங்கள். அவ்வாறு மாற்ற அந்த தளத்திற்கு தனியே வெட்ட வேண்டும் (பணத்தை சொன்னேன்!).
கவனிக்க:-  உங்களுக்கு இந்த கூட்டுறுபை நிறுவ விருப்பம் இல்லையென்றால் கீழ் கண்ட தளத்திற்கு தனியே சென்று அந்த இணையப் பக்கத்தின் முகவரியை சேகரித்து  pdf உருமாட்டில் மாற்றி கொள்ளுங்கள்.
http://pdfcrowd.com/

(இவை அனைத்தும் இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே வேலை செய்யும்! )

நிரல்கள் உருமாற்றி (Format converter ) :-


Format Factory:-



இந்த மென்பொருள் என் நண்பன் என்னிடம் கொடுத்தது. அதனை நான் ஒரு வருடமாக பயன்படுத்தி வருகிறேன். மற்ற மென்பொருளை விட இது வேகமாக ஒரு உருமாட்டில் (Format) இருந்து மற்றொரு உருமாட்டில்  மாற்றுகிறது மற்றும் இந்த மென்பொருளை வைத்துக்கொண்டு எல்லா விதமான நிரல்களையும் (பெரும்பாலானவை!) ஒரு உருமாட்டில் இருந்து மாற்றொரு உருமாட்டில் மாற்றிக்கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒளித்தோற்றம் (video), பாட்டு (audio), படிமம் (image), DVD-இலியிருந்து ISO, ஒளித்தோற்ற இணைப்பி (video joiner), பாட்டு இணைப்பி (audio joiner) என அனைத்தும் ஒரே மென்பொருளில் செய்து கொள்ளலாம்! பயன்படுத்துவதற்கும் எளிதாக உள்ளது.


அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய :- http://www.formatoz.com/

நிரல்களை ஒரு உருமாட்டில் இருந்து மற்றொரு உருமாட்டில் எப்படி மாற்றுவது? (கீழ்கண்ட ஒளித்தோற்றத்தை  பார்க்க)

Sandboxie...?


sandboxie........ அப்படி என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியாது என்பது எனக்கு தெரியும் (தெரிந்தவர்கள் மேலும் படியுங்கள்:). அதனால் அதனை பற்றி ஓர் சிறிய தொடக்கம். Sandboxie என்பது ஓர் அருமையான  மென்பொருள்.அது நீங்கள் நிறுவப்போகும் ஒவ்வொரு மென்பொருளையும் மற்ற நிரல்களுக்கு மற்றும் உங்கள் கணினிக்கு பாதிப்பு உண்டாக்காமல் கட்சிதமாக நிறுவ உதவும். ஒரு வேலை நீங்கள் நிறுவப் போகும் மென்பொருளில் ஏதுனும் தவறு அல்லது வைரஸ் கண்டறிந்து அது உங்கள் கணினிக்கும் மற்ற நிரல்களுக்கும் பாதிப்பு  உண்டாக்கும் என்று கருதினால் இந்த மென்பொருளை வைத்து நீங்கள் விரும்பும் மென்பொருளை நிறுவுங்கள் பிரச்சனை முடிந்தது. அது மட்டும் இல்லாமல் நீங்கள் இணையத்தில் யாருக்கும் தெரியாமல் உலாவ விரும்பினால் அந்த உலாவியை இந்த மென்பொருளை கொண்டு நிறுவி  சுலபமாக மற்றவர்கள் கண்களில் மண்ணை  தூவிவிட்டு உலாவலாம் ! இதனால் உங்கள் கணினியும் அதில் உள்ள நிரல்களும் பத்திரமாக இருக்கும். மேலும் நீங்கள் ஒரு மென்பொருளை நிறுவினால் அதனால் சில மாற்றங்கள் கணினியில்  செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் அந்த மாற்றங்கள் மற்ற  நிரல்களிலும் செயல்படும் இது போன்ற செயலினை தடுக்க இந்த மென்பொருள் மிகவும் உதவும்.இன்னும் புரியும் படி சொல்ல வேண்டுமானால் இல்லை இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்... (இதுக்கு மேல எனக்கு விளக்க தெரியல அவ்!)
image source :- Sandboxie.com

மேலும் விவரங்களுக்கு மற்றும் தரவிறக்கத்திற்கு (கவலைபடாதிங்க இலவசம்தான்:) :-  http://www.sandboxie.com/

விண்டோஸ் நிரல்களை லினக்ஸ்ஸில் நிறுவுவது எப்படி?

How to install windows programs in linux?



நிறைய நபர்களுக்கு லினக்ஸ் பிடிக்காமல் விண்டோஸ் இயக்குதளத்தையே பயன்படுத்துவதற்கு முக்கிய காரணம் விண்டோஸ் நிரல்களை (program)  லினக்ஸ் இயக்குதளத்தில் நிறுவ முடியாது என்பதன் காரணமாகத்தான். இதனை சரி செய்யும் வகையில் லினக்ஸ் இயக்குதளத்தில் இந்த மென்பொருளை நிறுவினால் போதுமானது! இதனை நான் பயன்படுத்தி பார்க்கும் போது மிக நன்றாக வேலை செய்தது. இதில் நான் winamp,vlc,MS office என நாம் அன்றாட விண்டோஸ் இயக்குத்தலத்தில் பயன்படுத்தும் மென்பொருளை பயன்படுத்தி பார்த்தேன் ம்ம்ம்ம்.... வேலை செய்தது ஆனால் மிகப் பெரிய மென்பொருள்கள் அதாவது வரைகலை (graphics) மிகுதியாக இருக்கும் மென்பொருள் வேலை செய்யவில்லை. மேலும் இதில் நான் நிகழ்பட விளையாட்டை நிறுவி பார்க்கவில்லை அதனால் நீங்கள் இதனை பயன்படுத்தி எனக்கு கூறுங்கள்! 
இந்த மென்பொருளை உங்கள் லினக்ஸ் இயக்குதளத்தில் நிறுவ :- http://www.winehq.org/download/

கவனிக்க:- இந்த மென்பொருள் ஆப்பில் ,சொலாரிஸ் என பல இயக்குதளங்களில் வேலை செய்யும்! அதனால் இதனை வைத்து கொண்டு எந்த இயக்குதளத்திலும் விண்டோஸ் நிரல்களை நிறுவலாம்!