இந்த அமையா(amaya) மூலம் இணையப் பக்கங்களை எளிதாக வடிவமைக்கலாம். css வடிவாக்குதலையும் இந்த மென்பொருள் செய்யும்.HTML மற்றும் PHP தெரியாதவர்கள் கூட இந்த மென்பொருளை வைத்து எளிமையாக வலைப் பக்கங்களை வடிவமைக்கலாம்.
இணைய இயக்குத்தளத்தின் மூலம் ஒரு சொந்த இயக்குத்தளத்தை இணையத்தில் உருவாக்கலாம்.இதில் நமக்கு தேவையான அனைத்து மென்பொருள்களும் ஒருங்கிணைந்து உள்ளன.இது நாம் சாதாரணமாக பயன்படுத்தும் இயக்குத்தளம்(os) போன்றது.கீழ்கண்ட இணைய முகவரிகளின் வாயிலாக உங்கள் இயகுத்தளங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
நெருப்பு நரியில்(firefox) ஏராளமான கூட்டு உருபுகள்(addon) இருந்தாலும் அதில் நமக்கு தேவையானவற்றை கண்டறிவது சிறிது கடினமே!இதில் இன்னொரு சுவாரசியமான செய்தி என்னவென்றால் நெருப்பு நரி தனது கைப்பேசி உலாவியை(mobile browser) அறிமுகம் செய்ய போகிறது.அதனை பற்றிய விரிவான கட்டுரையை இங்கு படிக்கவும் http://news.bbc.co.uk/2/hi/technology/8425906.stm.இப்பொழுது நாம் நெருப்பு நரியின் 15 கூட்டுறுபுக்களை காண்போம்........:)
No Script:- இந்த கூட்டுறுப்பு ஒரு வலைத்தளத்தில் இருக்கும் ஸ்க்ரிப்டை(script) மறித்து உங்கள் தேடல்களை வேகமாகவும்,எளிதாகவும் ஆக்க உதவும்.
Ad-block:- நமக்கு அதிகமாக தொல்லை கொடுப்பது இந்த விளம்பரங்கள் தான் அதனை இந்த கூட்டுறுப்பு மறித்து உங்கள் தொல்லையை நீக்கி விடும்!
Cooliris:- படம்(image),ஒளித்தோற்றம்(video) போன்றவற்றை தேட இது மிகவும் உதவும்!மேலும் இதன் 3d மிக அருமையாக இருக்கின்றது.
IE-tab:- இன்னும் சில பல வலைத்தளங்கள் internet explorer உலாவியைக் கொண்டுதான் பார்க்க முடிகிறது.அதற்காக நாம் ஒரு தனி சன்னலை துறந்து IE மூலம் தேடுவோம்.இது போன்றவற்றை தடுக்க நீங்கள் வெறும் open this link in IE tab என்று சொடுக்கினால் போதுமானது நெருப்பு நரி தானாகவே தனது உலாவியில் துறந்து விடும்.
scribe fire:- இது நம்மை போன்ற ஆட்களுக்கு மிகவும் உதவும்.இதன் மூலம் நாம் நெருப்பு நரியில் இருந்து கொண்டே நம் வலைப்பூவிற்கு பதிவுகளை இடலாம்.இதற்காக நாம் ப்ளாகர் கணக்கிற்கு போக வேண்டிய அவசியம் இல்லை!
Video Download Helper:- இது ஒரு அருமையான கூட்டுறுப்பு.இது you tube,google videos போன்ற ஒளித்தோற்றங்களை நேரடியாக தரவிறக்கம் செய்ய உதவும் மற்றும் படங்களையும்(image) தரவிறக்கம் செய்ய உதவும்.
Page Title Eraser:- நீங்கள் தேடுவதை மற்றவர்கள் பார்க்கக்கூடாது என்று விரும்புவர்கள் இந்த கூட்டுருபை பயன் படுத்த வேண்டும்.இது நாடாக்களில்(tab) உள்ள தலைப்பினை அழித்து விடும்(படத்தில் காணப்படுவது போல).இதனால் மற்றவர்கள் நீங்கள் என்ன தேடிக்கொண்டு இருக்கீறீர் என மண்டையை பிய்த்துக் கொள்வார்கள்!
Skip Screen:- இனிமேல் நாம் காத்திருந்தது போதும்! ஏனென்றால் இது rapidshare,mediafire,megaupload என அனைத்திலும் உள்ள காத்திருப்பு நேரத்தை தள்ளி நமது தரவிறக்கத்தை எளிதாக்க உதவும்!(இதனை கேட்கவே உங்களுக்கு இனிமையாக இருக்கும்!)
Colo Unread Tabs:- இந்த கூட்டுறுப்பு நீங்கள் படிக்காத நாடாக்களை(tab) சிகப்பு மையினால் காட்டும்.
Click Cutter Auto Search:- நீங்கள் வெறும் ஒரு சொல்லை கவன்யீர்புச்(highlight) செய்தால் போதுமானது அது தானாகவே நகல் எடுத்து(auto copy) கூகுளில் தேட வேண்டுமா அல்லது யாகூவை தேட வேண்டுமா என உங்களிடம் கேட்கும்! இதன்மூலம் நீங்கள் தனியாக கூகிள் அல்லது யாஹூவில் சென்று தேட அவசியம் இல்லை.
Download Statusbar:- நாம் தரவிறக்கம் செய்யும் அனைத்தயும் நெருப்பு நரியில் உள்ள நிலைமைப் பட்டையில்(status bar) தரவிறக்கம் நிலையை அழகாக காட்டும் இதற்காக தனி சன்னலில் தரவிறக்கம் செய்து நேரத்தை வீணாக்காதீர்!
தமிழ் விசைப்பலகை:- இந்தகூட்டுறுப்பு மூலம் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சலாம்.
Colour Tabs:- இது ஒவ்வொரு நாடாக்களையும் வண்ணமயமாக காண்பிக்கும்
Click Cutter Autocopy:- நீங்கள் நகல் எடுக்க விரும்பும் சொல்லை வெறும் கவன்யீர்புச்(highlight) செய்து வலது பக்கச் சொடுக்கியை(right click) சொடுக்கினால் போதுமானது அதுவே தானாக நகல் எடுத்து விடும்.
Tab Wheel Scrool:- இது நீங்கள் அவிழ்த்துவிட்ட நாடாக்களை(tab) சொடுக்கியின் உருட்டியின் மூலம் உருட்டினால் நாடாக்களை நீங்கள் திருப்பலாம்.
மேலே உள்ள அனைத்து கூட்டுறுபுக்களும் உங்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.இதனைப்பற்றிய ஏதேனும் சந்தேகம் இருந்தால் கிழே உள்ள கருத்துரைப்பெட்டியில் உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள்!
இது ப்ளாகர் அடுத்ததாக செய்ய இருக்கும் புதிய தொழில்நுட்பத்தோடும்,சகல வசதிகளோடும் காணப்படும் ஒரு புதிய ப்ளாகர் எனவும் கூறலாம்!இதற்கு நீங்கள் draft.blogger.com என்னும் முகவரிக்கு செல்ல வேண்டும்.அந்த பக்கத்தை நீங்கள் ப்ளாகரின் இயல்பு நிலை டஷ்போர்டாகவும்(default dashboard) மாற்றிக்கொள்ளலாம்.
இதனின் சிறப்பு அம்சங்கள்:-
நமக்கு அதிகம் தேவைப்படும் மேலும் படிக்க(read more),நட்சத்திர தரமிடல்(star rating),பதிவுகளுக்கு கிழே கருத்துரைப் பெட்டியை சேர்க்க என அனைத்து வசதிகளுடன் இது காணப்படுகிறது.
இப்பொழுது மேலும் படிக்க வசதியை எப்படி சேர்ப்பது என்று பார்ப்போம்...
நான் அங்கு கூறியவாறு draft.blogger.com என்னும் முகவரியை அணுகவும்.பிறகு அங்கு சென்றவுடன் new post என்பதை சொடுக்கவும்.முதலில் முகப்பில் காட்ட விரும்புவதை மட்டும் எழுதவும்.அதனை எழுதி முடித்தவுடன் insert jump break என்னும் பொத்தானை(button) அழுத்துங்கள் இதன் மூலம் தான் நீங்கள் மேலும் படிக்க வசதியை பெற முடியும்.இதற்கு பிறகு நீங்கள் மறைக்க விரும்புவதை எழுதவும்!
இப்பொழுது உங்களுக்குள் ஒரு கேள்வி எழும் அதாவது "சின்ன பையன் இதை எல்லாம் சொல்லிட்டான் ஆனா இந்த read more என்கிற ஆங்கில வார்த்தையை தமிழ் வார்த்தையாக மாத்துற முறைய சொல்ல மறந்துட்டானே "என்றெல்லாம் கேள்விகள் எழும் அதற்கும் விடை இருக்கின்றது கவலைப்படாதீர்கள்!
அதற்கு முதலில் layout-->page elements-ற்குசெல்லவும்.அங்கு blog post என்ற இடத்தில் edit என்பதினை அழுத்தவும்.அழுத்தியவுடன் இதோ கிழே உள்ள படத்தை போல தெரியும்.அதில் உள்ள read more என்னும் எழுத்தை தமிழில் மாற்றிக்கொள்ளுங்கள்.
"இருங்க! இருங்க! உடனே மூடி விடாதிங்க அதற்கு கிழே தான் நட்சத்திர தரமிடல் நிரல்பலகை (star rating widget) இருக்கின்றது"இதனை நீங்கள் உங்கள் பதிவுகளில் சேர்ப்பதன் மூலம் வாசகர்கள் உங்களது பதிவுகளை மதிப்பிடுவார்கள்.
இப்பொழுது எனக்கு விசைப்பலகையை தட்டி! தட்டி! கை வலிக்கிறது அதனால் இதனின் பல வசதிகளை அடுத்த பதிவுகளில் காண்போம்:)