+2 முடித்த பிறகு?

AFTER +2 ?

இந்த கேள்வி  என்னிடத்தில் நீண்ட காலமாக இருந்தது ஆனால் இப்பொழுது கொஞ்சம் தெளிவு அடைந்து இருக்கிறது! காரணம் என் அண்ணன் என்னிடம் கூறிய அறிவுரைகள் அப்படி! (ரொம்ப நல்லவங்க). பொதுவாக +2 முடித்த அனைவருக்கும் ஒரு சிறந்த பொறியியல் கல்லூரியில் சேர விரும்புவதே கனவாக இருக்கும். அதேபோல தான் எனக்கும் இருந்தது. ஆனால் சில நாட்கள் கழித்து என் அண்ணன் என்னிடம் பேசிய போது அது ஒரு கெட்ட கனவாகவே போய்விட்டது :) பொறியியல் படிக்க விரும்பும் அனைத்து மாணவர்களும் அந்த பொறியியல் படிப்பை விரும்பி எடுப்பதில்லை, எதிர்காலத்தில் அதன் வருமானத்தை எண்ணியே அதனை எடுக்கிறார்கள். உதாரணமாக என் நண்பன் என்னிடத்தில் கூறிய வார்த்தைகள் இவை.. "டேய் எப்படியாச்சு AIEEE நல்ல மார்க் எடுத்தா போதும் டா! NIT-ல சேர்ந்து படிச்சி மாசத்துக்கு லட்சகனக்குல சம்பாதிக்கலாம்". அவனின் எண்ணம் எல்லாம் அப்படிப்பின் மீது அல்லாமல் பணத்தின் மீதே  இருக்கிறது. (சரி போதும் இதோட நிறுத்திக்குவோம்).

இப்பொழுது யாரும் பொறியியல் படிப்பின் மீது ஆர்வத்தை காட்டும் அளவிற்கு அறிவியில் படிப்புகளில் ஆர்வம் காட்டுவத்தில்லை. யாரும் ஆராய்ச்சியில் ஈடுபட விரும்புவதும்  இல்லை. அதனை வலியுறுத்தவே இந்த பதிவு!

IISER (Indian Institute Of Science Education and Research) :-



 இந்த ஐந்து வருட BS மற்றும் MS (இரெண்டும் சேர்த்து) படிப்பில் சேர்வதற்கு KVPY , IIT-JEE எழுதி இருக்க வேண்டும் அல்லது நம் தமிழ்நாடு அரசு (State board), மத்திய அரசு (CBSE) நடத்தும் பொதுத் தேர்வுகளில் மிகச் சிறந்த மதிப்பெண்களை  பெற்றிருக்க வேண்டும் அதாவது OBC (non-creamy layer) மாணவர்கள் தொண்ணூறு சதவீதத்திற்கு மேலும் SC/ST மாணவர்கள் அறுவது சதவீதத்திற்கு மேலும் பெற்றிருக்க வேண்டும் மற்ற மாணவர்கள் 95.5% சவீதத்திற்கு மேல் பெற்றிருக்க வேண்டியது அவசியம் (இங்கு குறிப்பிட்டது போல) . IIT-JEE நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அந்த  நுழைவுத்தேர்வில் ஓர் இடமும் (Rank) +2 பொதுத் தேர்வில் 60% பெற்றிருக்க வேண்டியது அவசியம். இக்கல்வி நிறுவனமானது போபால்,கொல்கட்டா, பூனே,மொஹாலி மற்றும் திருவனந்தபுரத்தில் அமைந்து இருக்கிறது.  இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயமாக் அங்கு தங்கியே படிக்க வேண்டும் அது  அவர்களின் சாபக் கேடு!இப்படிப்பை முடித்த பிறகு உங்கள் கையில் இரண்டு பட்டமும் ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலையும் இருக்கும் மற்றும் பல விவரங்கள் கீழே உள்ள இணைப்பிலும்,படத்திலும் இருக்கிறது.
மேலும் சில சந்தேகங்கள் இருந்தால் இதனை சொடுக்கவும் --->

  TNAU -Coimbatore (Tamilnadu Agricultural University) :-


                                                                               விவசாயத்தின் பயன் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் மற்றும் இதனை நம்பியே நம் எதிர்காலம் இருக்கிறது என்று தெரிந்ததாலும் அதனை நாம் விரும்பி எடுப்பதில்லை! அதனாலேயே இந்த கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு அதிக பதிப்பென்கள் தேவைப்படுவதில்லை.+2-வில் கணிசமான பதிப்பென்கள் எடுப்பவர்கள்  இந்த கல்வி நிறுவனத்தில் தாராளமாக சேரலாம்!

                                                                         


+2 பொதுத் தேர்வில் அதிக பதிப்பெண்கள் பெற முடிய வில்லையே என்று எம்மை போன்ற மாணவர்கள் யாரும் வருத்தப் பட தேவை இல்லை ஏன் என்றால் என்னை பொறுத்த மட்டில் இது பொதுத் தேர்வு அல்ல மனபாடத் தேர்வு (அப்படின்னு மனச தேத்திக்கணும்) மேலும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் யாரும் அலட்டிக் கொள்ளவும் தேவையில்லை!

I'M BACK......!


ஒரு வழியாக திக்கித் தடுமாறி இந்த +2 பொதுத் தேர்வை முடித்து விட்டு வீட்டில் நிம்மதியாக இருக்கிறேன். இனி யாரும் என்னை உட்கார்ந்து படி! என்று கூற முடியாது அதனால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் :) இருந்தாலும் இந்த தேர்வை நான் சிறப்பாக எழுதவில்லை என்று  சில! சில! நேரத்தில் வருத்தம் தருகிறது(அது ஏனோ தூங்கும் போது மட்டும் வருகிறேது ). எது எப்படியோ நான் இப்பொழுது முழுவதுமாக சுதந்திரமாக உணருகிறேன் (சில நாட்களுக்கு மட்டும்) எனவே இந்த நாள் முதல் என் பதிவுகள் தொடரும் என்றும் அறிவித்துக் கொள்கிறேன்!

சோக்கா போடு சட்டைய! (நெருப்பு நரிக்கு மட்டும்) :-

Personas  for firefox :-


நான் பார்த்த வரை அதிக நபர்கள் நெருப்பு நரியை (Firefox) மட்டுமே உபயோக்கிக்கிரார்கள். அதற்கு காரணம் மற்ற உலாவிகளை விட இது நிறைய வசதிகளை பெற்றுள்ளதுதான்! சரி இப்பொழுது விசயத்திற்கு வருவோம்.
நான் இப்பொழுது கூறப்போகும் தளமானது உங்கள் நெருப்பு நரியை மாற்றி அமைக்கும்.அதாவது உங்களுக்கு பிடித்த நடிகர்கள்,  நடிகைகள், இயற்கை காட்சிகள் என எதை வேண்டுமானாலும் உங்கள் நெருப்பு நரிக்கு உடுத்திக் கொள்ளலாம். இது நெருப்பு நரியை மேலும் கவர்ச்சியாக்கும். இதனை நிறுவுவதும் மிக சுலபம்.

கவனிக்க:- நாம் பொதுவாக நெருப்பு நரிக்கு உடுத்தும் சட்டையானது நெருப்பு நரியின் பொத்தான்,நாடா (tab) என அனைத்தையும் மாற்றி விடும். ஆனால் இந்த வகையான சட்டையானது (theme) உலாவியில் உள்ள எதையும் மாற்றாமல் உலாவியின் பின் புறத்தில்  ஒரு புதிய பொலிவினை  தரும் (உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்).

ஜில்லா விட்டு ஜில்லா வந்த.......! (சில பிரச்சனைக்கு தீர்வு!)

Audio and subtitle synchronization in VLC :-
இன்று நான் ஒரு ஒளித்தோற்றத்தை (video) கடினப்பட்டு தரவிறக்கம் செய்தேன் அது வேறு ஒன்றும் இல்லை ஈசன் படத்தில் வரும் ஜில்லா விட்டு.....  என்னும் பாட்டுத்தான்.அதில் நடனக்கலை நன்றாக உள்ளதே என எண்ணி உயர்ந்த தரத்தில் தரவிறக்கம் செய்தேன். சில நிமிடங்களுக்கு பிறகு தரவிறக்கம் செய்த ஒளித்தோற்றத்தை திறந்து பார்த்தேன். பார்த்த எனக்கு கணினியை நொறுக்கும் அளவிற்கு கோபம் வந்தது, காரணம் அப்பாட்டில் இசைத்த ஒளியானது பாட்டிற்கு சம்பந்தம் இல்லாமல் தனியாக கேட்டதுதான்! சரி என்ன செய்வது என எண்ணி இதற்கான விடையை கண்டறிய கூகுளை நாடினேன். எப்படியோ திக்கித் திணறி தத்தளித்து விடையை கண்டறிந்தேன்.
அதனை செயல்படுத்தி பார்த்த போது நல்ல பலன் கிட்டியது.

இப்பொழுது அதனை எப்படி சரி செய்வது என கூறுகிறேன் (இது VLC ஊடக இயக்கிக்கு மட்டும் பொருந்தும்).
முதலில் அந்த ஒளித்தோற்றத்தை VLC ஊடக இயக்கியில் திறந்து வையுங்கள். பிறகு Tools --> Track synchronization --> Advance of audio over video  சென்று நான் சொல்வது போல  மாற்றுங்கள். 
உங்கள் ஒளித்தோற்றம்  முதலில் ஒலி எழுப்பினால் அதாவது அங்கு நிகழும் அசைவுக்கு முன்பு ஒலி எழுப்பினால் மேல் பொத்தானை அழுத்தவும் அல்லது   இதற்கு நேர் மாறாக வந்தால் கீழே உள்ள பொத்தானை அழுத்தவும் (அது சரியாகும் வரை அழுத்தவும்).

சில நேரங்களில் நாம் படம் பார்க்கும் போது துனைமொழியானது (subtitle)  அவர்கள் பேசிய பிறகு பொறுமையாக வரும் அதனை நீங்கள் கீழே உள்ள subtitles/video என்னும் பிரிவில் சரி செய்து கொள்ளலாம்.

டிவிட்டர் பறவை பறக்கும் நிரல் இப்பொழுது வெவ்வேறு நிறங்களில் ப்ளாகருக்காக :-

Twitter bird flying widget for blogger  in different colours :-


-----------------------------
இந்த நிரலை யார் வடிவமைத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இதனை நான் இந்த வலைப்பூவில் கண்டறிந்தேன்
http://vandhemadharam.blogspot.com/2011/04/blog-post.html மற்ற சில தளங்களிலும்.மேலும் இந்த Javascript குறியீடுகளை திருத்த எனக்கு உரிமை இருக்கிறது என எண்ணி இதனை நான் உங்களுக்கு பல நிறங்களில் மாற்றினேன்!
---------------------

இந்த நிரல் மிகவும் வித்தியாசமானது. வாசகர்களை கவர்ந்து இழுக்கக்கூடியது. இதனை நீங்கள் உங்கள் வலைப்பூவில் இணைத்தால் முகப்பு பக்கத்தை தவிர மற்ற பக்கம் அதாவது பதிவுகள் எழுதிய பக்கங்களில் இந்த டிவிட்டர் பறவையானது வாசகர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ (உங்கள் பக்கத்தில் மட்டும்) அங்கெல்லாம் பறந்தது வந்து நிற்கும். அதனை சொடுக்கினால் Tweet this மற்றும் Follow me என்று காட்டும்.இதனால் உங்களுக்கு டிவிட்டரில் பலர் பின்தொடரவும்,டுவீட் செய்யவும் அதிக வாய்ப்பு உண்டு.
இப்பொழுது இதனை எப்படி நிறுவுவது என்று பார்ப்போம்.

1. முதலில் blogger.com செல்லவும்.

2. அதன் பிறகு Design --> Edit HTML செல்லவும்.
 கவனிக்க:- இதனை செய்வதற்கு முன்பு Download full template என்பதனை சொடுக்கி ஒரு தற்காப்பிற்காக பலகைகையை  சேகரித்து வைத்துக் கொள்ளவும்.

3. அங்கு சென்று </body> என்பதனை தேடவும். (Ctrl + F அழுத்தி தேடவும்)

4. அதன் பிறகு கீழே உள்ள குறியீடுகளை சேகரித்து </body> என்ற குறியீட்டின் மேல்  ஒட்டவும்.

இக்குறியீடு நீல நிறப் பறவைக்காக:-

<script src='http://dl.dropbox.com/u/8936154/Flying%20twitter%20bird%20for%20blogger-blue.js' type='text/javascript'>
</script>
<script type='text/javascript'>
var twitterAccount = &quot;Your Twitter Account Name&quot;;
var tweetThisText = &quot; <data:blog.pageTitle/>: <data:blog.url/> &quot;;
tripleflapInit();
</script>


கவனிக்க :-  மேலே உள்ள குறியீட்டில் சிகப்பு மையினால் சுட்டிக் காட்டியதில் உங்களது டிவிட்டர் கணக்கின் பெயரை கொடுங்கள்.

5. ஒட்டிய பிறகு Save template என்பதனை அழுத்தவும் அவ்வளவுதான். 

இந்த நீல நிறப் பறவை பிடிக்கவில்லை என்றால் இந்த பச்சை நிறப் பறவையை பார்க்கவும்:-

இதற்கான குறியீடு:-
                                    
<script src='http://dl.dropbox.com/u/8936154/Flying%20twitter%20bird%20for%20blogger%20-%20green.js' type='text/javascript'>
</script>
<script type='text/javascript'>
var twitterAccount = &quot;Your Twitter Account Name&quot;;
var tweetThisText = &quot; <data:blog.pageTitle/>: <data:blog.url/> &quot;;
tripleflapInit();
</script>

இதுவும் பிடிக்கவில்லை என்றால் இந்த சிகப்பு நிறப் பறவையை பார்க்கவும்:-
இதற்கான குறியீடு:-

<script src='http://dl.dropbox.com/u/8936154/Flying%20twitter%20bird%20for%20blogger%20-%20red.js' type='text/javascript'>
</script>
<script type='text/javascript'>
var twitterAccount = &quot;Your Twitter Account Name&quot;;
var tweetThisText = &quot; <data:blog.pageTitle/>: <data:blog.url/> &quot;;
tripleflapInit();
</script>


கடிசியாக இந்த இளஜ்சிவப்பு நிறம் உங்களுக்கு பிடிக்கும் என எண்ணி.... (முக்கியமாக பெண்களுக்கு!)

இதற்கான குறியீடு :-


<script src='http://dl.dropbox.com/u/8936154/Flying%20twitter%20bird%20for%20blogger-pink.js' type='text/javascript'>
</script>
<script type='text/javascript'>
var twitterAccount = &quot;Your Twitter Account Name&quot;;
var tweetThisText = &quot; <data:blog.pageTitle/>: <data:blog.url/> &quot;;
tripleflapInit();
</script>

 கவனிக்கவும் நண்பர்களே இது போன்று வெவ்வேறு நிறங்களில்  நீங்கள் இணையத்தில் தேடினாலும் கிடைக்காது. இது நான் உங்களுக்கு பயன்படும் என எண்ணி , முயன்று பல வண்ணங்களில் செய்தது. உங்களுக்கு வேறு ஏதாவது நிறங்களில் அல்லது உங்கள் பலகைக்கு ஏற்றவாறு வேண்டும் என்றால் எனது  மின் அஞ்சலிலோ அல்லது கீழே உள்ள கருத்துரை பெட்டியிலோ கேளுங்கள் செய்து தருகிறேன்.இதில் ஏதேனும் பிழை இருந்தாலும் கூறவும்.