நிரல்பலகைகளை(widgets) வலைப்பூவின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் காண வைப்பது எப்படி?

நாம் ஒரு நிரல்பலகையை(widget) வலைப்பூவில் நிறுவினால் அது வலைப்பூவின் எல்லா பக்கங்களிலும் காட்சி அளிக்கும்.ஆனால் சில நிரல்பலகைகள் இந்தந்த பக்கங்களில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நம் மனதில் தோன்றும்.அதற்காகத்தான் இந்த சிறிய பதிவை எழுதுகிறேன்:)
இதற்கு முதலில் நீங்கள் எந்த நிரல்பலகையை குறிப்பிட்ட/முதற் பக்கத்தில் மட்டும் காட்ட விரும்புகிறீர்களோ அந்த நிரல் பலகைக்கு ஒரு பெயரை சூட்டுங்கள்(ஒரே பெயரில் பல நிரல் பலகைகளை வைக்காதீர்).
பின்பு "LAYOUT--->EDIT HTML" செல்லவும்.அங்கு சென்றவுடன் "Expand Widget Templates" என்றதை திருத்தவும்/சொடுக்கவும்.இப்பொழுது நான் சொன்னவாறு நீங்கள் நிரல்பலகைக்கு சூட்டிய பெயரை தேடவும்(Ctrl + F).
நீங்கள் தேடியது கீழ் கண்டவாறு இருக்கும்:-

<b:widget id='HTML3' locked='false' title='நிரல் பலகையின் பெயர்' type='HTML'>
<b:includable id='main'>

<b:if cond='data:title != ""'>

<data:title/>

</b:if>

<data:content/>

<b:include name='quickedit'/>
</b:includable>
</b:widget>

இதனை நாம் இப்பொழுது சிறிது திருத்தம் செய்ய வேண்டும கீழே இருப்பது போன்று.
இந்த திருத்தம் நிரல்பலகையை முதற்பக்கம் மட்டும் காண வைக்க:-
<b:widget id='HTML3' locked='false' title='Widget Title' type='HTML'>
<b:includable id='main'>
<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>

<b:if cond='data:title != ""'>

<data:title/>

</b:if>

<data:content/>

<b:include name='quickedit'/>
</b:if>
</b:includable>
</b:widget>
நான் சிகப்பு மையினால் குறிப்பிட்டதை மட்டும் சேர்க்க வேண்டும்!

இந்த திருத்தம் குறிப்பிட் பக்கத்தில் மட்டும் காண வைத்தல்:-
<b:widget id='HTML3' locked='false' title='Widget Title' type='HTML'>
<b:includable id='main'>
<b:if cond='data:blog.url == "SPECIFIC_BLOG_POST_URL"'>

<b:if cond='data:title != ""'>

<data:title/>

</b:if>

<data:content/>

<b:include name='quickedit'/>
</b:if>
</b:includable>
</b:widget>

" SPECIFIC_BLOG_POST_URL" என்ற இடத்தில் நிரல் பலகையை காட்ட விரும்பும் பக்கத்தின் முகவரியைக் குறிப்பிடவும்.

இந்த திருத்தம் முதற் பக்கத்தைத் தவிர மற்ற பக்கத்தில் காண வைத்தல்:-

<b:widget id='HTML3' locked='false' title='Widget Title' type='HTML'>
<b:includable id='main'>
<b:if cond='data:blog.pageType == "item"'>

<b:if cond='data:title != ""'>

<data:title/>

</b:if>

<data:content/>

<b:include name='quickedit'/>
</b:if>
</b:includable>
</b:widget>

இந்த திருத்தம் நிரல் பலகையை குறிப்பிட்ட பக்கத்தில் மட்டும் மறைத்து மற்ற பக்கத்தில் காண வைத்தல்:-

<b:widget id='HTML3' locked='false' title='Widget Title' type='HTML'>
<b:includable id='main'>
<b:if cond='data:blog.url != "SPECIFIC_BLOG_POST_URL"'>

<b:if cond='data:title != ""'>

<data:title/>

</b:if>

<data:content/>

<b:include name='quickedit'/>
</b:if>
</b:includable>
</b:widget>
இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்!

நான் இப்பொழுது ஒரு சுதந்திரப் பறவை!

ஹே!ஹே! என்  பொதுத் தேர்வுகள் அனைத்தும் முடிந்தது.இப்பொழுது என் வேலையெல்லாம் சாப்பிட்டு தூங்குவது மட்டுமே.ஆனால் எனக்கு என்ன மதிப்பெண்கள் வருமோ! என்று பயமாக இருக்கின்றது.எனவே அனைவரும் நான் நல்ல மதிப்பெண்களை வாங்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்:)

ஒரு இலவச இணைய வடியமைப்பு மென்பொருள்-amaya

இந்த அமையா(amaya) மூலம் இணையப் பக்கங்களை எளிதாக வடிவமைக்கலாம். css வடிவாக்குதலையும் இந்த மென்பொருள் செய்யும்.HTML மற்றும் PHP தெரியாதவர்கள் கூட இந்த மென்பொருளை வைத்து எளிமையாக வலைப் பக்கங்களை வடிவமைக்கலாம்.

இதனைப்பற்றி மேலும் விவரங்கள் அறிய:- http://www.thesitewizard.com/reviews/amaya.shtml

வலைத்தள  முகவரி:- http://www.w3.org/Amaya/User/BinDist.html

தரவிறக்கம் செய்ய: http://www.w3.org/Amaya/Distribution/amaya-WinXP-11.3.1.exe

இணைய இயக்குத்தளங்கள்(online os) ஓர் பார்வை

இணைய  இயக்குத்தளத்தின் மூலம் ஒரு சொந்த இயக்குத்தளத்தை இணையத்தில் உருவாக்கலாம்.இதில் நமக்கு தேவையான அனைத்து மென்பொருள்களும் ஒருங்கிணைந்து உள்ளன.இது நாம் சாதாரணமாக பயன்படுத்தும் இயக்குத்தளம்(os) போன்றது.கீழ்கண்ட இணைய முகவரிகளின் வாயிலாக உங்கள் இயகுத்தளங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

Eyeos:-

g.ho.st

இந்த இரண்டு இயக்குத்தளங்களும் மேகக் கணியத் தொழில்நுட்பம்(cloud computing) வழியாக செயல்படுகின்றது.

நெருப்பு நரிக்கு(firefox) தேவையான 15 கூட்டுறுப்பு(addon)

நெருப்பு நரியில்(firefox) ஏராளமான கூட்டு உருபுகள்(addon) இருந்தாலும் அதில் நமக்கு தேவையானவற்றை கண்டறிவது சிறிது கடினமே!இதில் இன்னொரு  சுவாரசியமான செய்தி என்னவென்றால்  நெருப்பு நரி தனது கைப்பேசி உலாவியை(mobile browser) அறிமுகம் செய்ய போகிறது.அதனை பற்றிய விரிவான கட்டுரையை இங்கு படிக்கவும் http://news.bbc.co.uk/2/hi/technology/8425906.stm.இப்பொழுது நாம் நெருப்பு நரியின் 15 கூட்டுறுபுக்களை காண்போம்........:)

No Script:-
இந்த கூட்டுறுப்பு  ஒரு வலைத்தளத்தில் இருக்கும் ஸ்க்ரிப்டை(script) மறித்து உங்கள் தேடல்களை வேகமாகவும்,எளிதாகவும் ஆக்க உதவும்.

Ad-block:-
நமக்கு அதிகமாக தொல்லை கொடுப்பது இந்த விளம்பரங்கள் தான் அதனை இந்த கூட்டுறுப்பு மறித்து உங்கள் தொல்லையை நீக்கி விடும்!

Cooliris:-
படம்(image),ஒளித்தோற்றம்(video) போன்றவற்றை தேட இது மிகவும் உதவும்!மேலும் இதன் 3d மிக அருமையாக இருக்கின்றது.

IE-tab:-
இன்னும் சில பல வலைத்தளங்கள் internet explorer உலாவியைக் கொண்டுதான் பார்க்க  முடிகிறது.அதற்காக நாம் ஒரு தனி சன்னலை துறந்து IE மூலம் தேடுவோம்.இது போன்றவற்றை தடுக்க நீங்கள் வெறும் open this link in IE tab   என்று சொடுக்கினால் போதுமானது நெருப்பு நரி தானாகவே தனது உலாவியில் துறந்து விடும்.

scribe fire:-
இது நம்மை போன்ற ஆட்களுக்கு மிகவும் உதவும்.இதன் மூலம் நாம் நெருப்பு நரியில் இருந்து  கொண்டே  நம் வலைப்பூவிற்கு பதிவுகளை இடலாம்.இதற்காக நாம் ப்ளாகர் கணக்கிற்கு போக வேண்டிய அவசியம் இல்லை!

Video Download Helper:-
இது ஒரு அருமையான கூட்டுறுப்பு.இது you tube,google videos போன்ற ஒளித்தோற்றங்களை நேரடியாக தரவிறக்கம் செய்ய உதவும் மற்றும் படங்களையும்(image) தரவிறக்கம் செய்ய உதவும்.

Page Title Eraser:-
நீங்கள் தேடுவதை மற்றவர்கள் பார்க்கக்கூடாது என்று விரும்புவர்கள் இந்த கூட்டுருபை பயன் படுத்த வேண்டும்.இது நாடாக்களில்(tab) உள்ள தலைப்பினை அழித்து விடும்(படத்தில் காணப்படுவது போல).இதனால் மற்றவர்கள் நீங்கள் என்ன தேடிக்கொண்டு இருக்கீறீர் என மண்டையை பிய்த்துக் கொள்வார்கள்!

Skip Screen:-
இனிமேல் நாம் காத்திருந்தது போதும்! ஏனென்றால் இது rapidshare,mediafire,megaupload என அனைத்திலும் உள்ள காத்திருப்பு நேரத்தை தள்ளி நமது தரவிறக்கத்தை எளிதாக்க உதவும்!(இதனை கேட்கவே  உங்களுக்கு இனிமையாக இருக்கும்!)

Colo Unread Tabs:-
இந்த கூட்டுறுப்பு நீங்கள் படிக்காத நாடாக்களை(tab) சிகப்பு  மையினால் காட்டும்.

Click Cutter Auto Search:-
நீங்கள் வெறும் ஒரு சொல்லை கவன்யீர்புச்(highlight) செய்தால்  போதுமானது அது தானாகவே நகல் எடுத்து(auto copy) கூகுளில் தேட வேண்டுமா அல்லது  யாகூவை தேட வேண்டுமா என உங்களிடம் கேட்கும்! இதன்மூலம் நீங்கள் தனியாக கூகிள் அல்லது யாஹூவில் சென்று தேட அவசியம் இல்லை.

Download Statusbar:-
நாம் தரவிறக்கம் செய்யும் அனைத்தயும் நெருப்பு நரியில் உள்ள நிலைமைப் பட்டையில்(status bar) தரவிறக்கம் நிலையை அழகாக காட்டும் இதற்காக தனி சன்னலில் தரவிறக்கம் செய்து நேரத்தை வீணாக்காதீர்!

தமிழ் விசைப்பலகை:-
இந்த கூட்டுறுப்பு மூலம் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சலாம்.
Colour Tabs:-
இது ஒவ்வொரு  நாடாக்களையும் வண்ணமயமாக காண்பிக்கும்

Click Cutter Autocopy:-
நீங்கள் நகல் எடுக்க விரும்பும் சொல்லை வெறும் கவன்யீர்புச்(highlight) செய்து வலது பக்கச் சொடுக்கியை(right click) சொடுக்கினால் போதுமானது அதுவே தானாக நகல்  எடுத்து விடும்.

Tab Wheel Scrool:-
இது நீங்கள் அவிழ்த்துவிட்ட நாடாக்களை(tab)  சொடுக்கியின் உருட்டியின் மூலம்  உருட்டினால் நாடாக்களை நீங்கள் திருப்பலாம்.

மேலே  உள்ள அனைத்து கூட்டுறுபுக்களும்  உங்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.இதனைப்பற்றிய ஏதேனும் சந்தேகம் இருந்தால் கிழே உள்ள கருத்துரைப்பெட்டியில் உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள்!