Showing posts with label google. Show all posts
Showing posts with label google. Show all posts

இணையப் பக்கத்தை எப்படி pdf உருமாட்டில் மாற்றுவது? (நெருப்பு நரி மற்றும் கூகுள் குரோமிர்க்கு கூட்டுறுபு)

How to change a web page into pdf format? (Firefox addon)


நாம் இணையத்தில் உலாவும் போது சில முக்கியமான இணையப் பக்கங்களை சேகரித்து அல்லது அதனை அடையாளப்படுத்துவது (bookmark) வழக்கம். ஆனால் அவ்வாறு செய்வது நமக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு நீங்கள் அந்த பக்கத்தை சேகரிக்க விரும்பினால் சேகரித்த பக்கமானது இரண்டு கோப்புகளாக உங்கள் கணினியில் இடம்பெறும். அதில் ஒன்று தொலைந்தால் அம்பேல்! அந்த பக்கத்தை அடையாளப்படுத்த விரும்பினால், அந்த பக்கத்தை காண உலாவியை திறந்து அந்த உலாவி அந்த பக்கத்தை திறந்து  நம் கண் முன் நிறுத்தும் வரை நம்மவர்க்கு பொறுமை இருக்காது. அதுவே அந்த பக்கத்தை pdf உருமாட்டில் மாற்றி கணினியில் சேகரித்து வைத்தால் நாம் எப்பொழுது வேண்டுமானாலும் அதனை படித்து கொள்ளலாம்.

அவ்வாறு செய்ய இந்த கூட்டுறுபை நீங்கள் உங்கள் நெருப்பு நரி அல்லது கூகுள் குரோம் உலாவியில் நிறுவ வேண்டும்.
இதனை நிறுவினால் உங்கள் உலாவியில் முகவரிப் பட்டைக்கு அருகில்  ஓர் சிறிய படம் புதிதாக தோன்றும் (மேலே உள்ள படம் போன்று). அந்த படத்தை சொடுக்கினால் நீங்கள் மாற்ற விரும்பும் பக்கத்தை சுலபமாக pdf உருமாட்டில் மாற்றி தரும். நீங்கள் மாற்றிய பக்கம் A4 பக்க வடிவில் இருக்கும்.

இல்லை எனக்கு A7 பக்க வடிவில்  தான் வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களுக்கு  நெருப்பு நரியில் Tools --> Add-ons --> Save as pdf --> Option செல்லவும். அங்கே சென்று உங்கள் விருப்பம் போன்று மாற்றிக் கொள்ளுங்கள். அவ்வாறு மாற்ற அந்த தளத்திற்கு தனியே வெட்ட வேண்டும் (பணத்தை சொன்னேன்!).
கவனிக்க:-  உங்களுக்கு இந்த கூட்டுறுபை நிறுவ விருப்பம் இல்லையென்றால் கீழ் கண்ட தளத்திற்கு தனியே சென்று அந்த இணையப் பக்கத்தின் முகவரியை சேகரித்து  pdf உருமாட்டில் மாற்றி கொள்ளுங்கள்.
http://pdfcrowd.com/

(இவை அனைத்தும் இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே வேலை செய்யும்! )

திரைப்படங்களுக்கு துணை மொழியை சேர்ப்பது எப்படி?

How to add subtitles for movies?


பொதுவாக நாம் ஆங்கிலப் படங்களை பார்க்க ஆர்வம் காட்டுவது உண்டு. ஆனால் சில நேரங்களில் அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றே புரியாது! அதற்கு உதவியாக அந்த படத்திற்கு துணை மொழி ஒன்று இருந்தால் நமக்கு நன்றாக புரியும். சரி நண்பா இதெல்லாம் எப்படி அந்த படத்திற்கு கொண்டு வருவது? என்று யோசிப்பீர்கள் அதற்கான விடை இதோ, கூகிளில் சென்று இவ்வாறு தட்டச்சவும்
movie name english subtitle srt
இதில் movie name என்ற இடத்தில் அந்த படத்தின் பெயரை குறிப்பிடுங்கள். இதில் srt என்பது அந்த கோப்பின் வடிவம் (format). பிறகு அதனை தரவிறக்கம் செய்து உங்களது கணினியில் வைக்கவும். VLC ஊடக இயக்கியை (media player) பயன்படுத்தி படத்தை பார்க்கவும் அதே சமயத்தில் அந்த துணை மொழி கோப்பை இழுத்து ஊடக இயக்கியில் போடா மறந்து விடாதீர்!! மற்றும் நீங்கள் இதற்கு minilyrics மென்பொருளையும் பயன்படுத்தலாம். சில நேரங்களில் நீங்கள் தரவிறக்கம் செய்த துனைமொழியானது  படத்திற்கு சம்பந்தம் இல்லமால் ஓடிக்கொண்டிருக்கும்   அதனால் நீங்கள் பார்க்கும்  படத்தின் கோப்புப்  பெயர் எப்படி இருக்கிறதோ அதே போன்று கூகளில் தட்டச்சி தேட வேண்டும். தரவிறக்கம் செய்த அந்த கோப்பை படத்தின் பக்கத்திலயே ஒட்டவும் மறந்து விடாதீர்!

துணை மொழியை தரவிறக்கம் செய்ய சில தளங்கள்:-

தரமான புதிய பாடல்களை (320kbps) தரவிறக்கம் செய்வது எப்படி?

How to download high quality songs?

புதிய பாடல்களை தரமான இசையில் தரவிறக்கம் செய்வது மிகவும் எளிது. ஆனால் அது கூகுளில் தேடுவதை பொறுத்தே அமையும். உதாரணத்திற்கு நீங்கள் நான் மகான் அல்ல பாடல்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால் இவ்வாறு தட்டச்ச வேண்டும் naan mahaan alla 320kbps vbr இவ்வாறு தட்டச்சினால் தான் நீங்கள் தரமான இசையை தரவிறக்க செய்ய முடியும். அதாவது முதலில் நீங்கள் தேட விரும்பும் பாடலின் படம் பெயர் அல்லது வெறும் பாடலின் பெயர் பிறகு 320kbps கடைசியில் vbr அவ்வளவுதான்.

சரி, இப்பொழுது அந்த 320kbps என்றால் என்ன? என்பதை பார்க்கலாம்:-
Kbps என்றால் kilo bits per second என்று அர்த்தம். அதாவது ஒரு பாட்டை தரம் பிரிப்பது ஆகும். உதாரணத்திற்கு பெரும்பாலான பாட்டுக்கள் 128kbps அளவில் இருக்கும். அவை யாவும் 4 அல்லது 5mb கணக்கில் காணப்படும். இதுவே அது 320kbps அளவில் இருந்தால் அது எட்டு முதல் பதினைந்து mb-யில் காணப்படும்.ஆனால் ஒரு பாட்டுக்கு இவ்வளவு இடமா? என்ற கேள்வி உங்களிடத்தில் எழும் அதனால் தான் நான் உங்களை கூகிளில் vbr (various bit rate) என்று தேடச்சொன்னேன்! இவ்வாறு தேடுவதால் ஒரு பாடல் ஆறு mb-யில் முடிவடைந்துவிடும்.

மேலும் நீங்கள் கீழ்கண்ட தளங்களில் கூட தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்:-
Www.djluv.in (ஹிந்தி பாடலுக்கு)
www.tamilwire.com (தமிழ் பாடலுக்கு)
Www.techsatish.com (தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி பாடலுக்கு)
Www.aimini.net (ஆங்கில பாடலுக்கு)

கூகிள் தேடல்:-

கூகுள் என்றால் அது வெறும் தகவலை மட்டும் தேடித் தரும் இயந்திரம் என்று நினைக்கிறோம். ஆனால் அது நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறும், ஒரு மேதை போல. அவ்வாறு நீங்கள் கேள்விகள் கேட்க ஒரு சில முறைகள் இருக்கிறது அதனைப் பற்றி இங்கு பார்ப்போம்.

முதலில் ஓர் இடத்திற்கான பருவநிலையை எப்படி கண்டறிவது?

இதற்கு நீங்கள் கூகளில் தேடலில் "weather trichy" என்று தட்டச்ச வேண்டும். "trichy" என்ற இடத்தில் நீங்கள் காண விரும்பும் இடத்தின் பருவநிலையை குறிக்க வேண்டும்.


ஓர் இடத்தை தேட:-
நாம் கூகிளில் சுலபமாக ஓர் இடத்தை தேடிக் கண்டுபிடித்து விடலாம். உதாரணத்திற்கு கூகிளில் "where is kanyakumari" என்று தேடுங்கள் கன்னியாகுமரி எங்கு அமைந்து உள்ளது என்று தெரியும்.


நேரத்தை அறிய:-கூகிளில் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் நேரத்தை அறியலாம். உதாரணத்திற்கு "time new york" தட்டச்சினால் நியூ யார்க் நகரத்தின் நேரத்தை அறியலாம்.

மொழி பெயர்த்தல்:-
ஓர் வார்த்தையை ஒரு மொழியில் இருந்தது இன்னொரு மொழியில் மொழி பெயர்க்க இவ்வாறு தட்டச்சவும் "translate home in hindi". இதில் நான் home என்ற ஆங்கில வார்த்தை இந்தி மொழியில் மொழி பெயர்க்க தேடி உள்ளேன். அதனின் முடிவு இவ்வாறு இருக்கும்:-
இதில் நீங்கள் தமிழில் மொழி பெயர்க்க முடியாது. இருப்பினும் இதற்கு என்று சில தளங்கள் இருக்கிறது அங்கு சென்று நீங்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துக் கொள்ளலாம். அதனை நான் இங்கு பட்டியலிட்டு உள்ளேன் http://cp-in.blogspot.com/2010/04/blog-post_24.html
திரை அரங்குகளின் திரைப்படப் பட்டியலை அறிய:-
உங்கள் நகரத்தில் திரையிடும் திரைப்படப் பட்டியலை அறிய கூகிளில் movie <உங்கள் நகரத்தின் பெயர்> <உங்களின் நாடு> அதாவது இவ்வாறு தட்டச்ச வேண்டும் "movie madurai india" அதனின் முடிவுகள் கீழே உள்ள படத்தை போன்று இருக்கும்


விவரங்கள் அறிய:-
நீங்கள் ஓர் வார்த்தைக்கான விவரங்கள் அறிய கூகுள் மிக மிக உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு கூகிளில் "define: physics" என்று தேடினால் பெளதிகம் பற்றிய விவரங்கள் அனைத்தும் வரும். இதில் "define :" என்ற வார்த்தை இருந்தால் மட்டுமே விவரங்களை அறிய முடியும்.

கோடிட்ட இடத்தை நிரப்புக:-
நாம் சிறு வயதில் இருந்து இதனை அந்தர் பல்டி அடித்து மனப்பாடம் செய்வோம் ஆனால் தேர்வில் மறந்து விடுவோம். ஆனால் கூகுள் இதற்கும் பதில் அளிக்கும். உதாரணத்திற்கு "the capital of malaysia is * " என்று தட்டச்சினால் கூகுள் இதற்கான விடையை கூறிவிடும். இதில் இந்த * குறியீடு இருந்தால் மட்டுமே கூகுள் விடை சொல்லும்.


ஐம்பதாவது பதிவு:- பணம் செலுத்தாமல் ஒரு மென்பொருளின் முழு பதிப்பை (full version) மற்றும் திறப்பு உண்டாக்கியை (keygen) தரவிறக்கம் செய்வது எப்படி?

 நமக்கு மிக மிக பயன் உள்ள மென்பொருள்கள் எப்பவுமே பணம் செலுத்தி வாங்கக்கூடிய மென்பொருளாக இருக்கும் (நம்ம ராசி அப்படி). அதனால் நாம் அந்த மென்பொருளுக்கான சான்று பதிப்பு மென்பொருளை (trial version ) தரவிறக்கம் செய்து பின்பு அதற்கான திறப்பு உண்டாகியை (keygen)  தேடி அலைவோம் அல்லது நேரடியாகவே அந்த மென்பொருளுக்கான முழு பதிப்பை (full version ) தேடி அலைவோம்,இறுதிவரை அது கிடைக்காது. பின்பு அதனை தேடுவதையே விட்டுவிடுவோம்.உண்மையில்   ஒரு மென்பொருளுக்கான முழு பதிப்பை அல்லது  திறப்பு உண்டாக்கியை தேடுவது மிக சுலபம் (கீழே இருப்பது போல தேடினால்).
கூகிள் (google) :-
முதலில் அந்த மென்பொருளுக்கான திறப்பு உண்டாக்கியை (keygen) கூகிளில் தேட வேண்டும். அதுவும் இது போன்று <மென்பொருளின் பெயர்> <பதிப்பு> <ராபிட்ஷேர்>. உதாரணத்திற்கு  இப்படி imindmap 4.1 rapidshare  தேட வேண்டும். இது போன்று தேடினால் அந்த மென்பொருளுக்கான முழு பதிப்பை தேடிக் கண்டுப் பிடித்து விடலாம். ராபிட்ஷேர் என்ற இடத்தில் நீங்கள் Keygen அல்லது megaupload எனவும் தேடலாம்.

கூகிளில் தேடிக் கண்டுப் பிடிக்க முடியவில்லை என்றால் இங்கு சென்று அந்த மென்பொருளை தேடி அதன் முழு பதிப்பை நேரடியாக தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்:-

வலை வாசல் (portals) :-
http://www.warez.com/ (இது ஒத்த தரவுத்தொடர் (torrent) இணைப்பை தேடிக் கொடுக்கும்)

பொது மன்றங்கள் (forum) :-

எச்சரிக்கை:- இது போன்ற வலை வாசல்களில்  (portals),பொது மன்றங்களில் (forum) தேடும் போதும்,தரவிறக்கம் செய்யும் போதும் மிக கவனமாக இருங்கள். சில நேரங்களில் அது தவறான மென்பொருள்கள் அல்லது வைரச்களிடம் கொண்டு சேர்த்துவிடும். நீங்கள் அந்த தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்ய ஒரு கணக்கை உருவாக்குமாறு கேட்கும். அப்போது அதற்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும் படித்து கணக்கை உருவாக்குவது  நல்லது:)

கோப்பு பகிர்வு தளங்கள்:-
 ராபிட் ஷேர் முகவரியில் தரவிறக்கம் செய்வதற்கு என தனியே தேடுபொறி உள்ளது அங்கு சென்றும் நீங்கள் தேடலாம் rsfind.com
இதே போன்று சில தளங்கள் உள்ளன அவை வருமாறு:

திறப்பு உண்டாக்கி (keygen) தேடுபொறி:- 
இந்த தளம் மிக அருமையானது. இதில் நீங்கள் பெரும்பாலும் அனைத்து மென்பொருளுக்கும் திறப்பு உண்டாக்கியை (keygen) தேடிக் கண்டு பிடித்து விடலாம்.
  தளத்தின் முகவரி:-  keygen.ms
கவனிக்க:- இந்த தளம் திறப்பு உண்டாக்கியை ( keygen) மட்டுமே தேடித் தரும்!

ஐம்பதாவது பதிவு:-
விளையாட்டுத்தனமாக ஆரம்பித்தது இப்பொழுது அனைவருக்கும் உதவும் வகையில் ஆகிவிட்டது. இந்த சின்ன பையனையும் ஒரு பதிவனாக நினைத்து ஆதரித்ததற்கு மிக்க நன்றி!

எஸ்எம்எஸ்(sms) மூலம் கூகிளை எப்படி தேடுவது?


நாம் கூகிள் தேடலை இணையத்தின் மூலம் தான் தேடிப் பழக்கம்,ஆனால் இப்பொழுது நீங்கள் உங்கள் கைப்பேசியின் மூலமாகவே தேடலாம்.இது குறிப்பிட்ட‌ விஷயங்களை மட்டும் தான் தேடும் உதாரணத்திற்கு cricket scores (cricket score), Indian Railways train schedules & ticket status (trains chennai to madurai, pnr 4313456892) , horoscopes (capricorn), movie showtimes (movies trichy, bheema trichy)....இதற்கு நீங்கள் செய்ய வேண்டுவன:-
1)உங்கள் கைப்பேசியை எடுக்கவும்.

2)உங்களுக்கு விருப்பமானவையை பதிவு செய்து, 9773300000 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பவும்.

3)நீங்கள் அனுப்பிய உடனே கூகிளிடம் இருந்து மறுமொழி வரும்.

இதற்கான நேரடி மாதிரி மற்றும் அதன் முழு விவரத்தை தெரிந்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்: http://www.google.co.in/mobile/default/sms/