நாளைக்கு எனக்கு....?

நாளைய தினம் என் வாழ்கையில் ஒரு திருப்பு முனையாகக் கூட இருக்கலாம். ஏன் என்றால் நாளைக்கு  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. இன்ஷா அல்லா எனக்கு நல்ல மதிப்பெண் வரும் என்று நான்  நம்புகிறேன். நீங்களும் இந்த சின்ன பையன் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

முப்பரிமான தொலைக்காட்சிகள் ஒரு பார்வை:-

சமீபத்தில் தான் லாஸ் வேகஸ்ஸில் நுகர்வோர் மின்ன‌ணுவியல் பொருட்காட்சி நடந்தது அதாவது Consumer Electronics Show . அந்த பொருட்காட்சியில் U.S தனது உலகளாவிய அற்புதமான தயாரிப்புகளை வெளிப்படுத்தியது முக்கியமாக முப்பரிமாண தொலைக்காட்சிப் பெட்டிகள். இதில் பல முன்னணி நிறுவனங்களான Panasonic, Sony, Samsung, Toshiba மற்றும் LG ஆகியோர் ஒன்றாக சேர்ந்து தரமான முப்பரிமாண தொலைக்காட்சிகளை வரும் ஆண்டில் வெளியிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.சரி இப்பொழுது முப்பரிமாண தொலைக்காட்சி என்றால் என்ன என்பதைக் காண்போம்.

முப்பரிமாண தொலைகாட்சி என்றால் அளவிலும்,நீளத்திலும்,அகலத்திலும் ஒரு தரமான, நிஜம் போல் தோன்றும் பொய்க் காட்சி. இப்பொழுது முப்பரிமாண படங்கள் அனைவராலும் மிகவும் கவரப்பட்டு வருகிறது, முக்கியமாக "அவதார்" திரைப்படத்திற்கு பிறகு. முப்பரிமாணம் என்பது திரைப்படத்தோடு நின்று விடாது அல்லவா! எனவே இதற்கு அடுத்த கட்டமாக முப்பரிமாண தொலைகாட்சி புனையப்பட்டுள்ளது (invention:) இந்த முப்பரிமாணம் பற்றி John Landau (அவதார் படத்தின் தயாரிப்பாளர்) கூறுகையில் "இந்த முப்பரிமாணம் என்பது எல்லா இடத்திலும் ஒரு ஒலி அலையைப் போல் இருக்கும்" என்கிறார்.

முப்பரிமாண தொலைகாட்சி:-
நாம் முப்பரிமாண திரைப்படங்களை ஒரு மூக்குக்கண்ணாடி மூலம் பார்ப்பது போல இந்த முப்பரிமாண தொலைக்காட்சிப் பெட்டியை காணவும் ஒரு மூக்குக்கண்ணாடித் தேவை. இந்த தொலைகாட்சிகள் அனைத்தும் இந்த ஆண்டில் வெளியிடுவதாக எதிர்பார்க்கப் படுகிறது.
இதே ஆண்டில் இந்த தொலைக்காட்சிக்கு தேவையான Blue-ray player போன்ற துணை‍‍சாதனங்களும் (sub devices) வெளியிடப்படும்.
இந்த ஒளித்தோற்றத்தை பாருங்கள் - http://magic.sc-streaming.com/player/shell.asp?campaignID=177_7245

3D OLED TVs:-
3D OLED(Organic Light Emitting Diode) என்பது முப்பரிமாண தொலைக்காட்சியை விட மிக மிக துல்லியமாக அழகாக காண்பிக்கக் கூடிய தொழில்நுட்பம்.

மேலும் அறிய‌ இந்த ஒளித்தோற்றத்தை பார்க்கவும்:-http://magic.sc-streaming.com/player/shell.asp?campaignID=177_7085

மூக்குக்கண்ணாடி இல்லாமல்:-
இந்த தொலைகாட்சியில் மிக மிக நமக்கு தொல்லை கொடுக்கும் செயல் மூக்குக்கண்ணாடி அணிவது. அவ்வாறு நாம் தினமும் மூக்குக்கண்ணாடி அணிந்து பார்த்தால் அந்த தொலைக்காட்சி நமக்கு "தொல்லைக்"காட்சி ஆகிவிடும். இதுவே நாம் மூக்குக்கண்ணாடி அணியாமல் பார்த்தால்.......இந்த ஒளித்தோற்றத்தைப் பாருங்கள்:-http://magic.sc-streaming.com/player/shell.asp?campaignID=177_7274

இப்பொழுது பல நிறுவனங்கள் தயாரித்த முப்பரிமாண தொலைக்காட்சிகளைப் பற்றி பார்க்கலாம்

Toshiba Cell TV:-
டோஷிபா நிறுவனம் இந்த ஆண்டில் பத்து முப்பரிமாண தொலைக்காட்சிகள் வெளியிடுவதாக கூறியது. அதில் இந்த Cell TV-யும் ஒன்று.Toshiba Genesis மற்றும் Toshiba Illusion இவை இரெண்டும் LED TVs வகையை சேர்ந்தது. இது இருபரிமாணம் சார்ந்த தொகுப்பகளை முப்பரிமாணமாக மாற்றி நம் கண் முன் தோன்ற வைக்கும். இதனால் நாம் சாதாரணமாக காணும் அனைத்து நிகழ்சிகளை முப்பரிமாணமாக காணலாம்! இதைப் பற்றி மேலும் அறிய இந்த படத்தை காணவும்:- http://magic.sc-streaming.com/player/shell.asp?campaignID=177_6980

Panasonic 3D TV:-

இந்த நிறுவனம் மட்டுமே முப்பரிமாண தொலைக்காட்சிக்குத் தேவையான அனைத்து துணைச் சாதனங்களும் வழங்குகிறது. உதாரணத்திற்கு முப்பரிமாண புகைப்படக் கருவி என அனைத்தும். அதுவும் Direct TV என்னும் நிறுவனத்துடன் சேர்ந்து. இந்த நிறுவனம் U.S-இல் அமைந்து உள்ளது. இதன் நோக்கம் மக்களிடம் முப்பரிமாண சாதனங்களை ஒளிபரப்புவது.

Panasonic 152-inch Full HD 3D plasma TV:-

இது தான் உலகத்திலேயே மிகப் பெரிய plasma திரை தொலைக்காட்சி. இந்த 152 அங்குலம் இந்த‌ தொலைக்காட்சி 3D மற்றும் HD வடிவில் காண தயாராகிவிட்டது.
. இது 4,096x2,160 படத்தினமம் பிரிதிறன் (pixel resolution) கொண்டது. இதனைக் குறித்து panasonic கூறுகையில் "இது ஒரு புரட்சிகரமான plasma display panel (PDP) அதுவும் இரண்டு மடங்கு பிரகாசமுள்ள வினைத்திரன் (efficiency) கொண்ட தொழில்நுட்பம்" என்று கூறியது.

Sky 3D TVs:-

இந்த sky நிறுவனம் தங்களது முப்பரிமாண தொலைக்காட்சியை U.K-வில் வீட்டிற்கு வந்து தருகிறதாம். அதுவும் sky U.K இந்த ஆண்டில் sky 3D channel என்னும் முப்பரிமாண நேரலை அலைவரிசையை (channel) துவங்க இருக்கிறதாம். Sky+HD DVR box என்னும் கருவி மூலம். இந்த கருவியை பொருத்துவதற்கு முப்பரிமாணம் உள்ள தொலைக்காட்சி தேவை!


Sony Bravia 3D and HD TVs:-

Sony நிறுவனம் இந்த ஆண்டில் braiva தொலைக்காட்சிப் பற்றி அனைத்து விவரங்களையும் வெளியிட்டது. மேலும் இந்த தொலைக்காட்சியில் wifi வசதியும் உண்டு. இது "monolithic design" என்னும் தொழில்நுட்பத்தால் ஆனது. இந்த தொலைக்காட்சிப் பற்றி விவரங்கள் அறிய:-http://www.sony.co.in/microsite/bravia/index.html?cid=bravia:smo

LG 3D TV projector:-
இந்த முப்பரிமாண படம் காட்டும் கருவி (projector) HD 1080p என்ற பிரிதிரன் (resolution) அளவில் அதுவும் 100Hz அளவில் காண்பிக்கிறது. இந்த LG CF3D தான் உலகத்திலேயே முதல் HD 3D படம் காட்டும் கருவி.

LG 3D TVs:-
LG நிறுவனம் அந்த பொருட்காட்சியில் தங்களது முப்பரிமாண தொலைக்காட்சியான LE9500 பற்றி கூறினார்கள். இந்த தொலைக்காட்சி மட்டுமே முப்பரிமாணத்தை துல்லியமாக, அழகாக காண்பிக்க கூடியது என்றும் கூறினார்கள். மேலும் இது 47 மற்றும் 55 அங்குலத்தில் சில காலம் கழித்துதான் கிடைக்கும்.

முடிவுரை:-
  • முதலில் முப்பரிமாண தொலைக்காட்சியில் பார்க்க முப்பரிமாண அலைவரிசைகள் (channels) இருக்க வேண்டும்.
  • நாம் என்னதான் இரு பரிமாணத்தை முப்பரிமாணமாக மாற்றி பார்த்தாலும் முப்பரிமாணத்தின் தரம் வராது.
  • பிறகு இதில் இருக்கும் பெரிய தொல்லை முப்பரிமாண மூக்குக்கண்ணாடி அணிவது.

ஆனால் நாம் என்னதான் குறை கூறினாலும் எதிர்காலத்தில் கலைஞரைப் போல அனைவருக்கும் முப்பரிமாண தொலைகாட்சியை வழங்கும் முதல்வர் வரத்தான் போகிறார் (அவரு நல்லா இருக்கணும்:).

நீங்கள் எழுதிய பதிவுகளுக்கு காப்புரிமை பெறுவது எப்படி?

நாளுக்கு நாள் பதிவுத் திருடர்களின் எண்ணிக்கை அதிமாகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நாம் நமது பதிவுகளுக்கு காப்புரிமை பெற்றே தீர வேண்டும். காப்புரிமையை எப்படி பெறுவது என்ற சந்தேகம் உங்களிடத்தில் இருக்கும். அந்த சந்தேகத்தை போக்கவே இந்த பதிவு. கீழே உள்ள தளம் உங்களின் பதிவுகளுக்கு காப்புரிமை பெற்றுத் தரும்.
தளத்தின் முகவரி: http://myfreecopyright.com/
இதில் நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கி அதில் உங்களது செய்தியோடையை (feed) ஒப்படைத்தால் போதுமானது.


இதனால் என்ன பயன்?
உங்கள் பதிவுகளை இவ்வாறு காப்புரிமை பெறுவதன் மூலம் அந்த பதிவுகள் அனைத்தும் நீங்கள் தான் எழுதியது என்று ஒரு அடையாளம் இருக்கும். மேலும் உங்கள் பதிவுகளை பதிவுத் திருடர்கள் திருடினால் "இந்த பதிவு என்னுடையது நான் காப்புரிமை பெற்று உள்ளேன்" என்றும் முறையிடலாம். நீங்கள் புதிதாக எழுதிய பதிவுகள் தானாகவே காப்புரிமை பெற்று உங்கள் மின் அஞ்சலில் "நீங்கள் இந்த பதிவுக்கு காப்புரிமை பெற்று விட்டீர்கள்" என்று வரும். அதனை நீங்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். தயவு செய்து அதை அழித்து விடாதீர்கள்!


my free copyright-ல் உங்களது செய்தியோடையை ஒப்படைத்த பிறகு அந்த தளம் ஒரு பொத்தானைத் (button) தரும். அந்த பொத்தானை உங்களது வலைப்பூவின் துணைப் பட்டையில் (sidebar) ஒட்டி விட்டு அதற்கு கீழ்/மேல் "இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை" என்று எழுதி விடுங்கள்.

ஐம்பதாவது பதிவு:- பணம் செலுத்தாமல் ஒரு மென்பொருளின் முழு பதிப்பை (full version) மற்றும் திறப்பு உண்டாக்கியை (keygen) தரவிறக்கம் செய்வது எப்படி?

 நமக்கு மிக மிக பயன் உள்ள மென்பொருள்கள் எப்பவுமே பணம் செலுத்தி வாங்கக்கூடிய மென்பொருளாக இருக்கும் (நம்ம ராசி அப்படி). அதனால் நாம் அந்த மென்பொருளுக்கான சான்று பதிப்பு மென்பொருளை (trial version ) தரவிறக்கம் செய்து பின்பு அதற்கான திறப்பு உண்டாகியை (keygen)  தேடி அலைவோம் அல்லது நேரடியாகவே அந்த மென்பொருளுக்கான முழு பதிப்பை (full version ) தேடி அலைவோம்,இறுதிவரை அது கிடைக்காது. பின்பு அதனை தேடுவதையே விட்டுவிடுவோம்.உண்மையில்   ஒரு மென்பொருளுக்கான முழு பதிப்பை அல்லது  திறப்பு உண்டாக்கியை தேடுவது மிக சுலபம் (கீழே இருப்பது போல தேடினால்).
கூகிள் (google) :-
முதலில் அந்த மென்பொருளுக்கான திறப்பு உண்டாக்கியை (keygen) கூகிளில் தேட வேண்டும். அதுவும் இது போன்று <மென்பொருளின் பெயர்> <பதிப்பு> <ராபிட்ஷேர்>. உதாரணத்திற்கு  இப்படி imindmap 4.1 rapidshare  தேட வேண்டும். இது போன்று தேடினால் அந்த மென்பொருளுக்கான முழு பதிப்பை தேடிக் கண்டுப் பிடித்து விடலாம். ராபிட்ஷேர் என்ற இடத்தில் நீங்கள் Keygen அல்லது megaupload எனவும் தேடலாம்.

கூகிளில் தேடிக் கண்டுப் பிடிக்க முடியவில்லை என்றால் இங்கு சென்று அந்த மென்பொருளை தேடி அதன் முழு பதிப்பை நேரடியாக தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்:-

வலை வாசல் (portals) :-
http://www.warez.com/ (இது ஒத்த தரவுத்தொடர் (torrent) இணைப்பை தேடிக் கொடுக்கும்)

பொது மன்றங்கள் (forum) :-

எச்சரிக்கை:- இது போன்ற வலை வாசல்களில்  (portals),பொது மன்றங்களில் (forum) தேடும் போதும்,தரவிறக்கம் செய்யும் போதும் மிக கவனமாக இருங்கள். சில நேரங்களில் அது தவறான மென்பொருள்கள் அல்லது வைரச்களிடம் கொண்டு சேர்த்துவிடும். நீங்கள் அந்த தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்ய ஒரு கணக்கை உருவாக்குமாறு கேட்கும். அப்போது அதற்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும் படித்து கணக்கை உருவாக்குவது  நல்லது:)

கோப்பு பகிர்வு தளங்கள்:-
 ராபிட் ஷேர் முகவரியில் தரவிறக்கம் செய்வதற்கு என தனியே தேடுபொறி உள்ளது அங்கு சென்றும் நீங்கள் தேடலாம் rsfind.com
இதே போன்று சில தளங்கள் உள்ளன அவை வருமாறு:

திறப்பு உண்டாக்கி (keygen) தேடுபொறி:- 
இந்த தளம் மிக அருமையானது. இதில் நீங்கள் பெரும்பாலும் அனைத்து மென்பொருளுக்கும் திறப்பு உண்டாக்கியை (keygen) தேடிக் கண்டு பிடித்து விடலாம்.
  தளத்தின் முகவரி:-  keygen.ms
கவனிக்க:- இந்த தளம் திறப்பு உண்டாக்கியை ( keygen) மட்டுமே தேடித் தரும்!

ஐம்பதாவது பதிவு:-
விளையாட்டுத்தனமாக ஆரம்பித்தது இப்பொழுது அனைவருக்கும் உதவும் வகையில் ஆகிவிட்டது. இந்த சின்ன பையனையும் ஒரு பதிவனாக நினைத்து ஆதரித்ததற்கு மிக்க நன்றி!

நீங்கள் சுலபமாக நினைவு வைத்துக்கொள்ள mindmap மென்பொருள்கள்:-

பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் தங்களது பாடங்களை நினைவு வைத்துக்கொள்ள மிகவும் சிரமப்படுவார்கள்.நேற்று படித்ததை இன்று கேட்டால் மறந்தது விடுவார்கள். ஏன் என்றால் நம் நாட்டு கல்வி அப்படி. ஒரு சிறு கேள்வியாக இருந்தால் கூட அதில் உள்ள விசயத்தை பார்க்காமால் குருட்டு மனப்பாடம் செய்து விடுவார்கள். பிறகு தேர்வு அறைக்கு உற்சாகமாக செல்லுவார்கள் ஆனால் அங்கு அவர்களுக்கு அனைத்தும் மறந்து விடும். அதை போக்கத்தான் இந்த மென்பொருள் . இந்த மென்பொருள் மூலம் நாம் எதனையும் சுலபமாக நினைவு வைத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு மேலே உள்ள மனப்படத்தை (mindmap) பாருங்கள். இதுபோன்று உங்கள் பாடங்களில் உள்ள முக்கியமான கருத்துக்கள்,வகைகள் என ஒரு மனப்படத்தை போட்டால் நாம் சுலபமாக நினைவு வைத்துக்கொள்ளலாம். இதனால் நாம் மனப்பாடம் செய்ய அவசியம் இல்லை மாணவர்களே!

இதனை தரவிறக்கம் செய்ய:- http://www.thinkbuzan.com/intl/ (இந்த மென்பொருள் இலவச தரவிறக்கத்திற்கு அல்ல)
மேலே உள்ள மென்பொருளை வைத்துக்கொண்டு எப்படி மனப்படத்தை வரைவது? என்று சிந்திப்பவர்களுக்கு ஒரு சிறிய ஒளித்தோற்றம்:-


இதே போன்று நிறைய மென்பொருள்கள் உள்ளன அதாவது இலவச தரவிறக்கத்திற்கு:- http://sourceforge.net/search/?type_of_search=soft&words=mindmap

வலைப்பூக்கள் சில:- http://mindmapblog.wordpress.com/