திரைப்படங்களுக்கு துணை மொழியை சேர்ப்பது எப்படி?

How to add subtitles for movies?


பொதுவாக நாம் ஆங்கிலப் படங்களை பார்க்க ஆர்வம் காட்டுவது உண்டு. ஆனால் சில நேரங்களில் அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றே புரியாது! அதற்கு உதவியாக அந்த படத்திற்கு துணை மொழி ஒன்று இருந்தால் நமக்கு நன்றாக புரியும். சரி நண்பா இதெல்லாம் எப்படி அந்த படத்திற்கு கொண்டு வருவது? என்று யோசிப்பீர்கள் அதற்கான விடை இதோ, கூகிளில் சென்று இவ்வாறு தட்டச்சவும்
movie name english subtitle srt
இதில் movie name என்ற இடத்தில் அந்த படத்தின் பெயரை குறிப்பிடுங்கள். இதில் srt என்பது அந்த கோப்பின் வடிவம் (format). பிறகு அதனை தரவிறக்கம் செய்து உங்களது கணினியில் வைக்கவும். VLC ஊடக இயக்கியை (media player) பயன்படுத்தி படத்தை பார்க்கவும் அதே சமயத்தில் அந்த துணை மொழி கோப்பை இழுத்து ஊடக இயக்கியில் போடா மறந்து விடாதீர்!! மற்றும் நீங்கள் இதற்கு minilyrics மென்பொருளையும் பயன்படுத்தலாம். சில நேரங்களில் நீங்கள் தரவிறக்கம் செய்த துனைமொழியானது  படத்திற்கு சம்பந்தம் இல்லமால் ஓடிக்கொண்டிருக்கும்   அதனால் நீங்கள் பார்க்கும்  படத்தின் கோப்புப்  பெயர் எப்படி இருக்கிறதோ அதே போன்று கூகளில் தட்டச்சி தேட வேண்டும். தரவிறக்கம் செய்த அந்த கோப்பை படத்தின் பக்கத்திலயே ஒட்டவும் மறந்து விடாதீர்!

துணை மொழியை தரவிறக்கம் செய்ய சில தளங்கள்:-

உங்களுடைய பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடம் சுலபமாக பகிர்ந்துக்கொள்வது எப்படி?

How to share your facebook profile easily to others?

அவரவர் வீட்டில் இணைய இணைப்பு இருக்கிறதோ? இல்லையோ? ஆனால் அவர்களிடத்தில் பேஸ்புக் கணக்கு மட்டும்  நிச்சயமாக இருக்கும். ஒரு ஐந்து வயது சிறுவனிடத்திலும் பேஸ்புக் கணக்கு இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு சென்று பார்த்தால் கூகுளின் ஆர்குட் தான் மிக மிக பிரபலமாக  இருந்தது  ஆனால் இப்பொழுது அது தலைகீழாக மாறிவிட்டது. அமெரிக்காவில் பேஸ்புக் கூகுளை முந்திவிட்டது! என்றெல்லாம் தகவல் வந்தது அந்த அளவிற்கு பேஸ்புக் காய்ச்சல் பரவியுள்ளது.சரி இப்பொழுது விசயத்திற்கு வருவோம்.
பொதுவாக நம் பேஸ்புக் கணக்கின் முகவரி இப்படி இருக்கும்
http://facebook.com/123455669854537.
இதுவே அந்த முகவரி இப்படி இருந்தால் http://www.facebook.com/cpimran மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ள எவ்வளவு வசதியாக இருக்கும்!

இதை எப்படி செய்வது என்ற குழப்பம் உங்கள் மனதில் எழும். அந்த குழப்பத்தை போக்கவே இந்த பதிவு.

1.முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கை திறக்க வேண்டும். பிறகு ACCOUNT ---> ACCOUNT SETTINGS செல்ல வேண்டும்.

2.அங்கு சென்று USERNAME  என்ற இடத்தில் CHANGE என்பதை சொடுக்கவும்.
3. பிறகு உங்கள் தொலைப் பேசி  எண் கேட்கும் அதனை ஒப்படைத்து அது கூறும் வழிமுறையின்படி செய்யவும்,அவ்வளவுதான்!

கடினப்பட்டு விளையாடிய நிகழ்பட விளையாட்டை மீட்பது எப்படி?

How to restore the played games?


என் நண்பன் ஒருவன் ஒரு நிகழ்பட விளையாட்டை ஆர்வமாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன் தன் கணினியில் நிறுவி இருந்தது Windows xp, சில காரணங்களால் அவனது அண்ணன் Windows 7 நிறுவப்போவதாக கூறினான். ஆனால் அவனுக்கோ இவ்வாறு நிறுவினால் தான் கடினப்பட்டு விளையாடிய நிகழ்பட விளையாட்டு அழிந்து விடுமோ? என அஞ்சினான் அதனால் Windows 7-ஐ நிறுவ மறுத்தான். அச்சமயத்தில் எனது இன்னொரு நண்பன் "கவலைப்படாதே என்று கூறி,இதுவரை அவன் விளையாடி முடித்த நிகழ்பட விளையாட்டின் கோப்பை (அது என்ன கோப்பு என்பதை கீழே கூறுகிறேன்) எடுத்து தனது கைவட்டில் (pendrive) சேகரித்தான். Windows 7 நிறுவிய பிறகு அந்த நிகழ்பட விளையாட்டை திரும்பவும் என் நண்பன் நிறுவினான். அதன் பிறகு  தன் கைவட்டில் சேகரித்த கோப்பையை அவனது கணினியில் ஒட்டினான், ஆச்சர்யம் அவன் இதுவரை விளையாடி இருந்த நிகழ்பட விளையாட்டு அழியாமல் அப்படியே இருந்தது.

சரி, இப்பொழுது அது எப்படி அழியாமல் இருந்தது என்று பார்ப்போம் :-

பொதுவாக நாம் இதுவரை விளையாடி முடித்த நிகழ்பட விளையாட்டு அனைத்தும் My documents-யில்அந்த நிகழ்பட விளையாட்டின் பெயரைக் கொண்டு ஒரு கோப்பு இருக்கும்  அல்லது நீங்கள் அந்த நிகழ்பட விளையாட்டை நிறுவிய இடத்தில் Profiles /saved games என்ற கோப்பில் இருக்கும். பிறகு அதனை தனியே உங்களது கைவட்டில் சேகரித்து வைக்க வேண்டும்.
அடுத்த முறை நீங்கள் அதனை நிறுவும் போது கைவட்டில் சேகரித்து வைத்திருந்த கோப்பை எங்கே சேகரித்தீர்களோ அங்கேயே ஒட்டவும். அவ்வளவுதான் வேலை முடிந்தது:)

தரமான புதிய பாடல்களை (320kbps) தரவிறக்கம் செய்வது எப்படி?

How to download high quality songs?

புதிய பாடல்களை தரமான இசையில் தரவிறக்கம் செய்வது மிகவும் எளிது. ஆனால் அது கூகுளில் தேடுவதை பொறுத்தே அமையும். உதாரணத்திற்கு நீங்கள் நான் மகான் அல்ல பாடல்களை தரவிறக்கம் செய்ய விரும்பினால் இவ்வாறு தட்டச்ச வேண்டும் naan mahaan alla 320kbps vbr இவ்வாறு தட்டச்சினால் தான் நீங்கள் தரமான இசையை தரவிறக்க செய்ய முடியும். அதாவது முதலில் நீங்கள் தேட விரும்பும் பாடலின் படம் பெயர் அல்லது வெறும் பாடலின் பெயர் பிறகு 320kbps கடைசியில் vbr அவ்வளவுதான்.

சரி, இப்பொழுது அந்த 320kbps என்றால் என்ன? என்பதை பார்க்கலாம்:-
Kbps என்றால் kilo bits per second என்று அர்த்தம். அதாவது ஒரு பாட்டை தரம் பிரிப்பது ஆகும். உதாரணத்திற்கு பெரும்பாலான பாட்டுக்கள் 128kbps அளவில் இருக்கும். அவை யாவும் 4 அல்லது 5mb கணக்கில் காணப்படும். இதுவே அது 320kbps அளவில் இருந்தால் அது எட்டு முதல் பதினைந்து mb-யில் காணப்படும்.ஆனால் ஒரு பாட்டுக்கு இவ்வளவு இடமா? என்ற கேள்வி உங்களிடத்தில் எழும் அதனால் தான் நான் உங்களை கூகிளில் vbr (various bit rate) என்று தேடச்சொன்னேன்! இவ்வாறு தேடுவதால் ஒரு பாடல் ஆறு mb-யில் முடிவடைந்துவிடும்.

மேலும் நீங்கள் கீழ்கண்ட தளங்களில் கூட தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்:-
Www.djluv.in (ஹிந்தி பாடலுக்கு)
www.tamilwire.com (தமிழ் பாடலுக்கு)
Www.techsatish.com (தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி பாடலுக்கு)
Www.aimini.net (ஆங்கில பாடலுக்கு)

ப்ளாகரில் நேரடி தரவிறக்கம் செய்வது எப்படி? மற்றும் ஓர் இலவச ப்ளாகர் பலகை:-

Direct download in blogger!


 
அது என்ன நேரடி தரவிறக்கம்?
நாம் எப்பொழுதும் ஒரு கோப்பை அல்லது ஒரு பாட்டை  மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள box.net,Zshare என பல தளங்களில் சென்று நாம்  பகிர விரும்பும் கோப்புகளை மேலேற்றி பிறகு அதன் தரவிறக்க முகவரியை சேகரித்து அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்வோம். பிறகு அந்த கோப்பினை ஒருவர் தரவிறக்கம் செய்ய அந்த தளத்திற்கு சென்று முப்பது அல்லது அறுவது நிமிடங்கள் வரை காத்திருந்து தரவிறக்கம் செய்ய வேண்டும். அதனால் வாசகர்கள் தரவிறக்கம் செய்யவே சோம்பேறித்தனம் படுவார்கள். இதுவே அந்த கோப்பு ஒரே சொடுக்கில் உங்களது வலைப்பூவில் இருந்துக்கொண்டே தரவிறக்கம் செய்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். அதற்காகத்தான் இந்த பதிவு.

முதல் படி :-  இதற்கு நீங்கள்  ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு அதனை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும்.
                                                தரவிறக்கம் செய்ய:- https://www.dropbox.com/


இரெண்டாம் படி :-  அவ்வாறு நிறுவும் போது ஒரு கணக்கை உருவாக்குமாறு கேட்கும். நீங்களும் அதற்கு சரி என்று சொல்லி உருவாக்க வேண்டும்.

விளக்கம்:- அட! என்னடா இவன் இதை உருவாக்கணும் இதை தரவிறக்கம் செய்யணும் என்று தொல்லைக்  கொடுக்கிறான் என்று நீங்கள் மனதில் திட்டுவது எனக்கு கேட்கிறது. அதனால் நான் விசயத்திற்கு வருகிறேன்.
இந்த மென்பொருள் உங்களுக்கு மிக மிக பயன்படும். ஏன் என்றால் இதில் நீங்கள் பகிர விரும்பும் கோப்பையை உங்களது கணினியின் மூலமாக இணையத்திற்கு மேலேற்றலாம். இதற்கு நீங்கள் அந்த தளத்திற்கு தனியே சென்று மேலேற்ற அவசியம் இல்லை மற்றும் இது 2GB வரை இடம் அளிக்கிறது அதுவும் நேரடி தரவிறக்க முகவரியோடு (புரியவில்லை என்றால் படிப்பத்தை தொடரவும் அப்பொழுதான் புரியும்).

மூன்றாம் படி :-  கணக்கை உருவாக்கி அந்த மென்பொருள்  முழுவதுமாக நிறுவிய பிறகு நீங்கள் பகிர விரும்பும் கோப்பை சேகரிக்கவும். உங்கள் கணினியின் முகப்பில் உள்ள Dropbox குறுக்கு வழி குறும்படத்தை அழுத்தவும்.பிறகு நீங்கள் சேகரித்த கோப்பையை Public என்ற கோப்பில் ஒட்டவும். இப்பொழுது நீங்கள் பகிர விரும்பும் கோப்பை உங்களது கணினியில் இருந்துக் கொண்டே இணையத்திற்கு மேலேற்றி விட்டீர்கள்.

நான்காம் படி :-  இதன் பிறகு உங்கள் உலாவியில் (browser) சென்று https://www.dropbox.com/  
 என்று தட்டவும். அங்கு உங்கள் கணக்கை திறந்து உள்ளே செல்லவும். நீங்கள் பகிர்ந்த கோப்பு public என்ற கோப்பில் இருக்கும்.ஆதலால் File-->Public என்ற கோப்பை அழுத்தவும். இப்பொழுது நீங்கள் பகிர்ந்த கோப்பின் நேரடி முகவரியை சேகரித்துக் கொள்ளுங்கள்.

ஐந்தாம் படி :-  சேகரித்த கோப்பை உங்களது வலைப்பூவில் ஒரு முகவரியாக வெளியிடவும். வாசகர்கள் அதனை தரவிறக்கம் செய்ய வெறும் அந்த முகவரியை மட்டும் அழுத்தினால் போதும்! (எப்பூடி! :)

ஓர் இலவச ப்ளாகர் பலகை :-